என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டெல்லியில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் நிகாத் ஜரீனை தோற்கடித்த மேரி கோம், ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது. 

    இதில், 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார். 

    நிகாத் ஜரீன்

    அதன்பின்னர் தகுதி சுற்றின் இறுதி ரவுண்டு இன்று நடைபெற்றது. இதில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீனை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கத்தில் இருந்தே அனுபவம் நிறைந்த மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜரின் திணறினார். 

    இறுதியில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாட மேரி கேம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மேரி கோமை நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    மும்பை, பெங்களூர், குஜராத் ஆகிய 3 இடங்களில் பகல் - இரவு டெஸ்ட் வரும் காலங்களில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.), தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்திய அணி பகல்- இரவு டெஸ்டில் விளையாடியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த மாதம் நடந்த இந்த இளம் சிவப்பு நிற பந்து (பிங்க்) டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது.

    இந்தியாவில் பகல்- இரவு டெஸ்ட் நடந்த முதல் மைதானம் என்ற பெருமையை கொல்கத்தா ஈடன்கார்டன் பெற்றது.

    இந்த நிலையில் மும்பை, பெங்களூர், குஜராத் ஆகிய 3 இடங்களில் பகல் - இரவு டெஸ்ட் வரும் காலங்களில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொல்கத்தாவில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்டை ஏராளமான ரசிகர்கள் ரசித்தனர். 2 மணி நேரத்தில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. ரசிகர்களின் பேராதரவால் இது வெற்றியாக முடிந்தது.

    கொல்கத்தாவில் நடந்தது போல இனிவரும் காலங்களில் மும்பை, பெங்களூர், குஜராத் ஆகிய இடங்களில் பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படும். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் ஒரு போட்டி பகல்-இரவாக நடத்தப்படலாம்.

    20 ஓவர் ஐ.பி.எல். தாக்கத்தால் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் வருகை பாதிக்கப்பட்டது. தற்போது பகல்-இரவாக நடத்தப்பட்டதால் டெஸ்ட்டை பார்க்க அதிகமான ரசிகர்கள் வருகிறார்கள்.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடத்துவது பரிசீலினையில் உள்ளது. 4-வது நாடு எது என்பது தற்போது தெரியாது அந்த நேரத்தில் முடிவு செய்யபடும். வலிமையான அணியை தான் தேர்வு செய்வோம்.

    கிரிக்கெட்டை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே எங்களது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

    குத்துச்சண்டை தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் மேரிகோம், நிகாத் ஜரீனை இன்று எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதற்கான 2 நாள் தகுதி போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி ஜரீன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார். தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீனை இன்று எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்.

    மேரிகோமை தகுதி சுற்று இல்லாமல் அணிக்கு நேரடியாக தேர்வு செய்யக்கூடாது, தகுதி போட்டியில் என்னுடன் அவரை மோத வைக்க வேண்டும் என்று நிகாத் ஜரீன் அடிக்கடி வலியுறுத்தி வந்த நிலையில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மல்லுகட்ட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிகாத் ஜரீன் கூறுகையில், ‘மேரிகோமுக்கு எதிராக மோத வேண்டும் என்ற நீண்ட கால விருப்பம் இப்போது நிறைவேறுகிறது. அவருக்கு எதிராக களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். எனது 100 சதவீத திறமையை வெளிப்படுத்தி, இதை மறக்க முடியாத போட்டியாக மாற்ற முயற்சிப்பேன்’ என்றார்.

    செஞ்சூரியனில் நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் முடிவில், தென்ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா டி காக் (95), ஹம்சா (39), பிலாண்டர் (35), பிரிட்டோரியஸ் (33) ஆகியோரின் பங்களிப்பால் 284 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    ஜோ டென்லி தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் 4, விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டாகினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2ஒ ஓவரில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. வான் டெர் உசைன் 17 ரன்னும், அன்ரிச் நார்ஜ் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில், தற்போது 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020-ல் விளையாடும் சுற்றுப் பயண விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி 2019 வருடத்தை சிறப்பாக முடித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் இந்தியா ஜனவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. ஐந்து டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    அதன்பின் மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    அதன்பிறகு மார்ச் 28-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

    அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    செஞ்சூரியன் டெஸ்டில் பிலாண்டர் மற்றும் ரபாடா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 181 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா டி காக் (95), ஹம்சா (39), பிலாண்டர் (35), பிரிட்டோரியஸ் (33) ஆகியோரின் பங்களிப்பால் 284 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    அரைசதம் அடித்த ஜோ டென்லி

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    ஜோ டென்லி தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது.

    ரபாடா

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் 14.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதில் 8 ஓவர்கள் மெய்டன் ஆகும். ரபாடா 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல, அங்கு செல்லும் அணிகளை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.
    பாதுகாப்பு கருதி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல அச்சம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல, அங்கு செல்லும் அணிகளை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஜாவித் மியான்தத் கூறுகையில் ‘‘இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள்  கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டம். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும்.

    சுற்றுலா பயணிகள் உள்பட அனைவருக்கும் இந்தியாதான் பாதுகாப்பற்ற நாடே தவிர, பாகிஸ்தான் அல்லை. மனிதர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் நாம் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

    ஒட்டுமொத்த நாடே இந்தியாவில் நடப்பதை பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறது. நான் பாகிஸ்தான் சார்பாக பேசுகிறேன், இந்தியா உடனான அனைத்து விளையாட்டுக்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

    ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சேர்மன் எஹ்சான் மானி இதுபோன்ற கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் மும்பையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ரெயில்வேஸ் அணி.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 2-ம் கட்ட போட்டிகள் நேற்றுமுன்தினம் தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - ரெயில்வேஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ரெயில்வேஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பிரித்வி ஷா, ரகானே, சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஆதித்யா டரே ஆகிய முன்னணி வீரர்களுடன் களம் இறங்கிய மும்பை அணி ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரெயில்வேஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்னில் சுருண்டது. பிரித்வி ஷா 12 ரன்னும், ரகானே 5 ரன்னும் சேர்த்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். ரெயில்வேஸ் அணி சார்பில் பிரதீப் 6 விக்கெட்டும், மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மும்பை 28.3 ஓவர்களே தாக்குப்பிடித்தது.

