என் மலர்
விளையாட்டு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மும்பை அணி 488 ரன்கள் குவித்துள்ளது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்திருந்தது. ஆதித்யா டரே 69 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 2-வது ஆள் ஆட்டம் நடைபெற்றது. டரே உடன் போய்ர் ஜோடி சேர்ந்தார். போய்ர் 5 ரன்னில் வெளியேறினார். அதன்பின் அட்டார்டே களம் இறங்கினார். இவர் டரே உடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டரே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அட்டார்டே 58 ரன்கள் சேர்த்தார். தேஷ்பாண்டே 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 488 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுக்களும், ஆர் அஸ்வின் 3 விக்கெட்டுக்களும், டி நடராஜன் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்துள்ளது. அபிநவ் முகுந்த் 52 ரன்களுடனும், சூர்யபிரகாஷ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பிக் பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 147 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தார்.
பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் - கார்ட்ரைட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாகவே விளையாடினர்.
மெல்போர்ன் ஸ்டாஸ் 7.1 ஓவரில்தான் 50 ரன்னைத் தொட்டது. ஸ்டோய்னிஸ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் புயல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டோய்னிஸ் சிக்சர் மழை பொழிந்தார்.
இதனால் அடுத்த 26 பந்தில் (11.3) மெல்போர்ன் ஸ்டார்ஸ் 100 ரன்னைத் தொட்டது. 15.1 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.
கார்ட்ரைட் 36 பந்தில் அரைசதம் அடிக்க ஸ்டோய்னிஸ் 60 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஸ்டோய்னிஸ் 79 பந்தில் 13 பவுண்டரி, 8 சிக்சருடன் 147 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 19 பந்தில் 47 ரன்கள் அடித்தார்.
கார்ட்ரைட் 40 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.
பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிக் பாஷ் டி20 லீக்கில் ஸ்டோய்னிஸ் அடித்த 147 ரன்கள்தான் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் டி'ஆர்கி ஷார்ட் 69 பந்தில் 122 ரன்களும், லூக் ரைட் 60 பந்தில் 117 ரன்களும், வெதரால்டு 70 பந்தில் 115 ரன்களும், பென் மெக்டெர்மோட் 52 பந்தில் 114 ரன்களும் அடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் போன விரக்தியில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என மலிங்கா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகளிலும் அவருடன் பந்து வீச்சாளர்கள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணியை சேஸிங் செய்ய விடாமல் தடுக்கவும் முடியவில்லை. இந்திய அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
இதனால் விரக்தியடைந்த மலிங்கா எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நேரத்திலும் நான் தயார். பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
இதற்கிடையே முன்னாள் கேப்டன்களான திசாரா பெரேரா, மேத்யூஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது சுமத்தப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு இவரது தலைமையில் இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அடுத்த கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடும் டெஸ்ட் தொடர் நீண்டகாலமாக ஞாபகத்தில் இருக்கும் என ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2018-ல் இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அப்போது ஸ்மித், வார்னர் தடையால் விளையாட முடியாத நிலையில் இருந்தனர்.
தற்போது ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் லாபஸ்சாக்னேவும் சேர்ந்துள்ளார். இதனால் இந்தியா கடும் சவாலை சந்திக்க நேரிடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் வருகையால் ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது. அத்துடன் இரண்டு உலகத்தரம் வாய்ந்த அணிகள் மோதும் தொடர் நீண்ட காலமாக ஞாபகத்தில் இருக்கும் என ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எப்போதுமே சிறப்பானதுதான். இது பாரம்பரியமானது. வரும் தொடர் மிகவும் அற்புதமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் இந்த தொடரை ஏற்கனவே எதிர்நோக்கி இருக்கிறார்கள். டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரால் ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
அதேசமயத்தில் தற்போதைய நிலையில் இந்தியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்ட் அணி. அவர்கள் இந்த சவால்களை வரவேற்பார்கள். இந்த தொடரை மக்கள் நீண்ட காலகமாக ஞாபகம் வைத்திருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு அணிகளுக்கும் உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக இருக்கும். விராட் கோலி அதை வரவேற்று ஏற்றுக் கொள்வார். நீங்கள் சிறந்த அணியாக இருந்தால், அனைத்து எதிரணிகளுக்கும் எதிராக எந்தவிதமாக சீதோஷ்ண நிலையிலும் வெற்றி பெற எதிர்பார்பார்கள். இந்தியா அனைத்து பாக்சிலும் டிக் செய்வது அவசியமாகும்’’ என்றார்.

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தன்னுடைய இடத்தில் இளம் வீரர்களை பேட்டிங் செய்ய அனுமதித்த விராட் கோலி நேர்மையான கேப்டன் என இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 201 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான தவான், கேஎல் ராகுல் இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் விளாசியது.
இதனால் 3-வது வீரராக களம் இறங்க வேண்டிய கேப்டன் விராட் கோலி களம் இறங்காமல் சஞ்சு சாம்சனை களம் இறக்கினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யரை இறக்கினார். ஐந்தாவதாக மணிஷ் பாண்டேவை இறக்கினார். 6-வது வீரராக விராட் கோலி களம் இறங்கினார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த விராட் கோலி நேர்மையான கேப்டன் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து செல்ல இருந்த ஹர்திக் பாண்ட்யா உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியடைந்ததால், இந்திய ஏ அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய ஏ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 50 ஓவர் வார்ம்-அப் மேட்ச், மூன்று லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய ஏ அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடம் பிடித்திருந்தார். கடைசி நேரத்தில் அவர் உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய ஏ அணியில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பிஞ்ச், 2023 உலக கோப்பையில் விளையாடுவதுதான் முக்கிய குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டியில் சொதப்பியதால் அணியில் கிடைக்கவில்லை.
33 வயதாகும் பிஞ்ச், 2023 உலக கோப்பையில் விளையாடுவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘2023 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது எனக்கு 33 வயதாகிறது. எனது ஆட்டம் எப்போதும் போல் சிறந்த இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய திட்டவட்டமான குறிக்கோள் அதுவாகும். பார்ம் மற்றும் உடற்தகுதி குறையும்போது, ஆசை அதைவிட ஒருபோதும் குறைந்து காணப்படாது’’ என்றார்.

