என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே உக்ரைன் வீராங்கனை சிறப்பாக ஆடினார். இதனால் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கோகோ காப் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.
- ரிச்சா கோஷ் கடைசி 2 ஓவரில் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசியுள்ளார்.
- ரிச்சா கோஷ் 50 பந்தில் 90 ரன்களை விளாசி அசத்தினார்.
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. நாட் ஸ்கைவர்-பிரன்ட் சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
200 என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் அவுட் ஆக, ரிச்சா கோஷ் தனி ஆளாகப் போராடி 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆர்சிபி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது.
ஆர்சிபி அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் வீராங்கனை ரிச்சா கோஷ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடைசி 2 ஓவரில் ஆர்சிபி அணி 43 ரன்களை எடுக்க ரிச்சா கோஷ் முக்கிய பங்காற்றினார். அவர் கடைசி 2 ஓவரில் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசியுள்ளார்.
வெற்றிக்காக போராடிய ரிச்சா கோஷ் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவரை பினிஷ்சர் என்றும் எம் எஸ் தோனியுடன் ஒப்பிட்டும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் லெர்னர் டியென், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரெவ்-ம் 2-வது செட்டை லெர்னர் டியென் கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரெவ்-ம் 2-வது செட்டை லெர்னர் டியென் கைப்பற்றினர். இதனையடுத்து நடந்த 3-வது செட்டை ஸ்வெரெவ் எளிதாக கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து நடந்த 4-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியாக ஸ்வெரெவ் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 6-3, 6-7 (5-7), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஸ்வெரெவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேசம் தெரிவித்தது.
- இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்தது.
அடுத்த மாதம் 7-ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேசம் விலகிய நிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம் பிடித்துள்ளது.
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களால் இந்தியா பயணிக்க முடியாது என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேசம் தெரிவித்தது.
வங்கதேச அணியின் கோரிக்கைக்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காலக்கெடு விதித்தது ஐசிசி. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணிக்காது என வங்கதேச அரசு தெரிவித்தது.
இதையடுத்து இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்தது. இதனால் இப்போது 'சி' பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணி பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில், 15 வீரர்கள் கொண்ட ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி விவரம்:-
ரிச்சி பெர்ரிங்டன் (கேப்டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சப்யான் ஷெரீப், மார்க் வாட், பிராட்லி வீல்
- இந்தியாவின் ரந்தீர் சிங், உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார்.
- 2028-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் ஷேக் ஜோவான் தொடருவார்.
தஷ்கென்ட்:
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராக இருந்த இந்தியாவின் ரந்தீர் சிங், உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2028-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடருவார். ஷேக் ஜோவான் கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உரிமத்தை கத்தாருக்கு பெறுவதே அவரது இலக்காகும்.
- மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
- ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஹசாரே:
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு தகுதி பெற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப்2-ல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கனவே லீக் சுற்றில் நியூசிலாந்து, வங்காளதேசத்தை வீழ்த்தி இருப்பதால் அந்த வெற்றிக்குரிய புள்ளி சூப்பர்6 சுற்றில் கணக்கில் கொள்ளப்படும். அவற்றுடன் இனி மோத வேண்டியதில்லை.
போட்டி விதிப்படி சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி, இன்னொரு பிரிவில் இருந்து வந்த 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகளுடன் மட்டுமே மோத வேண்டும். இதன்படி ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சூப்பர்6 சுற்றில் இன்று போட்டியை நடத்தும் ஜிம்பாப்வேயை (பிற்பகல் 1 மணி) புலவாயோவில் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே நேற்று நடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும், இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (குரூப்1) தோற்கடித்தது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் இவா ஜோவில் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, பிரேசிலின் ஆர்லாண்டோ லஸ்-ரபேல் மாடோஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பிரேசில் ஜோடி 7-6 (9-7), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி இந்தத் தொடரில் இருந்து வெளியேறியது.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.
- கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஏலத்தில், இந்தத் தொப்பி 4,60,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 கோடி) விற்பனையானது.
இந்தத் Baggy Green தொப்பிக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு. 1947-48இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.

பின்னர் இதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்க வாசுதேவ் சோஹோனிக்கு பிராட்மேன் பரிசாக வழங்கினார்.
சோஹோனி குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.
தொப்பியின் உட்புறத்தில் பிராட்மேன் மற்றும் சோஹோனியின் பெயர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
70 ஆண்டுகளைக் கடந்து தற்போது இந்த தொப்பி சாதனை விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.
- சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். சஜனா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மேத்யூஸ் உடன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய நாட் ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இவர் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.
சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
200 என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் அவுட் ஆக, ரிச்சா கோஷ் தனி ஆளாகப் போராடி 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆர்சிபி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது.
- 32 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்திருந்தார்.
- அடுத்த 25 பந்தில் சதத்தை தொட்டார்.
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். சஜனா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மேத்யூஸ் உடன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய நாட் ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.
சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது.
நாட் ஸ்கைவர்-பிரன்ட் 32 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்திருந்தார். மும்பை இந்தியன்ஸ் 7.1 ஓவரில் 50 ரன்னையும், 11.4 ஓவரில் 100 ரன்களையும், 15 ஓவரில் 150 ரன்களையும் தொட்டது.
- வெஸ்ட் இண்டீஸ் உடன் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் சி பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய 11 வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளத.
வெஸ்ட் இண்டீஸே் அணி:-
ஷாய் ஹோப் (கேப்டன் அண்டு விக்கெட் கீப்பர்), ஜான்சன் சார்லஸ் (வி.கீப்பர்), ராஸ்டன் சேஸ் மேத்யூ போர்ட், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோதி, ரோவ்மன் பவல், ரூதர்போர்டு, குயின்டின் சாம்ப்சன், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியா ஷெப்பர்டு.
வெஸ்ட் இண்டீஸ் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 1-2 எனத் தோல்வியடைந்தது. உலகக் கோப்பைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 27 முதல் 31-ந்தேதி வரை 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஷாய் ஹோப் SA20 தொடரில் விளையாடியதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடிய 11 பேர் தற்போது மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.






