
இந்த செஞ்சூரி மூலம் புஜாரா புதிய மைல் கல்லை தொட்டார். டெஸ்ட் மற்றும் முதல் தர போட்டியை சேர்த்து அவர் 50-வது சதத்தை எடுத்தார். டெஸ்டில் 18 சதமும், உள்ளூர் முதல் தர போட்டிகளில் 32 செஞ்சுரியும் அவர் அடித்துள்ளார்.
முதல் தர போட்டியில் 50 சதம் எடுத்த 9-வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் 4-வது இடத்தில் 31 வயதான புஜாரா இருக்கிறார்.
குக் (இங்கிலாந்து) 65 சதத்துடனும், ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா) 52 சதத்துடனும், இந்தியாவின் உள்ளூர் போட்டியில் விளையாடும் வாசிம் ஜாபர் 57 சதத்துடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.