என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, வலைப்பயிற்சியில் பந்து வீசினார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகு வலி காரணமாக லண்டனில் ஆபரேசன் செய்து கொண்டார். இதனால் சில மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்தார்.

    தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டுள்ள இவர் நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்தார். கடைசி நேரத்தில் சர்வதேச தரத்திற்கு பந்து வீசும் அளவில் உடற்தகுதி பெறவில்லை என்பதால் இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவர் நீக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழும்பின. இந்நிலையில் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுடன் இணைந்து ஒரு பயிற்சி செசனில் விளையாடினார்.

    அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருடன் இணைந்து பந்தை குறிவைத்து தாக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் வலையில் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மேற்பார்வையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார்.
    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்து சாதனைப் படைத்திருக்கும் சச்சினை சமன் செய்ய விராட் கோலிக்கு ஒரு சதம் தேவையுள்ளது.
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். பேட்டிங்கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். இவரது சாதனைகளை ஒன்றொன்றாக விராட் கோலி முறியடித்து வருகிறார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுர்கர் 49 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். விராட் கோலி 43 சதங்கள் அடித்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் 49-ல் 20 சதங்களை இந்திய மண்ணில் அடித்துள்ளார். விராட் கோலி 43-ல் 19 சதங்களை இந்திய மண்ணில் அடித்துள்ளார்.

    நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம் அடித்தார் சச்சின் சாதனையை சமன் செய்வார். ஆஸ்திரேலியா தொடரில் நான்காவது வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறும் விராட் கோலி, சதம் அடிப்பாரா? என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
    ஒயிட் பால் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஸ்மித்தை ஒப்பிடும் பேச்சுக்கே இடமில்லை. ஸ்மித்தைவிட கோலி எங்கேயோ இருக்கிறார் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் நான்கு பேரும் அசத்தி வருகிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். டி20-யையும் சேர்த்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவருடன் ஒப்பிடவே முடியாது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளா். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட விராட் கோலி மிக மிக உயர்ந்தவர். இதில் ஒப்பீடு என்பதற்கு வழியே கிடையாது. கிரிக்கெட்டில் கோலியை ஸ்மித்துடன் ஒப்பிடமாட்டேன்.

    ஸ்மித் எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய இருக்கிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவரை 4-வது இடத்திற்கு தள்ளுவார்கள். அல்லது 3 இடத்தில் களம் இறக்கினால், லாபஸ்சாக்னேவுக்கு 4-வது இடம் கிடைக்குமா?’’ என்றார்.
    இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து - சாய்னா நேவால் ஆகியோர் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
    மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் காலிறுதியோடு வெளியேறினர்.

    இந்நிலையில் நாளை தொடங்கும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவரும் 2-வது செட்டில் நேருக்குநேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஐந்தாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து தொடக்க சுற்றில் அயா ஒஹோரியை எதிர்கொள்கிறார். சாய்னா நேவால் மற்றொரு ஜப்பான் வீராங்கனையான சயாகா டகாஹாஷி தொடக்க போட்டியில் மோதுகிறார்கள்.

    பிவி சிந்து - சாய்னா ஆகியோர் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். இதில் சாய்னா நேவால் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தவான், கேஎல் ராகுல் இருவரும் விளையாட முடியும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். நம்பமுடியாத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதேபோல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால் லோகேஷ் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் தவானும் களம் இறங்கினார்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் மூன்று பேரும் விளையாட வாய்ப்புள்ளது. அதற்கான நான் 4-வது இடத்தில் களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வீரர்கள் ஃபார்ம் அணிக்கு எப்போதுமே சிறப்பானது. சிறந்த வீரர்கள் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அணிக்கு எப்படிபட்ட காம்பினேசன் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று பேரும் விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் நாங்கள் எப்படிபட்ட பேலன்ஸ் அணியாக செல்ல இருக்கிறோம் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.

    நான் 4-வது இடத்தில் களம் இறங்க மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் களம் இறங்கி விளையாட மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எந்த இடத்தில் களம் இறங்கி விளையாடுகிறேன் என்பதை பற்றி பார்ப்பதில்லை. நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கவில்லை.

    ஒரு அணியின் கேப்டனான என்னுடைய பணி, அடுத்த கட்ட அணி தயாராக இருப்பதை உறுதி செய்வதுதான். ஏராளமான வீரர்கள் அதுபற்றி யோசிப்பது இல்லை. கேப்டனான எனக்கு தற்போது விளையாடும் வீரர்களை மட்டும் பார்ப்பது வேலை கிடையாது, எனக்கு பின்னரும் சிறப்பான அணியை உருவாக்கி மற்றொருவர் கையில் கொடுக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ, 2016-ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்குகிறார்.
    வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

    கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் சீனியர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அணியின் நலன் கருதி மீண்டும் டி20 அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் அயர்லாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
    பிசிசிஐ-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கான விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா.
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    இதன்படி 2018-19-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சி.கே. நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீகாந்த், தேர்வு குழு தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அஞ்சும் ஜோப்ரா, ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

    சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிறந்த சர்வதேச வீராங்கனை விருது சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது மயங்க் அகர்வால், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஷபாலி வர்மா ஆகியோருக்கு கிடைத்தது.

