என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, செக் வீராங்கனை மேரி பசவுஸ்கோவாவை சந்திக்கிறார்.

    • பூபேந்திரசிங் ஜாலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • மொத்தமாக ரூ.175 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்திய வீரர் சுப்மன் கில்-க்கு குஜராத் சி.ஐ.டி. குற்றப்பிரிவு சார்பில் விசாரணைக்கு ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 450 கோடி ஊழல் தொடர்பாக இந்திய வீரர் சுப்மன் கில் மட்டுமின்றி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சாய் சுதர்சன், ராகுல் தேவாடியா மற்றும் மோகித் சர்மா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அகமதாபாத் மிரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போன்சி திட்டங்களின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் பூபேந்திரசிங் ஜாலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிரிக்கெட் வீரர்கள் முதலீடுகளை திருப்பித் தர தவறிவிட்டதை ஜாலா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாலா, குஜராத் மாநிலத்தின் தலோத், ஹிம்மத்நகர் மற்றும் வதோதரா உள்பட பல மாவட்டங்களில் அலுவலகங்களை திறந்து, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க முகவர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஐ.டி.எஃப்.சி. வங்கிகள் மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி வரையிலான நிதி பரிவர்த்தனைகள் மூலம், மொத்தமாக ரூ.175 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    2024 ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கில், இத்திட்டத்தில் ரூ.1.95 கோடி முதலீடு செய்ததாகவும், மோஹித் ஷர்மா, டெவாடியா மற்றும் சுதர்சன் ஆகியோர் சிறிய தொகைகளை முதலீடு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுவரை சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஜாலா 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. ஜாலா ஒரு அதிகாரப்பூர்வமுற்ற கணக்கு புத்தகத்தை பராமரித்து வந்ததாகவும், அதை சி.ஐ.டி. குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

    • 5 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது.
    • இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் நாளைய டெஸ்டில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பும்ரா மற்றும் பயிற்சியாளர் கம்பீருடன் இணைந்து ரோகித் சர்மா சிட்னி மைதானத்தை பார்வையிடும் வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரோகித்தும் கில்லும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதனால் நாளைய போட்டியில் ரோகித் விளையாடுவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    • தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
    • தீபக் சஹாரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்றது.

    இதில், சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் தீபக் சஹார் இருக்கும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • ரோகித் சர்மா ஓய்வு குறித்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஒருவேளை விளையாடினால் அவர் வெற்றியோடு விடைபெற வேண்டும்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு குறித்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்தால் நான் அதிர்ச்சி அடைய மாட்டேன் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "அவர் தனது கரியர் பற்றி முடிவு எடுப்பார், ஆனால் நான் அதற்கு அதிர்ச்சி அடைய மாட்டேன். அவர் இளமையாக போவதில்லை."

    "அவரை தவிர ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். சுப்மன் கில் இருக்கிறார். அவரது சராசரி கடந்த ஆண்டில் மட்டும் 40 ஆக இருக்கிறது, ஆனால் அவர் விளையாடவில்லை. அது உங்கள் மூளையை அரித்துக் கொண்டே இருக்கும்."

    "இதனால் அவர் அந்த (ஓய்வு) முடிவை எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். எதுவாயினும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தாலோ அல்லது இதற்கு பின் தகுதி பெற முடியும் என்றாலோ இது முற்றிலும் வேறான விஷயம். இதுதவிர நான் நினைப்பது எல்லாம், இது ஒரு வாய்ப்பு மட்டும் தான் - ஒருவேளை அவர் விளையாடினால் அவர் வெற்றியோடு விடைபெற வேண்டும்," என்று தெரிவித்தார். 

    • பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டி வருகிற 7-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது.
    • சிட்னியில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 46 ஆண்டுகள் ஆகியுள்ளன.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 46 ஆண்டுகள் ஆன நிலையில், நாளை தொடங்கும் 5-வது டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடைசியாக 1978-ல் நடந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தது. அதற்குப் பிறகு நடந்த 12 போட்டிகளில் 5-ல் இந்தியா தோல்வி அடைய 7 போட்டிகள் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும் (கடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது). அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பிலும் நீடிக்கலாம்.

    • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் நாளைய டெஸ்டில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
    • நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை 218 ரன்கள் அடித்தும் 7 ரன்களில் ஆறுதல் வெற்றியை பெற்றது.

    46 பந்தில் 101 ரன்கள் குவித்த குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து ஜேக்கப் டஃபி தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அணியாக இலங்கை சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சதத்தை இலங்கை அணியின் குசல் பெர்ரோ பதிவு செய்துள்ளார்.

    • பல வீரர்கள் இது போல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள்.
    • ஒரு அணியை வழிநடத்தும் போது கூடுதல் வாய்ப்பு கேப்டனுக்கு வழங்கப்படும்.

    மும்பை:

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் செயல்பாடு மிகவும் மோசமான வகையில் இருக்கிறது.

    ஆஸ்திரேலியா தொடரில் மொத்தமாகவே அவர் 5 இன்னிங்ஸ் விளையாடி 31 ரன்கள் தான் எடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரோகித் சர்மா மூன்று தொடர்களிலும் சேர்த்து 164 ரன்கள் அடித்திருக்கிறார். இது அவருடைய பேட்டிங் சராசரி 10 என்ற அளவில் இருக்கின்றது.

