search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India A Team"

    சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை ‘ஏ’ அணியில் இருந்து விடுவித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #RohitSharma
    மும்பை:

    ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ‘ஏ’ அணியில் இருந்து நேற்று விடுவித்தது.

    20 ஓவர் போட்டித் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நாளை மறுதினம் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அந்த அணியுடன் இணைந்து ரோகித் சர்மாவும் கிளம்புவார்.
    இந்திய ‘ஏ’ அணிக்கு அதிக அளவிலான தொடர்கள் இல்லாததால், பிசிசிஐ-க்கு தலைமை பயிற்சியாளர் டிராவிட் கோரிக்கை விடுத்திருந்தார். #Dravid
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் நீண்டு நாட்களுக்கு இந்தியா ‘ஏ’ அணிக்கு போட்டியில்லை. இளம் வீரர்கள் அவரது விளையாட்டை சீரான வழியில் தொடர அதிக அளவிலான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் பிசிசிஐ-க்கு டிராவிட் கோரிக்கை விடுத்திருந்தார். ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்று ஜூலை மாதம் இறுதியில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.



    அதேபோல் இந்தியா ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டிக்கும், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணிக்கும், ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகளுக்கு இடையிலான தொடருக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தியா ‘ஏ’ அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு லெவன் அணியை எதிர்கொண்டது.

    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு லெவன் அணி டாஸ் வென்று வந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் பிரித்வி ஷா 70 ரன்னும், விஹாரி 38 ரன்னும், கேப்டன் ஷ்ரோயஸ் அய்யர் 54 ரன்னும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 50 ரன்னும், குருணால் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.



    பின்னர் 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு லெவன் அணி களம் இறங்கியது. இந்தியா ‘ஏ’ அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் அந்த அணி 36.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 203 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் சாஹர் 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி லெய்செஸ்டர்ஷைர் அணியை எதிர்கொள்கிறது.
    ×