என் மலர்
விளையாட்டு
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
- நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்தது குறித்து முகமது சமி பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் சமி, " நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோர் நமக்கு எப்படி நடக்க வேண்டும் என கற்றுத் தருவர். நாம் கீழே விழுவோம், மீண்டும் எழுவோம். ஆனால், நடக்க கற்றுக் கொள்வதை நிறுத்தவே மாட்டோம். அதேபோல தான் விளையாட்டிலும், நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.
எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம். நீங்கள் ரன்கள் அடிக்கும்போதும் விக்கெட்டுகள் எடுக்கும்போதும் அனைவரும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் கடினமான காலங்களில் யார் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை உணர்வதே உண்மையான சோதனையாகும். கடந்த ஓராண்டாக காத்திருந்து கடினமாக உழைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
- எனக்கு அதுபற்றிய உணர்வுகள் வருகின்றன.
- இதுப்பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி. டி. வில்லியர்ஸ். கிரிக்கெட் உலகில் இவர் "மிஸ்டர் 360" என்று அழைக்கப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி. டி. வில்லியர்ஸ் சமீபத்திய நேர்காணலின் போது மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளின் போது எந்தவிதமான சூழ்நிலையிலும் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்துவதில் புகழ்பெற்றவர் ஏபி. டி. வில்லியர்ஸ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், அவரது சமீபத்திய கருத்துக்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கலந்த நம்பிக்கையை தூண்டியுள்ளது. கிரிக்கெட் பற்றி சமீபத்திய நேர்காணலில் பேசிய ஏபி. டி. வில்லியர்ஸ், "இன்றும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். இதுப்பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் எனக்கு அதுபற்றிய உணர்வுகள் வருகின்றன."
"என் குழந்தைகள் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். நான் அவர்களுடன் வலைபயிற்சி செல்ல விரும்புகிறேன். எனக்கு அது பிடித்துவிட்டால், சற்று வெளியே சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால் அது தொழில்முறை ஐ.பி.எல். அல்லது தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணமாக இருக்காது."
"யாருக்கு தெரியும்? பார்ப்போம். இந்த கண் இன்னமும் வேலை செய்கிறதா என்பதை பார்ப்போம், நான் மீண்டும் முயற்சிக்கிறேன். தற்போது கொஞ்சம் தெளிவற்ற நிலையில் தான் உள்ளது, ஆனால் இது நன்றாக வேலை செய்கிறது. தற்போது என் குழந்தைகளுக்காக இதை செய்கிறேன். அதன்பிறகு மீண்டும் கிரிக்கெட் மூலம் மகிழ்ச்சி அடைய முடியுமா என்பதை பார்க்கிறேன்," என்று தெரிவித்தார்.
- இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
- முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியை இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடும்.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
- 2 ஆவது டி20 போட்டி ஜனவரி 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இதனையடுத்து 2 ஆவது டி20 போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.
- ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
- இந்திய அணியினருடன் இணைந்து முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் முகமது சமியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த ஸ்டோரியில், "சமி ஹீரோ டா.. ஹீரோ" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 7 வீரரும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ஜோகோவிச் 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்து கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 சுற்றுகளை 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் தீப்தி சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிருக்கான ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 41, 73, 135 ரன்கள் எடுத்ததால் ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
கேப்டன் கவுர் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20 தரவரிசையில் 12வது இடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடம் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 161 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.
இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பென் மெக்டர்மார்ட் 42 ரன்னும், காலெப் ஜுவல் 40 ரன்னும், மிட்செல் ஒவன் 36 ரன்னும், டிம் டேவிட் 25 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்தீஸ் பாட்டர்சன் 48 ரன் எடுத்து அவுட்டானார். லச்சின் ஷா 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சிட்னி தண்டர் அல்லது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அனஸ்டசியா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசவை எதிர்கொள்கிறார்.
- 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா
- 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற டி20 தொடராக இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை பல அணிகள் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள நிலையில், பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் பெங்களூரு அணி வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, எதிரணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வெற்றிகனியை மட்டும் ஆர்சிபியால் எட்டிப் பறிக்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியுடன் புனித நீராடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரின் ஏக்கத்தையும் தூண்டிவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- வெறும் 2.5 ஓவரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது.
- போட்டியின் ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மலேசியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
இறுதியில், மலேசியா அணி 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5 விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.