    மேலும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பல வீரர்கள் இதுபோல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் கூறியுள்ளார்.

    இது குறித்த அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் கடைசி பத்து இன்னிங்ஸ் டெஸ்ட் ஸ்கோரை பார்த்தால் பெரிதாக இல்லை. பல வீரர்கள் இது போல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள். மற்ற சிலருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

    எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை ரோகித் சர்மாவிடமே விட்டுவிட வேண்டும்.

    ஒரு கேப்டனாக அந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார். ஒரு அணியை வழிநடத்தும் போது கூடுதல் வாய்ப்பு கேப்டனுக்கு வழங்கப்படும். நிச்சயமாக ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஸ்கோர்கள் பெரிய அளவில் இல்லை. எனினும் சிட்னி டெஸ்ட் போட்டி அவருக்கு கடைசியாக இருக்காது என்று நினைக்கின்றேன்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து ரோகித் சர்மா என்ன முடிவை எடுத்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேலை கேப்டன் பதவியில் இருந்து போவாரா என்றும் சொல்ல முடியாது.

    என்று கிளார்க் கூறியுள்ளார்.

    • தமிழக வீரருமான குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி செஸ் வீரரும் தமிழக வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரர்- வீராங்கனைகளின் பெயர்கள்:-

    1. ஜோதி -யர்ராஜி தடகளம்

    2. அன்னு -ராணி தடகளம்

    3. நிது -குத்துச்சண்டை

    4. சவீட்டி -குத்துச்சண்டை

    5. வந்திகா அகர்வால் -செஸ்

    6. சலிமா டெட் -ஹாக்கி

    7. அபிஷேக் -ஹாக்கி

    8. சஞ்சய் -ஹாக்கி

    9. ஜர்மன்ப்ரீத் சிங் -ஹாக்கி

    10. சுக்ஜீத் சிங் -ஹாக்கி

    11. ராகேஷ் குமார் பாரா -வில்வித்தை

    12. ப்ரீத்தி பால் பாரா -தடகளம்

    13. ஜீவன்ஜி தீப்தி -பாரா தடகளம்

    14. அஜீத் சிங் -பாரா தடகளம்

    15. சச்சின் சர்ஜேராவ் கிலாரி -பாரா தடகளம்

    16. தரம்பிர் -பாரா தடகளம்

    17. பிரணவ் சூர்மா -பாரா தடகளம்

    18. எச் ஹோகடோ செமா -பாரா தடகளம்

    19. சிம்ரன் -பாரா தடகளம்

    20. நவ்தீப் -பாரா தடகளம்

    21. நிதேஷ் குமார் -பாரா பேட்மிண்டன்

    22. துளசிமதி முருகேசன் -பாரா பேட்மிண்டன்

    23. நித்யா ஸ்ரீ சுமதி சிவன் -பாரா பேட்மிண்டன்

    24. மனிஷா ராமதாஸ் -பாரா பேட்மிண்டன்

    25. கபில் பர்மர் -பாரா ஜூடோ

    26. மோனா அகர்வால் -பாரா ஷூட்டிங்

    27. ரூபினா பிரான்சிஸ் -பாரா படப்பிடிப்பு

    28. ஸ்வப்னில் சுரேஷ் குசலே -படப்பிடிப்பு

    29. சரப்ஜோத் சிங் -துப்பாக்கி சூடு

    30. அபய் சிங் -ஸ்குவாஷ்

    31. சஜன் பிரகாஷ் -நீச்சல்

    32. அமன் -மல்யுத்தம்

    அர்ஜுனா வாழ்நாள் சாதனையாளர்கள் விருதில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். தடகளத்தில் சுச்சா சிங்கும் பாரா நீச்சல் போட்டியில் இடம் பெற்ற முரளிகாந்த் ராஜாராம் பெட்கரும் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பட்டியலில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பயிற்சியாளரின் பெயர்

    1. சுபாஷ் ராணா -பாரா ஷூட்டிங்

    2. தீபாலி தேஷ்பாண்டே -துப்பாக்கி சூடு

    3. சந்தீப் சங்வான் -ஹாக்கி

    வாழ்நாள் விருது:-

    பயிற்சியாளரின் பெயர்

    1. எஸ் முரளிதரன் - பூப்பந்து

    2. அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ - கால்பந்து

    • 4-வது டெஸ்ட் போது விராட் கோலியும் கான்ஸ்டாஸ்-ம் மோதிக் கொண்டனர்.
    • ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த போது கான்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டர்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சிட்னி சென்றடைந்தது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    சிட்னியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள் மரியாதை நிமித்தமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அப்போது 4-வது டெஸ்ட்டின் போது மைதானத்தில் மோதி கொண்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டர். 

    மேலும் விராட் கோலியுடன் சாம் கான்ஸ்டாஸ்-ன் சகோதர்கர் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விராட் கோலியையடுத்து பும்ராவிடமும் சாம் கான்ஸ்டாஸ்-ன் சகோதர்கர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


    இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ×