என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்துள்ளார்.
    • நியூசிலாந்து அணியில் ஜேமிசன் இடம் பெறவில்லை.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிவடைந்துள்ள 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் 4-வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி:-

    சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா, ரவி பிஷ்னோய்.

    நியூசிலாந்து அணி:-

    செய்பெர்ட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், ஜேக் போல்க்ஸ், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, இஷ் சோதி.

    • மூன்று போட்டிகளும் லாகூரில் நடைபெற இருக்கின்றன.
    • டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி முடிவு செய்தது. இதற்காக அந்த அணி பாகிஸ்தான் வந்தடைந்துள்ளது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான அணியில் ஹெசில்வுட், மேக்ஸ்வெல், டிம் டுவிட், நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி:-

    மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்போட், சேவியர் பார்ட்லெட், பியர்ட்மேன், கூப்பர் கொனோலி, பென் துவார்சுயிஸ், ஜேக் எட்வர்ட்ஸ், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ குனேமான், மிட்ச் ஓவன், ஜோஸ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.

    வருகிற 29, 31 மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி லாகூரில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட அந்நாட்டு அரசு அனுமதி வழங்குமா? என்பது குறித்து வருகிற திங்கிட்கிழமைக்குள் தெரியவரும்.

    • அமெரிக்க வீரரா 3-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.
    • அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி ஒன்றில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர், 8-ம் நிலை வீரரான பெஞ்சமின் ஷெல்டனை எதிர்கொண்டார்.

    இதில் சின்னர் 6-3, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் 4-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு அரையிறுதியில் 1-ம் நிலை வீரரான அல்காரஸ், 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவை எதிர்கொள்கிறார். அரையிறுதில் முதல் 4 இடங்களில் உள்ள வீரர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
    • வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது

    இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

    வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

    இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோஹ்சின் நக்வி, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து வாரியம் இறுதி முடிவை எடுக்கும் என்று மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

    வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை பாகிஸ்தான் அணி விலகினால் ஐஸ்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இதனை கிண்டல் செய்யும் விதமாக ஐஸ்லாந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளது.

    அந்த பதிவில், "டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் விரைவில் முடிவெடுக்க வேண்டியது எங்களுக்கு மிகவும் அவசியம். பிப்ரவரி 2ஆம் தேதி அவர்கள் விலகிக்கொண்டால், நாங்கள் உடனடியாகப் புறப்படத் தயாராக இருக்கிறோம். ஆனால், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் கொழும்புக்கு சரியான நேரத்தில் செல்வதற்கு விமான அட்டவணையைத் திட்டமிடுவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. எங்கள் தொடக்க பேட்டருக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது" என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, செர்பியாவின் ஜோகோவிச் மோதினர்.
    • முதல் 2 செட்டுகளை முசெட்டி சிறப்பாக விளையாடி வென்றார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, செர்பியாவின் ஜோகோவிச் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை முசெட்டி சிறப்பாக விளையாடி வென்றார். அடுத்து ஒரு செட்டை கைப்பற்றினால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய முசெட்டி காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

    இதனால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார். வெற்றி பெற வேண்டிய போட்டியில் காயம் காரணமாக வெளியேறியதால் கண்ணீருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மைதானத்தில் இருந்து இத்தாலி வீரர் முசெட்டி வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் கைதட்டி வழியனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பத்மஸ்ரீ விருதுக்கு ரோகித் சர்மா முழுத் தகுதியானவர்.
    • இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனித்து நிற்கிறார்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோகித் அந்த விருதுக்கு முழுத் தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் KSCA தலைவருமான வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    பத்மஸ்ரீ விருது பெறுவது ஒரு மிகப்பெரிய சாதனை. மேலும் ரோகித் சர்மா அதற்கு முழுத் தகுதியானவர். அவர் பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் விளையாடி, ஒரு அசாதாரணமான சாதனைகளைப் படைத்துள்ளார். இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனித்து நிற்கிறார்.

