என் மலர்
விளையாட்டு
- மிசோரம் அணி 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.
விஜயநகரம்:
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், மிசோரம் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மிசோரம் வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மிசோரம் 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தமிழகம் சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். விஜய் சங்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹாஜே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், தமிழகம் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெகதீசன் 46 ரன்னும், துஷார் ரஹாஜே 27 ரன்னும் எடுத்தனர்.
தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி சத்தீஸ்கர் அணியுடன் மோதுகிறது.
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்.
இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக கேட்ச் செய்த வீரர்களில் இரண்டாவது இடத்தை ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவின் லட்சுமண், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார்.
இவர்கள் மூவரும் தலா 36 கேட்ச் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 46 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான டிமித்ரோவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.
இதில் டிமித்ரோவ் முதல் செட்டை 6-1 என வென்றார். 2வது செட்டில் 2-1 என முன்னிலை வகித்தபோது தாம்சன் திடீரென விலகினார்.
இதையடுத்து, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் டிமித்ரோவ், செக் வீரரான ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.
- தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.;
- 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
கேப் டவுன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. மார்கிரம் 17 ரன்னும், வியான் முல்டர் 5 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிகல்டன் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து சதமடித்தார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த ரிகல்டன், பவுமா ஜோடி 235 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது, ரியான் ரிகல்டன் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் அரை சதம் கடந்தனர். எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டாகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை
இறுதியில், ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
- உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதையடுத்து, கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி 2-வது இடத்தில் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இன்று சந்தித்தார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோனேரு ஹம்பியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு விளையாட்டு சின்னம் மற்றும் ஆர்வமுள்ள வீரர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார். அவருடைய கூர்மையான அறிவும், அசைக்க முடியாத உறுதியும் தெரியும். அவர் இந்தியாவிற்கு மகத்தான பெருமையைக் கொண்டு வந்தது மட்டுமின்றி, சிறப்பானது என்ன என்பதை மறு வரையறை செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
- இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரதேசம் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வி 105 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய விதர்பா அணி 47.2 ஓவரில் 313 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியில் அதிக பட்சமாக யாஷ் ரத்தோட் 138 ரன்களும் கருண் நாயர் 112 ரன்களும் எடுத்தனர்.
கருண் நாயர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் இது அவரது 3-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.
ஆனால், அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 5-வது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது போன்ற வேடிக்கையான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.
- மார்க் டைலர், முகமது அசாருதீன் போன்ற கேப்டன்கள் ஒரு வருடத்திற்கு மேல் மோசமான பார்மில் இருந்ததை நான் பார்த்துள்ளேன்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் அணியின் நலனுக்காக 5-வது போட்டியில் ரோகித் சர்மா விலகிக் கொண்டார்.
அதன் வாயிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா அதிகமான மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு கேப்டன் தொடரின் பாதியிலேயே நீக்கப்படக் கூடாது. பாதியிலேயே வெளியேறும் வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது. இது மற்றவர்களுக்கு தவறான அறிகுறியை கொடுக்கும். இதற்கு முன் மார்க் டைலர், முகமது அசாருதீன் போன்ற கேப்டன்கள் ஒரு வருடத்திற்கு மேல் மோசமான பார்மில் இருந்ததை நான் பார்த்துள்ளேன்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மா அணி நிர்வாகத்திடம் இருந்து இன்னும் அதிகமான மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவர். இது போன்ற வேடிக்கையான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 தொடர்களில் சுமாராக விளையாடியதற்காக அவரை நீக்கியது சரியல்ல. இது அணி நிர்வாகத்திடம் மிகவும் மோசமான முடிவு. முழுமையாக நம்பவில்லையெனில் ஏன் ஆரம்பத்திலேயே கேப்டனாக ரோகித்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். விழுந்த கலங்கரை விளக்கம் பாறையை விட ஆபத்தானது.
என்று கூறினார்.
- இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.
- ரோகித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளார்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரோகித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. கடந்த இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களில் இருந்து அவர் சிட்னி போட்டியில் விளையாடப்போவதில்லை எனத் தெரிந்தது. அவருக்கு பதிலாக கில் அணியில் இடம் பெறுவார் என்பதும், பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்பது எதிர்பார்த்தவையே.
இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் (சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்) விளையாடுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. ஜூன் மாதத்திற்கு முன்பாக இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போவதில்லை. ரோகித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளார். அவர் மிகவும் சிறந்த வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் அமெரிக்க வீரரான ரெய்லி ஓபெல்கா மோதின.
- ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரெய்லி ஓபெல்கா முன்னேறினார்.
பிரிஸ்பேன்:
முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் அமெரிக்க வீரரான ரெய்லி ஓபெல்கா மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6, 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரெய்லி ஓபெல்கா தகுதி பெற்றார்.
- அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல.
- ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா செயல்பட்டார். ரோகித் 11 பேர் கொண்ட அணியில் கூட இடம் பெறவில்லை.
ரோகித் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என பல தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் அவரது ஓய்வை மறைத்து வைத்து கூறும் அளவுக்கு அவர் பெரிய அளவில் ஏதும் செய்யவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியின் கேப்டனாக பும்ரா மைதானத்திற்குள் வரும் போது ரவி சாஸ்திரி ரோகித் குறித்து கேட்காதது ஆச்சரியமாக இருந்தது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் ஏதோ ரகசிய ஆபரேஷனை போல் மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதுதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம். அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல. ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் ரோகித் சர்மா சுமார் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சேனா (தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரேயொரு சதத்தை மட்டுமே விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி வெறும் 40 மட்டும்தான். இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட்டதை இந்திய அணி மறைக்க தேவையில்லை என்பதே எனது கருத்து.
என்று சஞ்சய் கூறினார்.
- முதல் அரையிறுதி போட்டியில் அன்ஹெலினா கலினினாவும் போலினா குடெர்மெடோவாவும் மோத உள்ளனர்.
- 2-வது அரையிறுதியில் சபலென்கா, ஆண்ட்ரீவாவுடன் மோதுகிறார்.
பிரிஸ்பேன்:
முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரேனிய வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் ஆஸ்திரேலிய வீராங்கனை கிம்பர்லி பிர்ரெல்லும் மோதின. இதில் அன்ஹெலினா கலினினா 4-6, 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஆஷ்லின் க்ரூகரும் ரஷ்ய வீராங்கனை போலினா குடெர்மெடோவாவும் மோதினர். இதில் போலினா குடெர்மெடோவா 7-5, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற இரண்டு ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-4 என்ற கணக்கில் எம். பௌஸ்கோவாவை வீழ்த்தினார். எம். ஆண்ட்ரீவா 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் முதல் அரையிறுதி போட்டியில் அன்ஹெலினா கலினினாவும் போலினா குடெர்மெடோவாவும் மோத உள்ளனர். 2-வது அரையிறுதியில் சபலென்கா, ஆண்ட்ரீவாவுடன் மோதுகிறார்.






