என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரோகித் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்தார்.
    • தற்போது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பால் ரோகித், பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.

    8 அணிகள் பங்கேற்கும் இதில் பங்கேற்கின்றனர். இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்க பிசிசிஐ ஆலோசனை நடந்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரோகித் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்தார். தற்போது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டஷிப்பால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் விளையாடவே இல்லை.

    அவர் டெஸ்ட்டிலும் ஓய்வு அறிவிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் பிசிசிஐ அடுத்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனை நியமிக்க ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
    • மூன்றாம் நடுவர் கொடுத்த அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி இன்னிங்சின் 66-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை லெக் சைடில் வைடராக வீச, அதனை அடிக்க முயன்ற வாஷிங்டன் சுந்தர் பேட்டை சுழற்றினார். ஆனால் பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது.

    பந்து வாஷிங்டன் சுந்தரின் கையுறை அருகில் இருந்து வந்ததால் விக்கெட் கீப்பார் அலெக்ஸ் கேரி கள நடுவரிடம் அவுட் என அப்பில் செய்தார். ஆனால் கள நடுவர் நாட் அவுட் என்று அறிவித்த நிலையில், கேப்டன் கம்மின்ஸ் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார்.

    மூன்றாம் நடுவரின் சோதனையில் பந்து வாஷிங்டன் சுந்தர் கையுறையை கடந்த பிறகே ஸ்னிக்கோ மீட்டரில் சில அதிர்வுகள் பதிவானது தெரிந்தது. இருப்பினும் மூன்றாம் நடுவர் பலமுறை சோதித்த பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனால் ஏமாற்றமடைந்த சுந்தர் களநடுவர்களிடம் சில வார்த்தைகளை கூறி பெவிலியனுக்கு திரும்பினார்.

    அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும் கள நடுவரிடம் கடந்த போட்டியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


    ஏனெனில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலும் இதே முறையில் தனது விக்கெட்டை இழந்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் ரசிகர்கள் இது குறித்து ஆஸ்திரேலிய அணி உள்பட நடுவர்களையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார்.
    • 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.

    103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நேற்று  [வியாழக்கிழமை] அவரது உயிர் பிரிந்தது.

    1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது. 

     

    இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

    அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

    கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
    • விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ் இந்த போட்டியில் பும்ராவிடம் வம்பிழுத்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

    இந்நிலையில் 4-வது டெஸ்ட்டில் விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ் இந்த போட்டியில் பும்ராவிடம் வம்பிழுத்தார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர் கொள்வதற்கு கவாஜா அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் பும்ரா நடுவரிடம் முறையிட்டார். 

    இதனை நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த பார்த்து கொண்டிருந்த கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். உடனே நடுவர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இதனையடுத்து கடைசி பந்தை வீசிய பும்ரா, கவாஜா விக்கெட்டை கைப்பற்றினர்.

    விக்கெட்டை வீழ்த்திய சந்தோஷத்தில் பும்ரா உடனே கான்ஸ்டாஸ் பக்கம் திரும்பி முறைத்தார். அவர் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களும் கான்ஸ்டாவை கிண்டலடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 40 ரன்களை அடித்தார்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இன்று துவங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்கம் முதலே இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 40 ரன்களை அடித்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது. இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட உஸ்மான் குவாஜா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    • இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
    • இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 40 ரன்களை அடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விலகியதை அடுத்து, ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார். அதன்படி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்கத்திலேயே இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுப்மன் கில் 64 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்தும், விராட் கோலி 69 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் சற்று நிலைத்து நின்று ஆடினார்.

    இவர் 98 பந்துகளில் 40 ரன்களை அடித்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 95 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். நிதிஷ் குமார் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார். வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.
    • இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.

    பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுப்மன் கில் சற்று நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் 64 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை அடித்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை சேர்த்து இருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கிய ஆட்டத்தில் விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பண்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 69 பந்துகளில் 17 ரன்களுக்கு நடையை கட்டினார்.

    எனினும், நிலைத்து ஆடிய ரிஷப் பண்ட் 98 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா பொறுமையாக ஆடி வருகிறார். கிட்டத்தட்ட 14 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த ஜடேஜா 26 ரன்களை சேர்த்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வரும் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் நேதன் லயன் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    • இந்திய அணி கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.
    • ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாமல் உள்ளது.

    ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவர் விலகியதை அடுத்து இந்திய அணி கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.

    இன்றைய போட்டியில் டாஸ் முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. இந்தப் பட்டியலில் அனைவரும் அதிசயிக்கும் வகையில், கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாமல் உள்ளது. இன்றைய போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா அணியின் ஆடும் 11-இல் இடம்பெற வாய்ப்பு இல்லை.

    எனினும், பி.சி.சி.ஐ. வெளியிட்ட 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா பெயர் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அணி வீரர்கள் பட்டியலிலேயே ரோகித் சர்மா பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

     


    முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ்-இன் போது பேசிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, "எங்கள் கேப்டன் ஓய்வு முடிவை எடுத்து இருப்பதன் மூலம் அவர் தலைமைப் பண்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவே அணியில் ஒற்றுமை இருப்பதை உணர்த்துகிறது. இங்கு சுயநலத்திற்கு இடமே இல்லை."

    "அணிக்கு நன்மை பயக்கும் விஷயங்களை செய்து வருகிறோம். இந்தப் போட்டியில் இரு மாற்றங்கள், ரோகித் ஓய்வு எடுக்கிறார், ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியதால், பிரசித் கிருஷ்ணா அணியில் இணைந்துள்ளார்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன் நடைபெற்ற பயிற்சியின் போது, ரோகித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் பேசிக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகின. மேலும், பயிற்சி முடிந்த பிறகு ரோகித் சர்மா மைதானத்தில் இருந்து வேறொரு வாயில் மூலம் வெளியேறி அணி பேருந்தில் ஏறியதாக கூறப்பட்டது. 

    • ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.
    • இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.

    பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுப்மன் கில் சற்று நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் 64 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை அடித்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை அடித்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் மற்றும் நேதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் துனீசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், அர்மேனிய வீராங்கனை எலீனா உடன் மோதினார் .

    இந்த ஆட்டத்தில் ஒன்ஸ் ஜபேர் 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதி சுற்றில் ஒன்ஸ் ஜபேர், ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவாவை சந்திக்கிறார்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • இந்திய அணியில் ரோகித்துக்கு பதிலாக சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

    இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

    கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

    ஏற்கனவே இந்தப் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
    • 2வது மற்றும் 4வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்ட் மற்றும் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் வென்று 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:

    ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, சாம் கோண்டாஸ், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

    இந்தியா: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா (கேப்டன்), சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    ×