என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெயின் பிராவோ
    X
    வெயின் பிராவோ

    மீண்டும் டி20-யில் வெயின் பிராவோ: 2016-க்குப்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ, 2016-ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்குகிறார்.
    வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

    கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் சீனியர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அணியின் நலன் கருதி மீண்டும் டி20 அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் அயர்லாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
    Next Story
    ×