என் மலர்
விளையாட்டு
- ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுகிறார்.
- டெல்லி அணியில் டு பிளிஸ்சிஸ் விளையாடவில்லை.
ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:-
கே.எல். ராகுல், மெக்கர்க், அபிஷேக் பொரேல், அக்சார் பட்டேல், ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-
கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜடேஜா, டோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, பதிரனா.
- ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. விக்கெட் எடுத்துவிட்டு Notebook Celebration-க்காக திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்குமுன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இதே விதமான Notebook Celebration-க்காக 25% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக பிரேஸ்வெல் 59, ரைஸ் மாரியூ 58 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அகிஃப் ஜாவெத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் இமாம் காயமடைந்தார். ஒரு ரன் எடுக்க ஓடும் போது பீல்டர் கீப்பரிடம் வீசிய பந்து அவரது ஹெட்மெட்டுக்குள் புகுந்ததில் அவர் காயமடைந்தார். இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அப்துல்லா ஷஃபீக்- பாபர் அசாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபீக் 33 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அரை சதம் அடித்த (50) கையொடு பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 221 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.
முன்னதாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
- திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார்.
- போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார்.
ஐ.பி.எல். தொடரின் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.
இந்நிலையில் திலக் வர்மா சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை விளையாட முற்பட்டார். ஆனால் அவர் சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது.
கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வதுதான். அவரை வெளியேற்றுவது சரியானதல்ல. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அது சமயோஜிதமாக தோன்றியது.
இவ்வாறு திலக் கூறினார்.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "ரிஷப் பண்ட் ரன்களை குவிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் தங்கத்திற்கு நிகரானவர்" என்று புகழாரம் சூட்டினார்.
இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
- 23 பந்துகளில் 25 ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 19 ஆவது ஓவரில் மும்பை வீரர் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
19வது ஓவரில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியில் அஸ்வினும் பஞ்சாப் அணியில் அதர்வா டைடேவும் குஜராத் அணியில் சாய் சுதர்சனும் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறியுள்ளனர்.
- ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
இதனை தொடர்ந்து இன்றிரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது.
பஞ்சாப் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளை அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 2 அரைசதம் அடித்து அசத்தினார். பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் 'இம்பேக்ட்' வீரராக மட்டும் ஆடிய சஞ்சு சாம்சன் இதில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்க இருக்கிறார். பேட்டிங்கில் சாம்சன், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டேவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மொத்தத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பஞ்சாப் அணியும், வெற்றிப்பாதையில் பயணிக்க ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டும். உள்ளூர் சூழல் பஞ்சாப் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 16 ஆட்டங்களிலும், பஞ்சாப் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. கவுகாத்தியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை 176 ரன்னில் அடங்கியது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன் தேவையாக இருந்த போது ரவீந்திர ஜடேஜா, டோனி இருந்தும் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்த சென்னை அணி அதில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் இறங்கும்.
கடந்த ஆட்டத்தின் போது முழங்கையில் காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நேற்று லேசான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சென்னை அணிக்கு பின்னடைவாகும். அவர் ஆடாத பட்சத்தில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக டிவான் கான்வே களம் இறங்க வாய்ப்புள்ளது. முதல் 3 ஆட்டங்களில் (2, 5, 23 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கின்றனர். இங்குள்ள மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் நூர் அகமதுவின் சுழல் ஜாலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் 163 ரன்னில் ஐதராபாத்தை 'ஆல்-அவுட்' செய்த டெல்லி அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது.
பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படும் டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. பேட்டிங்கில் பாப் டுபிளிஸ்சிஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லோகேஷ் ராகுல், அஷூதோஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் மிரட்டக்கூடியவர்கள்.
சுழலுக்கு உகந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் நூர் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் அணிக்கு துருப்பு சீட்டாக விளங்குவார்கள் எனலாம். வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், வெற்றி உத்வேகத்தை தொடர டெல்லி அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை சந்தித்ததில் சென்னை அணி 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) அல்லது டிவான் கான்வே, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாமி ஓவர்டான் அல்லது அன்ஜூல் கம்போஜ், டோனி, ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது.
டெல்லி: ஜேக் பிராசர் மெக்குர்க், பாப் டுபிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மொகித் ஷர்மா அல்லது டி.நடராஜன்.
- பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
- 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன்
மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது.
- நான் ஒருபோதும் விக்கெட்டுகளைத் தேடுவதில்லை என்றார் பாண்ட்யா.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 16வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் தோல்வி அடைந்தோம். ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெறுகிறோம், ஒரு அணியாக நாங்கள் தோற்கிறோம். நான் முழு உரிமையையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எங்களுக்கு சில ஷாட்கள் தேவைப்பட்டன. திலக் அவற்றைப் பெறவில்லை. கிரிக்கெட்டில் சில நாட்கள் வரும், நீங்கள் முயற்சிக்கும் போது ஆனால் ரன்கள் வருவதில்லை.
நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள், நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறந்த முடிவுகளை எடுங்கள், பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள், பேட்டிங்கில் வாய்ப்புகளை எடுங்கள்.
நீங்கள் தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் களத்தில், 10-12 ரன்கள் நாங்கள் அதிகமாகக் கொடுத்தோம். இறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.
எப்போதும் என் பந்துவீச்சை ரசித்தேன். எனக்கு அதிக விருப்பங்கள் இல்லை. நான் ஒருபோதும் விக்கெட்டுகளைத் தேடுவதில்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் தவறுகளைச் செய்ய வைக்க முயற்சிக்கிறேன். இன்று அந்த நாட்களில் ஒன்றாகும். மும்பை அணி மீண்டும் எழுச்சி பெறும் என தெரிவித்தார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-1 என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.






