என் மலர்
விளையாட்டு
- இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 111 ரன்கள் எடுத்தார்.
- ஜோ ரூட் 22,413 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
கொழும்பு:
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 111 ரன்களுடனும் கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் தொடர்நாயகன் விருது வென்றார்.
முன்னதாக ஜோ ரூட் 60 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டி சேர்த்து) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் லாராவை (22,358 ரன்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தனதாக்கினார். ஜோ ரூட் 22,413 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இகா ஸ்விடெக் மற்றும் எலேனா ரைபாகினா மோதினர்.
- இந்த ஆட்டத்தில் எலேனா ரைபாகினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்விடெக் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரைபகினா மோதினர்.
இந்த ஆட்டத்தில் எலேனா ரைபகினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இகா ஸ்வியடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
- 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
கொழும்பு:
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தேல் 65 ரன்னில் அவுட் ஆனார். 20-வது சதம் அடித்த ஜோ ரூட் 111 ரன்களுடனும் (108 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), 3-வது சதம் விளாசிய கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ரன்) கன்னி சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் (1-2), (1-2), இந்தியா (0-3), நியூசிலாந்து (0-3) அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியுற்ற நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.
- விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன.
- இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி தொடரை வசப்படுத்திய இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (171 ரன்), அபிஷேக் ஷர்மா (152 ரன்), இஷான் கிஷன் அசத்தி வருகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வேகமாக மட்டையை சுழற்ற ஆசைப்பட்டு விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். நடப்பு தொடரில் 16 ரன்களே எடுத்து இருக்கும் அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி முறையே 2, 3 விக்கெட்டுகளையே வீழ்த்தி உள்ளனர். கடந்த ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு அளிப்பட்டதால் வாய்ப்பு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி திரும்பினாலும் ரவி பிஷ்னோய் இடத்தை தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை சொந்தமாக்கி விட்டதால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நியூசிலாந்து அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அவர்களது பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எப்போதாவது தான் எடுபடுகிறது. பேட்டிங்கில் கிளென் பிலிப்ஸ் (145 ரன்), மிட்செல் சான்ட்னெர், மார்க் சாப்மேனும் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் ஜேக்கப் டப்பி, சோதி தவிர மற்றவர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லை.
இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர முழு பலத்தையும் வெளிக்காட்டும். அதேநேரத்தில் தொடரை இழந்து விட்ட நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. ஒன்றில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- ஐபிஎல் மூலம் இந்தியாவில் ஏராளமான வீரர்கள் விளையாடியுள்ளனர்.
- இங்குள்ள சூழ்நிலை நன்றகாக பரிச்சயமானது. இந்த தொடரில் இது நல்ல வாய்ப்பை கொடுக்கும்.
பரிச்சயமான இந்திய சூழல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதமாக இருக்கும் என வெயின் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெயின் பிராவோ கூறியதாவது:-
வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகமான பவரும், அதிகமான அனுபவங்களையும் கொண்டுள்ளது. சிம்ரன் ஹெட்மையர், ரோவ்மன் பொவேல், பிரண்டன் கிங் போன்ற வீரர்கள் உள்ளனர். ஷாய் ஹோப் அணியை வழி நடத்துகிறார். அகீல் ஹொசைன் உலகின் சிறந்த டி20 பந்து வீச்சாளராக உள்ளார்.
அத்துடன் இளம் வீரர்கள் ஜெயன்டன் சீல்ஸ், ஷமர் ஜோசப் அணியில் உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் சிறந்த கலவையான அணியாக உள்ளது. ஐபிஎல் மூலம் இந்தியாவில் ஏராளமான வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்குள்ள சூழ்நிலை நன்றகாக பரிச்சயமானது. இந்த தொடரில் இது நல்ல வாய்ப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பிராவோ தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2016-ல் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ இடம் பிடித்திருந்தார்.
- சூர்யவன்ஷி, அபிக்கியான் கந்து அரைசதம் அடித்தனர்.
- விஹான் மல்ஹோத்ரா ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் விளாசினார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி 30 பந்தில் 52 ரன்களும், அபிக்கியான் கந்து 62 பந்தில் 61 ரன்களும், விஹான் மல்ஹோத்ரா ஆட்டமிழக்காமல் 107 பந்தில் 109 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் லீராய் சிவாயுலா 77 பந்தில் 62 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடிக்க ஜிம்பாப்வே அணி 37.4 ஓவரில் 148 ரன்னில் சுருண்டது. உத்தவ் மோஹன் 3 விக்கெட்டுகளும், ஆயுஷ் மாத்ரே 3 விக்கெட்டுகளும், ஆர்.எஸ். அம்ப்ரிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
- உலகக் கோப்பைக்கான அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் உள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது ஃபார்ம் அணிக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. என்றாலும், இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
நம்பிக்கை, மீண்டும் ஃபார்முக்கு வர சஞ்சு சாம்சனுக்கு ஒரு ஆட்டம் போதும் என பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோர்னே மோர்கல் கூறியதாவது:-
நம்பிக்கை மற்றும் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் அதிரடி ஆட்டம் அமைந்தால் போதும். எங்களுக்கு, உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நேரத்தில் வீரர்கள் அவர்களுடைய உயர்ந்த ஆட்டத்தை வைத்திருக்க வேண்டும். அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பந்தை சிறப்பாக ஹிட் செய்கிறார்.
அவருடைய ஃபார்மை கொஞ்ச காலத்திற்கும் பெற்றுவிடுவார். ஆனால், முக்கிய கவனம் அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தற்போது நாங்கள் 3-0 என இருக்கிறோம். வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் உள்ளன. சஞ்சு சாம்சன் அவரது ஃபார்மை பெற்றுவிடுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
- இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன.
- சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.
இந்தியா- நியூசிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் 250-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுகிறார்கள். இதனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அமைதியாக இருந்து திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் உள்ளது என நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேக்கப் ஓரம் கூறியதாவது:-
மைதானத்தில் எல்லா திசைக்கும் பந்துகள் பறந்து கொண்டிருந்தால், எங்களுக்கு தொடர்ந்து அமைதியாக இருந்து, திட்டங்களை நியாபகப்படுத்தி, அவற்றை வெளிப்படுத்துவதில் மைதானத்தில் சற்று குழப்பம் நிலவியது. ஆனால், நான் மீண்டும் சொல்கிறேன், இது எல்லாம் கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி.
இதேபோல்தான் 1900 முதல் 2000 வரை ஜெயசூர்யா அதிரடியாக விளையாடினார். இது விளையாட்டின் இயல்பான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் பார்ப்பது என்னவென்றால், பந்துவீச்சாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது. பந்துவீச்சுப் பயிற்சியாளராக அதுவே இப்போது எங்களுக்குள்ள சவால். மேலும் இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் விஷயம் என்னவென்றால், அபிஷேக் சர்மா மட்டும் தனியாக இல்லை. சூர்யகுமார் சிறப்பாக விளையாடியுள்ளார். இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.
இவ்வாறு ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.
- உலகக் கோப்பை தொடரின்போது பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும்.
- சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவார்கள்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் மாலை நேரத்திற்குப் பிறகு தொடங்குவதால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். பனிப்பொழிவின்போது பந்து வீச சிரமமாக இருக்கும். இதனால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
ஆனால், பனிப் பொழிவால் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி திணறமாட்டார் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கிறது. போட்டிகள் மாலை நேரத்திற்குப் பின் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் பனி ஆட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. ஸ்பின்னர்கள் ஈரப்பந்தை பயன்படுத்தி பந்து வீசி பழகியிருப்பார்கள். இது ஒன்றும் புதிது அல்ல.
இருப்பினும், இந்தியா ஆறுதல் அடையக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், இது வருண் சக்கரவர்த்தி போன்ற ஒருவரைப் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் பந்தை பிடிக்கும் விதம் மற்றும் பந்து வீச்சு வேகம் ஆகியவற்றால் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
ஈரப்பதம் அல்லாத பந்தை வீசுவது போன்றது இல்லை. என்றாலும், ஈரப்பந்தால் வருண் சக்ரவர்த்தி அதிகம் பாதிக்கப்படுவார் என்று நான் பார்க்கவில்லை. அதேபோல் அக்சர் படேலும் சிறப்பாக பந்து வீசுவார். குல்தீப் யாதவ் மட்டும் அவரது பந்து வீச்சு ஸ்டைலால் பாதிக்கப்படுவார். அப்படி இருந்தாலும், குல்தீப் யாதவ் இந்தச் சூழ்நிலைகளில் பந்துவீசிப் பழக்கப்பட்டவர்தான்.
இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
- இப்போது அவர் இந்திய அணிக்கு பயிற்சியளித்து வருகிறார். இது ஒரு மிகவும் பொறுப்பான பணி.
- அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்து, அணியில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான ரகானே அறிவுரை வழங்கியுள்ளார்.
கம்பீருக்கு ரகானே வழங்கிய அட்வைஸில் கூறியிருப்பதாவது:-
கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட்டை மிகச் சிறப்பாக விளையாடினார். இப்போது அவர் இந்திய அணிக்கு பயிற்சியளித்து வருகிறார். இது ஒரு மிகவும் பொறுப்பான பணி. அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்து, அணியில் கவனம் செலுத்த வேண்டும்.
இது எனது தனிப்பட்ட கருத்து. நாம் முக்கிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். உலகக் கோப்பை முடியும் வரை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள்.
இவ்வாறு ரகேனே அட்வைஸ் வழங்கியுள்ளார்.
- அது வரும்போது வந்தே தீரும். அங்கே இழுத்தடிப்பதில் எந்த பயனும் இல்லை.
- நிச்சயமாக, எனக்கு ஓய்வு குறித்து முடிவு எடுக்க இன்னும் சிறிது காலம் ஆகும்.
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் திகழ்ந்து வருகிறார். ஒருநாள் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறது. இவரிடம் கெவின் பீட்டர்சன் ஓய்வு குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு கே.எல். ராகுல் அளித்த பதில் பின்வருமாறு:-
நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருந்தால், அது வரும்போது வந்தே தீரும். அங்கே இழுத்தடிப்பதில் எந்த பயனும் இல்லை. நிச்சயமாக, எனக்கு ஓய்வு குறித்து முடிவு எடுக்க இன்னும் சிறிது காலம் ஆகும். ஓய்வு குறித்து நான் யோசித்தேன். அது கடினமான முடிவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை உள்ளது.
நம் நாட்டில் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். உலகிலும் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். வாழ்க்கையில் இதைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த மனநிலை எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் என் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து, வாழ்க்கையை பார்க்கும் விதமே முற்றிலும் மாறிவிட்டது.
இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
33 வயதாகும் கே.எல். ராகுல் 67 டெஸ்ட் போட்டிகளில் 4,053 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 35.8 ஆகும். 94 ஒருநாள் போட்டிகளில் 3360 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50.9 ஆகும். 72 டி20 போட்டிகளில் 2265 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.75 ஆகும்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே உக்ரைன் வீராங்கனை சிறப்பாக ஆடினார். இதனால் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கோகோ காப் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.






