என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
அயர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
துபாயில் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆடியதன் மூலம் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் புதிய சாதனை படைத்தார். இது அவருக்கு 160-வது ஆட்டமாகும்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சாதனையை இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் (159 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை ஈஷா ராணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை இஷாராணி பரூவா, தைவான் வீராங்கனை உடன் மோதினார்.
முதல் செட்டை 21-13 என இஷாராணி வென்றார். பதிலடியாக தைவான் வீராங்கனை 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இஷாராணி 21-14 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
செஞ்சூரியன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சூரியனின் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஹெட்மயர் 42 பந்தில் 75 ரன்னும், ரூதர்போர்டு 24 பந்தில் 57 ரன்னும், பிராண்டன் கிங் 30 பந்தில் 49 ரன்னும் குவித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குறிப்பாக, டி காக் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
டிகாக் 49 பந்தில் 10 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 115 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 36 பந்தில் 77 ரன்னும் குவித்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது டி காக்குக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு அணி 13.2 ஓவரில் 147 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா அரை சதம் கடந்து 55 ரன்னும், மெக் லேனிங் 41 ரன்னும் எடுத்தனர்.
ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 6வது வெற்றியைப் பதிவுசெய்தது.
அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 37 பந்தில் 75 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 27 பந்தில் 54 ரன்னும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் தருண் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி, தைவானின் ஒய்.டிங் ஹங் உடன் மோதினார்.
முதல் செட்டை 21-17 என தருண் மன்னேபல்லி வென்றார். பதிலடியாக தைவான் வீரர் 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை தருண் மன்னேபல்லி 24-22 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- தீப்தி சர்மா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி உபி அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லெனிங் மற்றும் தீப்தி சர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. லெனிங் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. ஒருமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற உபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 168 ரன்கள் விளாசியது.
- இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேமருன் கிரீன் 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், அப்ரார் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது.
- அரையிறுதியில் ஜெசிகா பெகுலா ரைபகினாவுடன் மோதினார்.
- இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் 6-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா கஜகஸ்தானை சேர்ந்த 5-வது வரிசையில் உள்ள ரைபகினாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.
- டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது.
- வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி விலகினால் ஐஸ்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் அரீனா சபலென்கா மற்றும் எலினா ஸ்விடோலினா மோதினர்.
- தொடர்ச்சியாக 7-வது முறையாக கிராண்ட்சிலாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலருசியா வீராங்கனை அரீனா சபலென்கா மற்றும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-3 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 7-வது முறையாக கிராண்ட்சிலாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.
- ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் மலேசியாவின் ஷோலிக் அய்டிலை எதிர்கொண்டார்.
- இந்திய வீரர்கள் பிரியன்ஷூ ரஜாவத், மன்ராஜ் சிங், சங்கர் முத்துசாமி முதல் சுற்றுடன் வெளியேறினர்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் மலேசியாவின் ஷோலிக் அய்டிலை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீரரான உலகின் 60-வது இடத்தில் உள்ள மிதுன் மஞ்சுநாத், எட்டாவது நிலை வீரரான டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசனை 21-12, 9-21, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
மற்ற இந்திய வீரர்கள் பிரியன்ஷூ ரஜாவத், மன்ராஜ் சிங், சங்கர் முத்துசாமி முதல் சுற்றுடன் வெளியேறினர்.
மகளிர் பிரிவில், வளர்ந்து வரும் வீராங்கனை அன்மோல் கார்ப் 21-12, 21-12 என்ற கணக்கில் ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது.
- இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது.
பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இதற்காக அந்த அணி பாகிஸ்தான் வந்தடைந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிராவிஸ் ஹெட் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி:-
டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மேத்யூ ரென்ஷா, கூப்பர் கொனோலி, மிட்சல் ஓவன், ஜோஸ் பிலிப், ஜேக் எட்வர்ட்ஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஜம்பா, மஹ்லி பியர்ட்மேன்.
மிட்செல் மார்ஷ், ஹெசில்வுட், மேக்ஸ்வெல், டிம் டுவிட், நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






