என் மலர்
செய்திகள்

ஜாவித் மியான்தத்
பாதுகாப்பான நாடு அல்ல: இந்தியாவுக்கு செல்லும் அணியை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும்- மியான்தத்
இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல, அங்கு செல்லும் அணிகளை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு கருதி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல அச்சம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல, அங்கு செல்லும் அணிகளை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜாவித் மியான்தத் கூறுகையில் ‘‘இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டம். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் உள்பட அனைவருக்கும் இந்தியாதான் பாதுகாப்பற்ற நாடே தவிர, பாகிஸ்தான் அல்லை. மனிதர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் நாம் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த நாடே இந்தியாவில் நடப்பதை பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறது. நான் பாகிஸ்தான் சார்பாக பேசுகிறேன், இந்தியா உடனான அனைத்து விளையாட்டுக்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சேர்மன் எஹ்சான் மானி இதுபோன்ற கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story