    2018-19-ம் சீசனில் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதை புஜாராவும், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான விருதை பும்ராவும் தட்டிச் சென்றனர்.

    இதேபோல் அந்த சீசனில் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மந்தனா, அதிக விக்கெட் கைப்பற்றிய ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விழாவில் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    பயிற்சியின்போது பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளைய வான்கடே ஒருநாள் போட்டியில் களம் இறங்குவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
    மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாளை மோத உள்ள நிலையில் திடீர் பின்னடைவாக துணை கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளார்.

    நேற்று பயிற்சியின்போது பந்து தாக்கியதில் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் விரலில் ‘பேண்டேஜ்’ போட்டுவிட்டார். இதனால் தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் கவுதம் காம்பிர் இடம் பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு பதிலாக அடுத்த 4 ஆண்டுக்கான புதிய தேர்வு குழுவினரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்படுகிறது.

    இந்த கமிட்டியில் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த மதன்லால், இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் ஆகியோர் இடம்பெற இருப்பதாக பெயர் சொல்ல விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    கமிட்டியின் 3-வது உறுப்பினராக மும்பையைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனை சுலக்‌ஷனா நாயக் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

    கவுதம் காம்பிர் எம்.பி.யாக உள்ளார். அரசியல் பதவி வகிக்கும் நபர் பிசிசிஐ-யில் பொறுப்பேற்க முடியாது என லோதா பரிந்துரை கூறுவதால் காம்பிரால் ஆலோசனைக்குழுவில் இடம் பெறுவது சந்தேகமே.
    ரிஷப் பண்ட்-க்கு போட்டியாக கருதப்பட்ட சஞ்சு சாம்சன் ஐந்து போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி விரைவில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் வருகிற 24-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கடைசி ஆட்டத்தில் களம் இறங்கி 6 ரன் எடுத்த விக்கெட் கீப்பரான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டார்.

    ரோகித் சர்மா, முகமது ஷமி

    இலங்கை போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, முகமது ஷமி அணிக்கு திரும்புகிறார்கள். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

    இந்திய 20 ஓவர் அணி வருமாறு:-

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது.
    மும்பை:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (14-ந்தேதி) நடக்கிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் ஆஸ்திரேலியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டத்தில் வென்ற கோலி அணி அடுத்த 3 போட்டியில் தோற்று தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது.

    அதற்கு தற்போதைய தொடரில் இந்திய அணி பழி தீர்க்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகிய 3 தொடக்க வீரர்களும் அணியில் உள்ளனர். மூன்று பேருமே சிறப்பாக ‘பேட்டிங்’ செய்து வருகிறார்கள்.

    ரோகித்தும், தவானும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள். ராகுல் மிடில் ஆர்டரில் களம் இறக்கப்படுவார். ஆட்டத்தின் தன்மையைப் பொறுத்து அவர் எந்த வரிசையில் ஆடுவார் என்பது தெரியவரும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி எப்போதுமே சிறப்பாக ஆடுவார். கடந்த தொடரில் 2 சதத்துடன் 310 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரிலும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளார்.

    இதேபோல ‘ஹிட்மேனான ரோகித் சர்மாவும், தவானும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுபவர்கள்.

    வரிசையில் ஆடும் பட்சத்தில் கேதர் ஜாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஒருவேளை ஷிரேயாஸ் அய்யர் கழற்றி விடப்பட்டால் அவர் இடம் பெறுவார்.

    பந்துவீச்சாளர்கள் ஆல் ரவுண்டர் வரிசையில் ஜடேஜா ஆடுவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஷிவம் துபே இடம் பெற்றால் ஜடேஜா நீக்கப்படலாம்.

    வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும், சுழற்பந்து வீரர்களில் குல்தீப் யாதவும் இடம்பெறுவார்கள். சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்தால் குல்தீப் கழற்றி விடப்படுவார்.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ் கேரி, டர்னர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டார்க், கும்மின்ஸ், ஆடம் ‌ஷம்பா போன்ற சிறந்த பந்துவீச் சாளர்களும் உள்ளனர்.

    5 டெஸ்டில் 4 சதம் விளாசிய லபுஷ்சேன் முதல்முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்று உள்ளார்.

    இங்கிலாந்தில் ஜூலை மாதம் முடிந்த உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.

    சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் கடைசியாக மோதிய உலக கோப்பை போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. ஆஸ்திரேலியா 3-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.

    நாளைய ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைக்கிறார்.
    ஹோபர்ட்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைக்கிறார். குழந்தை பெற்றுக் கொண்டதால் 2 ஆண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்த சானியா மிர்சா, ஹோபர்ட் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். கடின பயிற்சியால் தனது உடல் எடையை 26 கிலோ வரை குறைத்துள்ள சானியா கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன ஓபனில் ஆடியிருந்தார்.

    இந்த போட்டியில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்க்கும் சானியா மிர்சா, முதல் சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) கூட்டணியை நாளை சந்திக்கிறார். 33 வயதான சானியா, அடுத்து வரும் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டுள்ளார்.
    ×