    பின்னர் ரெயில்வேஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், கேப்டன் கரண் சர்மா 112 ரன்களும், கோஷ் 72 ரன்களும் அடிக்க 266 ரன்கள் குவித்தது.

    152 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் மும்பை வீரர்கள் திணறினர். 2-வது இன்னிங்சிலும் சூர்யகுமார் யாதவ் (65) மட்டும்தான் சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்கள் சொதப்ப மும்பை 198 ரன்னில் சுருண்டது.

    ரெயில்வேஸ் அணியை விட 46 ரன்களே கூடுதல் பெற்றிருந்தது. 47 ரன்களை விக்கெட் இழக்காமல் அடித்த ரெயில்வேஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கனேரியா ஒரு இந்து என்பதால் சக வீரர்கள் அவரிடம் பாகுபாடு காட்டினர் என அக்தர் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு காம்பிர் பதில் அளித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடிய இந்து மதத்தை சேர்ந்த 2-வது வீரர் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்டுகளில் விளையாடி 261 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

    ஆனால் மதம் குறித்து பேசி வந்த சில வீரர்கள் அவரிடம் பாகுபாடு காட்டினர். அவர் இந்து என்பதால் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூட தயங்கினர் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார்.

    இதே இந்து வீரரால்தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றோம். அவரது முயற்சி இல்லாவிட்டால் தொடரை வென்றிருக்க முடியாது. ஆனால் அதற்குரிய பாராட்டு அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும் அக்தர் கூறினார்.

    அக்தர் சொல்வது உண்மைதான் என்று கனேரியா உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘இதுதான் பாகிஸ்தானின் உண்மையான முகம்’’ என்று தெரிவித்துள்ளார்.

    டேனிஸ் கனேரியா, சோயிப் அக்தர்

    மேலும், ‘‘முகமது அசாருதீனை எங்கள் அணியின் கேப்டனாக நியமித்திருக்கிறோம். அவர் எங்களுக்காக 80-90 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். கனேரியா விவகாரம் பாகிஸ்தானின் உண்மை முகத்தை காட்டுகிறது.

    அவர்கள் ஸ்போர்ட்ஸ்மேனான இம்ரான் கானை பிரதமராக கொண்டிருக்கிறார்கள். இன்னும், பாகிஸ்தான் மக்கள் இதுபோன்று (கனேரியா விவகாரம்) சென்று கொண்டிருக்கிறார்கள். கனேரியா 60 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது வெட்கக்கேடானது.’’ என்றார்.
    விஸ்டன் இதழ் வெளியிட்டுள்ள இந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஐபிஎல் அணியில் டோனிக்கு கேப்டன் பதவியை ஒதுக்கவில்லை.
    ‘கிரிக்கெட் வீரர்களின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இந்த 10 ஆண்டுகளில் (2010 முதல் 2019 வரை) சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளது. இதில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. 2008-ல் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் எம்எஸ் டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளது.

    எம்எஸ் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை ஐபிஎல் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.

    விஸ்டனின் கடந்த 10 ஆண்டுகிளல் சிறந்த ஐபிஎல் அணி:-

    1. கிறிஸ் கெய்ல், 2. ரோகித் சர்மா (கேப்டன்), 3. சுரேஷ் ரெய்னா, 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஜடேஜா, 8. சுனில் நரைன், 9. லசித் மலிங்கா, 10. பும்ரா, 11. புவனேஷ்வர் குமார்.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
    • டி காக் 95, பிரிட்டோரியஸ் 33, பிலாண்டர் 35 சாம்
    •  கர்ரன், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்
    • இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்துள்ளது
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. விக்கெட் கீப்பரான குயிண்டன் டி காக் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

    ஸ்டூவர்ட் பிராட், ஆர்சர்

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு  277 ரன்கள் எடுத்துள்ளது. பிலாண்டர் 28
    ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 4 விக்கெட்டும்,  ஸ்டூவர்ட் பிராட்  3 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

    95 ரன்னில் ஆட்டமிழந்த சோகத்தில் டி காக்

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிலாண்டருடன் அன்ரிச் நார்ஜ் களம் இறங்கினார். பிலாண்டர் 35 ரன்னில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 284 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பிலாண்டர் விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், சிப்ளி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் டிராவிஸ் ஹெட் சதம் அடிக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 467 ரன்கள் குவித்தது.
    • டேவிட் வார்னர் 41, லாபஸ்சாக்னே 63, ஸ்மித் 85, டிம் பெய்ன் 79
    •  நீல் வாக்னர் 4 விக்கெட், டிம் சவுத்தி 3 விக்கெட், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்
    •  கேன் வில்லியம்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம்
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்டான இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்தது.

    மார்னஸ் லாபஸ்சாக்னே (63), ஸ்டீவ் ஸமித் (77 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 77 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டிராவிஸ் ஹெட் உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மறுமுனையில் டிம் பெய்ன் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் 114 ரன்களிலும், டிம் பெய்ன் 79 ரன்களிலும் வெளியேற ஆஸ்திரேலியா 155.1 ஓவரில் 467 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், பிளண்டல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிளண்டல் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நீல் வாக்னர்

    3-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. நாளைய 3-வது நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் நியூசிலாந்து இந்த போட்டியில் தோல்வில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.
    ×