என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பும்ரா போன்ற மிகப்பெரிய வீரர்கள் காயம் அடைவது எந்தவொரு அணிக்கும் பின்னடைவுதான்: கபில்தேவ்
    X

    பும்ரா போன்ற மிகப்பெரிய வீரர்கள் காயம் அடைவது எந்தவொரு அணிக்கும் பின்னடைவுதான்: கபில்தேவ்

    • கடந்த இரண்டு ஆண்டுகளில் பும்ரா விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • உலகில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், அந்த மாதிரியான செயல்திறனை பெற்றுள்ளனர் என நான் நினைக்கவில்லை.

    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை.

    பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இறுதிகட்டமாக திருத்தி அறிவிக்கப்பட்ட அணியில் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில் பும்ரா போன்ற மிகப்பெரிய வீரர் காயம் அடைவது எந்தவொரு அணிக்கும் அது பிரச்சனைதான் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கபில்தேவ் கூறுகையில் "கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், அந்த மாதிரியான செயல்திறனை பெற்றுள்ளனர் என நான் நினைக்கவில்லை.

    பும்ரா, அஸ்வின், கும்ப்ளே, ஜாகீர்கான் போன்ற மிகப்பெரிய வீரர்கள் போட்டியில் வெற்றியை தேடுக்கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அதேபோன்ற வீரர்களுக்கு காயம் ஏற்படும்போது, எந்தவொரு அணிக்கும் அது பிரச்சனையாகத்தான் இருக்கும். பும்ரா விரைவில் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன். ஏனென்றால் ஒரு பெரிய வீரர் பெரிய வீரர்தான்" என்றார்.

    Next Story
    ×