என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்"

    • கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
    • பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு கண்டித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் தந்தை - மகன் என்றும் அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.

    தேசிய ஊடகங்களுக்கு அல்பனீஸ் அளித்த பேட்டியில், அந்த அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று செய்தியாளர் கேட்டபோது, அல்பானீஸ், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

    இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை" என்று கூறினார்.

    பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு முன்னதாக கண்டித்திருந்தார். 

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஹேடன் என்பரை இன்று திருமணம் செய்து கொண்டார்
    • ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    2022 முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானீஸ்க்கு வயது 62. தனது காதலியான 46 வயது ஜோடி ஹேடன் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஜோடி ஹேடனிடம் அல்பானீஸ் காதலை கூறிய நிலையில் இன்று பிரதமர் குடியிருப்பில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

    2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
    • அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார்.

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இன்று பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆண்டனி அல்பனிஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள.

    தேர்தல் முடிவுகள் ஆண்டனி தலைமையின் கீழ், ஆஸ்திரேலியா மக்கள் வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கையை குறிக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை முன்னேற்றவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
    • அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன்.

    அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
    • 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சிட்னி சென்றடைந்தது.


    இந்நிலையில் சிட்னியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள் மரியாதை நிமித்தமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


    இதனை தொடர்ந்து பிரதமர் ஆண்டனி, இந்திய அணி வீரர் விராட் கோலியிடம் செல்போனில் எதையோ காட்டியப்படி சிரித்து பேசினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×