சிறப்பாக பந்து வீசுவதற்காக வான்கடே மைதானத்தில் பனிப்பொழிவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆஸ்திரேலியா பயிற்சியாளர் அங்கு உலா வந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் (14-ந்தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 17-ந்தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் 19-ந்தேதியும் நடக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது குளர்காலம் நிலவி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்து ஈரப்பதமாகி பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகிவிடும்.
இதனால் போட்டியின்போது பனியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவதற்கு மெக்டொனால்டு நேற்றிரவு வான்கடே மைதானத்தில் உலா வந்துள்ளார். அப்போது பனியின் தாக்கம் எப்போது அதிகமாக இருக்கிறது, எப்போது குறைவாக இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்ததாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘எங்கள் அணி தலைமை பயிற்சியாளர் நேற்றிரவு முகாமில் இருந்து வெளியே வந்தார். அப்போது எந்த நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தார். யாருக்கு தெரியும். ஒவ்வொருவரும் யூகிக்கிறார்கள். ஒவ்வொருவரும் பனியை சமாளிப்பதற்கு தயாராகுவார்கள் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இன்று ஈரப்பந்தில் பயிற்சி மேற்கொள்வோம். போட்டி நடக்கும் அன்று எப்படி இருக்கிறது என்பதை காண காத்திருக்கிறோம். இது ஒன்றும் புதிதல்ல. எங்களுடைய ஊரிலும் பனிப்பொழி இருக்கிறது’’ என்றார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2017 ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து விலகியிருந்தார்.
குழந்தை பெற்றபின் தீவிர பயிற்சி மேற்கொண்டு மீண்டும் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் முக்கியமான சில தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆனால் அவரால் கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ஆக்லாந்து கிளாசிக் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-4 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் 2017-க்குப்பின் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதில் கிடைத்த பரிசுத் தொகையை ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணி இன்று அறிவிக்கப்பட்டது. அணியில் இடம் பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-
1. ஹர்மன்ப்ரீத் கவுர், 2. ஸ்மிரிதி மந்தனா, 3. ஷபாலி வர்மா, 4. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 5. ஹர்லீன், 6. வேதா, 7. டேனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), 8. தீப்தி ஷர்மா, 9. ஷிகா பாண்டே, 10. வி. வஸ்திராகர், 11. பூனம் யாதவ், 12. ராதா யாதவ், 13. அருந்ததி ரெட்டி, 14. ராஜேஷ்வரி கேக்வாட், 15. ரிச்சா கோஷ்.

டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா 50 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா. சவுராஸ்டிராவை சேர்ந்த அவர் கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று சதம் அடித்தார்.
இந்த செஞ்சூரி மூலம் புஜாரா புதிய மைல் கல்லை தொட்டார். டெஸ்ட் மற்றும் முதல் தர போட்டியை சேர்த்து அவர் 50-வது சதத்தை எடுத்தார். டெஸ்டில் 18 சதமும், உள்ளூர் முதல் தர போட்டிகளில் 32 செஞ்சுரியும் அவர் அடித்துள்ளார்.
முதல் தர போட்டியில் 50 சதம் எடுத்த 9-வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் 4-வது இடத்தில் 31 வயதான புஜாரா இருக்கிறார்.
குக் (இங்கிலாந்து) 65 சதத்துடனும், ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா) 52 சதத்துடனும், இந்தியாவின் உள்ளூர் போட்டியில் விளையாடும் வாசிம் ஜாபர் 57 சதத்துடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியை நான்கு நாட்கள் கொண்டதாக குறைத்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) திட்டமிட்டுள்ளது. ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கால நேரத்தை குறைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளது. விரைவில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.
4 நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் வரவேற்பு தெரிவித்தன. அதேநேரத்தில் இதை கவனமுடன் கையாளுமாறும் வேண்டுகோள் விடுத்தன. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி இதுகுறித்து எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.
கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன், பயிற்சியாளர் லாங்கர் உள்ளிட்ட பலர் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
டெஸ்ட் போட்டியில் தற்போது வேகப்பந்து வீரர்கள் ஒரு இன்னிங்ஸ்க்கு சுழற்சி முறையில் 17 முதல் 18 ஓவர்கள் வரை வீசுகிறார்கள். 4 நாட்களாக குறைக்கும்போது 20 முதல் 25 ஓவர்கள் வரை வீச வேண்டிய நிலைவரும். கூடுதலான ஓவர்களை வீசுவதால் பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஸ்டார்க், கம்மின்ஸ், நசீம் ஷா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப்பந்து வீரர்கள் அதிகமான ஓவர்களை வீசவேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவர்களது வேகப்பந்து வீச்சுத்திறன் பாதிக்கப்படும்.
இவ்வாறு மிஸ்பா- உல்-ஹக் கூறியுள்ளார்.