என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ்

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் லெர்னர் டியென், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரெவ்-ம் 2-வது செட்டை லெர்னர் டியென் கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரெவ்-ம் 2-வது செட்டை லெர்னர் டியென் கைப்பற்றினர். இதனையடுத்து நடந்த 3-வது செட்டை ஸ்வெரெவ் எளிதாக கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து நடந்த 4-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியாக ஸ்வெரெவ் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 6-3, 6-7 (5-7), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஸ்வெரெவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×