என் மலர்
நீங்கள் தேடியது "Australian Prime Minister Anthony Albanese"
- இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
- அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
சிட்னி:
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன்.
அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
இவ்வாறு மோடி கூறினார்.






