search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவ் வாக்
    X
    ஸ்டீவ் வாக்

    ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடர் நீண்டகாலமாக ஞாபகத்தில் இருக்கும்: ஸ்டீவ் வாக்

    இந்திய அணி அடுத்த கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடும் டெஸ்ட் தொடர் நீண்டகாலமாக ஞாபகத்தில் இருக்கும் என ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2018-ல் இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அப்போது ஸ்மித், வார்னர் தடையால் விளையாட முடியாத நிலையில் இருந்தனர்.

    தற்போது ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் லாபஸ்சாக்னேவும் சேர்ந்துள்ளார். இதனால் இந்தியா கடும் சவாலை சந்திக்க நேரிடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் வருகையால் ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது. அத்துடன் இரண்டு உலகத்தரம் வாய்ந்த அணிகள் மோதும் தொடர் நீண்ட காலமாக ஞாபகத்தில் இருக்கும் என ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எப்போதுமே சிறப்பானதுதான். இது பாரம்பரியமானது. வரும் தொடர் மிகவும் அற்புதமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் இந்த தொடரை ஏற்கனவே எதிர்நோக்கி இருக்கிறார்கள். டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரால் ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

    அதேசமயத்தில் தற்போதைய நிலையில் இந்தியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்ட் அணி. அவர்கள் இந்த சவால்களை வரவேற்பார்கள். இந்த தொடரை மக்கள் நீண்ட காலகமாக ஞாபகம் வைத்திருப்பார்கள்.

    ஆஸ்திரேலியாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு அணிகளுக்கும் உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக இருக்கும். விராட் கோலி அதை வரவேற்று ஏற்றுக் கொள்வார். நீங்கள் சிறந்த அணியாக இருந்தால், அனைத்து எதிரணிகளுக்கும் எதிராக எந்தவிதமாக சீதோஷ்ண நிலையிலும் வெற்றி பெற எதிர்பார்பார்கள். இந்தியா அனைத்து பாக்சிலும் டிக் செய்வது அவசியமாகும்’’ என்றார்.
    Next Story
    ×