என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
    • அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார்.

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இன்று பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆண்டனி அல்பனிஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள.

    தேர்தல் முடிவுகள் ஆண்டனி தலைமையின் கீழ், ஆஸ்திரேலியா மக்கள் வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கையை குறிக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை முன்னேற்றவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×