என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் மலேசியாவின் ஷோலிக் அய்டிலை எதிர்கொண்டார்.
    • இந்திய வீரர்கள் பிரியன்ஷூ ரஜாவத், மன்ராஜ் சிங், சங்கர் முத்துசாமி முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் மலேசியாவின் ஷோலிக் அய்டிலை எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு இந்திய வீரரான உலகின் 60-வது இடத்தில் உள்ள மிதுன் மஞ்சுநாத், எட்டாவது நிலை வீரரான டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசனை 21-12, 9-21, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    மற்ற இந்திய வீரர்கள் பிரியன்ஷூ ரஜாவத், மன்ராஜ் சிங், சங்கர் முத்துசாமி முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    மகளிர் பிரிவில், வளர்ந்து வரும் வீராங்கனை அன்மோல் கார்ப் 21-12, 21-12 என்ற கணக்கில் ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது.
    • இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது.

    பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இதற்காக அந்த அணி பாகிஸ்தான் வந்தடைந்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிராவிஸ் ஹெட் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணி:-

    டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மேத்யூ ரென்ஷா, கூப்பர் கொனோலி, மிட்சல் ஓவன், ஜோஸ் பிலிப், ஜேக் எட்வர்ட்ஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஜம்பா, மஹ்லி பியர்ட்மேன்.

    மிட்செல் மார்ஷ், ஹெசில்வுட், மேக்ஸ்வெல், டிம் டுவிட், நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டன் சுந்தருக்கு வருகிற 4-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது.
    • உடல்தகுதி பெறாவிட்டால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக உலக கோப்பைக்கு வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்.

    நியூசிலாந்துக்கு எதிரான கடந்த 11-ந்தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டம் மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    26 வயதான வாஷிங்டன் சுந்தர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. அதற்குள் அவர் உடல்தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன் சுந்தருக்கு வருகிற 4-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது. மருத்துவ குழுவின் அறிக்கையை பொறுத்தே இது குறித்து முடிவு செய்யப்படும். உடல்தகுதி பெறாவிட்டால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக உலக கோப்பைக்கு வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார்.

    • கம்பீர் தலைமையில் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை.
    • சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்றார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.

    காம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்துள்ளது. அவரது தலைமை யின் கீழ் இந்திய அணி ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.

    ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.

    சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது. இதனால் அவரை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கடுமையாக சாடி இருந்தனர். எனவே அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற வதந்தி பரவியது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தனது மவுனத்தை கலைத்தது. பி.சி.சி.ஐ. செயலாளர் சைபியா இந்த வதந்திகளை நிராகரித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    140 கோடி மக்களை கொண்ட நாடு இந்தியா. இங்கு எல்லோரும் கிரிக்கெட் நிபுணர்கள்தான். அனைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இது ஒரு ஜன நாயக நாடு, யாரையும் எங்களால் வாயடைக்க முடியாது. ஊடகங்கள் உள்பட கருத்துக்களை உருவாக்குபவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு.

    இந்தத் துறையில் நிறைய யூகச் செய்திகள் பரவி வருகின்றன.மேலும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய வீரர்கள் அல்லது மற்றவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்கள் நிரம்பியுள்ளன.

    ஆனால் விஷயம் என்ன வென்றால் பி.சி.சி.ஐ-யில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஒரு குழு எங்களிடம் உள்ளது. அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். மறுபுறம் அணித் தேர்வுக்காக எங்களிடம் 5 தேர்வாளர்கள் உள்ளனர். அந்தப் பதவிக்கு வர அவர்களும் தகுதி பெற்று இருக்க வேண்டும். அந்த முடிவுகளையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு மாற்று கருத்து இருக்கக்கூடும்.

    ஆகவே அந்த கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அவற்றை நாம் பரிசீலிக்கவும் வேண்டும். ஆனால் இறுதி முடிவு எப்போதும் கிரிக்கெட் குழு மற்றும் தேர்வாளர்களால் தான் எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
    • 23 பந்துகளில் 65 ரன்கள் அடித்திருந்த நிலையில் சிவம் துபே ரன் அவுட்டனார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    இப்போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பிய நிலையில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சிவம் துபே 3வது இடத்திற்கு முன்னேறினார். 

    • முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது
    • 4 ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    தோல்விக்கு பின்பு பேசிய கேப்டன் சூர்யகுமார், "நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வேண்டுமென்றேதான் 6 பேட்டர்களுடன் நாங்கள் விளையாடினோம். 200 ரன்களை சேஸ் செய்யும்போது 2-3 விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களின் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவே இவ்வாறு செய்தோம். டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த போட்டியில் இடம்பெற வேண்டும் என நினைத்தோம்" என்று தெரிவித்தார்.

    • முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது.
    • கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும்.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.

    இதுவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (10 புள்ளி) அணி மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து இருக்கிறது. எஞ்சிய இரு இடங்களுக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (6 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (4 புள்ளி) ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சி இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் உ.பி.வாரியர்ஸ் அணி ரன் ரேட்டிலும் பின்தங்கி இருப்பதால் தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்சை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 15 ரன் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தொய்வு கண்டுள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (236 ரன்), ரிச்சா கோஷ் (183), கிரேஸ் ஹாரிசும், பந்து வீச்சில் லாரென் பெல் (11 விக்கெட்), நடினே டி கிளார்க், சயாலி சத்கரேவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உ.பி.வாரியர்ஸ் அணியில் பேட்டிங்கில் கேப்டன் மெக் லானிங் (207 ரன்), ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 243 ரன்கள் குவித்த போபி லிட்ச்பீல்டு காயம் காரணமாக வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான அமே ஜோன்ஸ் (ரூ.50 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளார்.

    மொத்தத்தில் இன்றைய தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும். ஏற்கனவே முந்தைய லீக்கில் உ.பி. வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையோடு இறங்குவார்கள். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு காலியாகி விடும் என்பதால் உ.பி.வாரியர்ஸ் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
    • அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சூர்யகுமாயர் யாதவ் வந்த வேகத்தில் 8 ரன்னில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    18.4 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    • முதல் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
    • இன்று 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

    தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார.

    3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

    • நியூசிலாந்து அணி 215 ரன்கள் குவித்துள்ளது.
    • சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்தை எதிர்கொண்டார். மாட் ஹென்றி முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை அபிஷேக் சர்மா இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்தார். பந்தை பேட்டில் எட்ஜ் ஆகி Third Man திசையில் மேல்நோக்கி பறந்தது. அங்கு நின்றிருந்த கான்வே அபாரமாக கேட்ச் பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா கோல்டன் டக் உடன் ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து சூர்யகுமாயர் யாதவ் களம் இறங்கினார். அவர் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

    • நியூசிலாந்து 4.3 ஓவரில் 50 ரன்களையும், 8.1 ஓவரில் 100 ரன்களையும் தொட்டது. 15 ஓவரில் 150 ரன்களை தொட்டது.
    • செய்பெர்ட் 36 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் கான்வே, டிம் செய்பெர்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஜெட் வேகத்தில ரன் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்களை தொட்டது. செய்பெர்ட் 25 பந்தில் அரைசதம் விளாசினார். நியூசிலாந்து 100 ரன்களை எட்டும் விரை விக்கெட் இழக்கவில்லை. ஆகவே, நியூசிலாந்து அணி 230 ரன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    9-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கான்வே ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 44 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 2 ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார். அத்துடன் டிம் செய்பெர்ட் 36 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 12.2 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் நியூசிலாந்தின் ரன்வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பிலிப்ஸ் 24 ரன்னிலும், சாப்மேன் 9 ரன்னிலும், மிட்செல் சாட்னெர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவரில்தான் 150 ரன்னைத் தொட்டது.

    டேரில் மிட்செல் கடைசி வரை நின்று 18 பந்தில் 39 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த அணியில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்ஷித் ராணா 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    • அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும்.
    • மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

    இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி தொடரந்து தொடர்களை கைப்பற்றி வருகிறார்.

    இவரது கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    சூர்யகுமார யாதவ் மிகவும் அமைதியான தலைவர். இதை நாங்கள் களத்தில் பார்த்திருக்கிறோம். அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    ×