என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
    X

    டி20 உலகக் கோப்பை: ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

    • வெஸ்ட் இண்டீஸ் உடன் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் சி பிரிவில் இடம் பிடித்துள்ளன.
    • கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய 11 வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளத.

    வெஸ்ட் இண்டீஸே் அணி:-

    ஷாய் ஹோப் (கேப்டன் அண்டு விக்கெட் கீப்பர்), ஜான்சன் சார்லஸ் (வி.கீப்பர்), ராஸ்டன் சேஸ் மேத்யூ போர்ட், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோதி, ரோவ்மன் பவல், ரூதர்போர்டு, குயின்டின் சாம்ப்சன், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியா ஷெப்பர்டு.

    வெஸ்ட் இண்டீஸ் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 1-2 எனத் தோல்வியடைந்தது. உலகக் கோப்பைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 27 முதல் 31-ந்தேதி வரை 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஷாய் ஹோப் SA20 தொடரில் விளையாடியதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடிய 11 பேர் தற்போது மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

    Next Story
    ×