என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார்.
    • பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

    நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.

    இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.

    இப்போட்டியில் 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார். அப்போது சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமா பக்கத்தில் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் பவுமா சிறிது நேரம் அதே இடத்தில் நின்றார். உடனே அங்கு வந்த ஆகா சல்மான் இருவரையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு தள்ளி சென்றார்.

    இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயலுக்கு கேப்டன் ரிஸ்வானுக்கு கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • சஞ்சு சாம்சனின் காயம் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து, விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சஞ்சு சாம்சனின் காயம் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளதால் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 7-6 (7-1) 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவாகியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் எலினா ரிபாகினா, இகா ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்தியா 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அகமதாபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73-வது ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார்.

    ஆசியாவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் விராட் கோலி. இதன்மூலம் குறைவான இன்னிங்சில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி (340 இன்னிங்ஸ்) சாதனையை படைத்தார்.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான கரன் கச்சனாவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கரன் கச்சனாவ், செர்பியாவின் மெத்ஜெடோவிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்ஜெடோவிக் 6-2, 6-3 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் முன்னணி வீரரான ரஷியாவின் கரன் கச்சனாவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
    • குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார். விராட் கோலி அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன் 50-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

    • விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை ஆர்சிபி தக்க வைத்தது.
    • புதிய கேப்டன் யார் என்பதை ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று அறிவிக்கிறது.

    பெங்களூரு:

    10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.

    ஆர்சிபி அணியை கடந்த சில சீசன்களாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார். நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டூ பிளெசிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    இந்நிலையில், மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நிலவுகிறது.

    ரஜத் படிதார் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். பெங்களுரு அணி கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என வெளிப்படையாகவும் படிதார் பேசியிருக்கிறார்.

    ஆனால் பெங்களூரு அணியின் தேர்வாக விராட் கோலி இருக்கக் கூடும். அவர் இதற்கு சம்மதிக்க வேண்டும்.

    இன்று காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறது

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.

    கராச்சி:

    நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.

    இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.

    ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.

    ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீராங்கனை படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 9-ம் இடம் பிடித்தவரும், ஸ்பெயின் வீராங்கனையுமான பவுலா படோசா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அனிசிமோவா 6-4, 6-3 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கடந்த இரண்டு ஆண்டுகளில் பும்ரா விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • உலகில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், அந்த மாதிரியான செயல்திறனை பெற்றுள்ளனர் என நான் நினைக்கவில்லை.

    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை.

    பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இறுதிகட்டமாக திருத்தி அறிவிக்கப்பட்ட அணியில் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில் பும்ரா போன்ற மிகப்பெரிய வீரர் காயம் அடைவது எந்தவொரு அணிக்கும் அது பிரச்சனைதான் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கபில்தேவ் கூறுகையில் "கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், அந்த மாதிரியான செயல்திறனை பெற்றுள்ளனர் என நான் நினைக்கவில்லை.

    பும்ரா, அஸ்வின், கும்ப்ளே, ஜாகீர்கான் போன்ற மிகப்பெரிய வீரர்கள் போட்டியில் வெற்றியை தேடுக்கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அதேபோன்ற வீரர்களுக்கு காயம் ஏற்படும்போது, எந்தவொரு அணிக்கும் அது பிரச்சனையாகத்தான் இருக்கும். பும்ரா விரைவில் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன். ஏனென்றால் ஒரு பெரிய வீரர் பெரிய வீரர்தான்" என்றார்.

    • இங்கிலாந்தின் தொடக்க ஜோடி 6.2 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
    • அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 214 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஷ்ரேயாஸ் அய்யர் 78 ரன்கள், கே.எல். ராகுல் 40 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 10 ஓவர்கள வீசி 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.

    இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். 7-வது ஓவரின் 2-வது பந்தில் டக்கெட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 6.2 ஓவரில் 60 ரன்னாக இருந்தது.

    அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டாம் பாண்டன் 41 பந்தில் 38 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் படேல் பந்தில் வெளியேறினார்.

    ஹாரி ப்ரூக் (19), பட்லர் (6) ஆகியோரை ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். இறுதியாக இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • சரித் அசலங்கா 127 ரன் விளாசியதால் இலங்கை 214 ரன்கள் சேர்த்தது.
    • பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 168 ரன்னில் சுருட்டினர்.

    இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினார்கள்.

    பதும் நிஷாங்கா 4 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் சரித் அசலங்கா களத்தில் நின்றார்.

    ஜனித் லியனாகே (11), துனித் வெலாலாகே (30) ஆகியோர் துணையுடன் அசலங்கா 71 பந்தில் அரைசதம் கடந்தார். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 32.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அசலங்கா 50 ரன்னில் இருந்தார்.

    அடுத்து இஷான் மலிங்கா களம் இறங்கினார். இவரை ஒரு முனைவில் வைத்துக் கொண்டு மறுமுனையில் அசலங்கா சிறப்பாக விளையாடினார். 43-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார் அசலங்கா. அப்போது மறுமுனையில் மலிங்கா 20 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார்.

    பின்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் 126 பந்தில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசலங்கா ஸ்கோரில் 14 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 214 ரன்னாக இருந்தது. கடைசி விக்கெட்டும் அதே ரன்னில் இழக்க இலங்கை 46 ஓவரில் 214 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

    மேத்யூ ஷார்ட் ரன்ஏதும் எடுக்காமலும், மெக்-கர்க் 2 ரன்னிலும், கூப்பர் கொனோலி 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்மித் 12 ரன்னும், லபுசேன் 15 ரன்னும் எடுத்தனர்.

    விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் தாக்குப்பிடித்து 41 ரன்கள் அடித்தார். ஆரோன் ஹார்டி 32 ரனக்ளும், சீன் அபோட் 20 ரன்களும், ஆடம் ஜம்பா 20 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 33.5 ஓவரில் 165 ரன்னில் சுருண்டது.

    இதனால் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீக்ஷனா 9.5 ஓவரில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெலாலாகே, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×