search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    தவான், கேஎல் ராகுலுக்காக 3-வது இடத்தை விட்டுக் கொடுக்கிறார் விராட் கோலி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தவான், கேஎல் ராகுல் இருவரும் விளையாட முடியும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். நம்பமுடியாத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதேபோல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால் லோகேஷ் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் தவானும் களம் இறங்கினார்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் மூன்று பேரும் விளையாட வாய்ப்புள்ளது. அதற்கான நான் 4-வது இடத்தில் களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வீரர்கள் ஃபார்ம் அணிக்கு எப்போதுமே சிறப்பானது. சிறந்த வீரர்கள் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அணிக்கு எப்படிபட்ட காம்பினேசன் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று பேரும் விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் நாங்கள் எப்படிபட்ட பேலன்ஸ் அணியாக செல்ல இருக்கிறோம் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.

    நான் 4-வது இடத்தில் களம் இறங்க மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் களம் இறங்கி விளையாட மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எந்த இடத்தில் களம் இறங்கி விளையாடுகிறேன் என்பதை பற்றி பார்ப்பதில்லை. நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கவில்லை.

    ஒரு அணியின் கேப்டனான என்னுடைய பணி, அடுத்த கட்ட அணி தயாராக இருப்பதை உறுதி செய்வதுதான். ஏராளமான வீரர்கள் அதுபற்றி யோசிப்பது இல்லை. கேப்டனான எனக்கு தற்போது விளையாடும் வீரர்களை மட்டும் பார்ப்பது வேலை கிடையாது, எனக்கு பின்னரும் சிறப்பான அணியை உருவாக்கி மற்றொருவர் கையில் கொடுக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    Next Story
    ×