search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ ரூட் அவுட்டாகி வெளியேறும் காட்சி
    X
    ஜோ ரூட் அவுட்டாகி வெளியேறும் காட்சி

    பிலாண்டர், ரபாடா பந்து வீச்சால் 181 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

    செஞ்சூரியன் டெஸ்டில் பிலாண்டர் மற்றும் ரபாடா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 181 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா டி காக் (95), ஹம்சா (39), பிலாண்டர் (35), பிரிட்டோரியஸ் (33) ஆகியோரின் பங்களிப்பால் 284 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    அரைசதம் அடித்த ஜோ டென்லி

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    ஜோ டென்லி தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது.

    ரபாடா

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் 14.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதில் 8 ஓவர்கள் மெய்டன் ஆகும். ரபாடா 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    Next Story
    ×