    மேலும் ரோகித்துக்கு 16 அல்லது 17 வயது இருந்தபோது, அவர் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடிய காலத்திலிருந்தே நான் அவரைப் பார்த்து வருகிறேன். அப்போதே, அவரிடம் இருந்த அபாரமான திறமையையும் ஆற்றலையும் காண முடிந்தது.

    ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அவர் தனது ஷாட்களை ஆடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார் என்பதுதான். இந்தியாவில் உருவான எந்தவொரு சிறந்த வீரருடனும் நீங்கள் ரோகித் சர்மாவை எளிதாக ஒப்பிடலாம். நாம் பேசிக்கொண்டிருப்பது அப்படிப்பட்ட ஒரு தரமான பேட்ஸ்மேனைப் பற்றித்தான்.

    என அவர் கூறினார்.

     


    • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பெகுலா- அமென்டா அனிஸ்மோவாவுடன் மோதினர்.
    • இந்த ஆட்டம் 1 மணி 35 நிமிட நேரம் நடைபெற்றது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் 6-வது வரிசையில் உள்ள பெகுலா 6-2, 7-6 (7-1) என நேர்செட் கணக்கில் சகநாட்டை சேர்ந்த 4-ம் நிலை வீராங்கனையான அமென்டா அனிஸ்மோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி 35 நிமிட நேரம் நடைபெற்றது.

    ஜெசிகா பெகுலா அரை இறுதியில் கஜகஸ்தானை சேர்ந்த 5-வது வரிசையில் உள்ள ரைபகினாவுடன் மோதவுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முதல் முறையாக பெகுலா தகுதி பெற்றுள்ளார்.

    இன்னொரு அரைஇறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்)-சுவிட்டோலினா (உக்ரைன்) மோதுகிறார்கள்.

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்ட விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    • இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற 4-ந்தேதி மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்ட விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற 4-ந்தேதி மோதுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.படேல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    பாகிஸ்தான் அணி இதே தேதியில் அயர்லாந்தை கொழும்பில் சந்திக்கிறது. ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்துடனும், நியூசிலாந்து அணி அமெரிக்காவுடனும் (5-ந்தேதி) மோதுகிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 4 பயிற்சி ஆட்டம் நடக்கிறது. பிப்ரவரி 2-ந் தேதி கனடா-இத்தாலி அணிகளும் (இரவு 7 மணி), 3-ந் தேதி நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (மாலை 5 மணி), 5-ந்தேதி கனடா-நேபாளம் (பிற்பகல் 3 மணி) 6-ந்தேதி இத்தாலி-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பிற்பகல் 3 மணி) அணிகளும் மோதுகின்றன.

    • முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது.
    • தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பார்ல்:

    தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது. ஹெட்மயர் அதிகபட்சமாக 32 பந்தில் 48 ரன் ( 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ், கார்பின் போச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மர்க்ராம் 47 பந்தில் 86 ரன் ( 9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.

    • இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 111 ரன்கள் எடுத்தார்.
    • ஜோ ரூட் 22,413 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.

    கொழும்பு:

    இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 111 ரன்களுடனும் கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் தொடர்நாயகன் விருது வென்றார்.

    முன்னதாக ஜோ ரூட் 60 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டி சேர்த்து) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் லாராவை (22,358 ரன்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தனதாக்கினார். ஜோ ரூட் 22,413 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இகா ஸ்விடெக் மற்றும் எலேனா ரைபாகினா மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் எலேனா ரைபாகினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்விடெக் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரைபகினா மோதினர்.

    இந்த ஆட்டத்தில் எலேனா ரைபகினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இகா ஸ்வியடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
    • 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    கொழும்பு:

    இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.

    ஜேக்கப் பெத்தேல் 65 ரன்னில் அவுட் ஆனார். 20-வது சதம் அடித்த ஜோ ரூட் 111 ரன்களுடனும் (108 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), 3-வது சதம் விளாசிய கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ரன்) கன்னி சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    மேற்கிந்திய தீவுகள் (1-2), (1-2), இந்தியா (0-3), நியூசிலாந்து (0-3) அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியுற்ற நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

    ×