என் மலர்
விளையாட்டு
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனி நீண்ட நாள் ஓய்வில் இருப்பது ஏன்? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பைகளை வென்று பெருமை சேர்த்தவர் எம்எஸ் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒரு நாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், அந்த அணிகளில் மட்டும் இடம் பெற்றார்.
இங்கிலாந்தில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை நடந்த உலக கோப்பை போட்டியோடு டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட டோனி முடிவு செய்துள்ளார். அதோடு அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியின் ஆட்டத்தைப் பொறுத்துதான் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்பது தெரிய வரும்.
உலக கோப்பை போட் டிக்கு பிறகு டோனி இதுவரை எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. ஒரு நாள் போட்டியில் அவரது எதிர் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் டோனி நீண்ட காலமாக விளையாடாதது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.ஷ
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை அணியில் டோனி இடம் பெறுவாரா? என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். இதற்கு உடல் தகுதி முக்கியம். கடந்த ஜூலை மாதத்துக்கு பிறகு டோனி இந்திய அணியில் இணைந்து ஆடவில்லை. இதுதான் முக்கியமான கேள்வி. யாராவது நீண்ட காலம் இந்திய அணிக்காக ஆடாமல் இருப்பார்களா?
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட ரஞ்சிப் போட்டியில் சம்பளம் குறைவாக கிடைக்கிறது. இந்த ஊதிய வேறுபாடு தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகினார்.
மெல்போர்ன்:
2020-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 20-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக கனடா நாட்டின் முன்னணி வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு அறிவித்துள்ளார். பியான்கா டென்னிஸ் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் விளையாடிய போது கால் முட்டியில் காயமடைந்தார். இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே, ஆஸ்திரேலியா ஓபனை தவற விடுவதாக பியான்கா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவர் 19 வயதான பியான்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, எம்.எஸ்.டோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அவரைப்போல் சாதிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சி முடிந்தபின், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது ஆட்டத்தில் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. அனேகமாக நான் மிடில் வரிசை அல்லது பின்வரிசையில் இறங்கி பேட்டிங் செய்வேன் என்பது தெரியும். எனவே ஆஸ்திரேலிய அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முயற்சிப்பேன்.
இந்திய வீரர் டோனி நெருக்கடியான போட்டிகளில் ஆட்டத்தை கச்சிதமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார். அவரைப் போல் நானும் சாதிக்க விரும்புகிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அதிர்ஷ்டவசமாக கடந்த ஆண்டு டோனிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். அவர் ஆட்டத்தை தனக்குள் எடுத்துக் கொண்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்ததை பார்த்தேன். அது எனக்கு உத்வேகம் அளிக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் கடினமாக இருக்கும். அதுவும் அதிகமான சுழற்பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய மிடில் ஓவர்கள் தான் சவாலான பகுதி என தெரிவித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து 20 ஓவர் போட்டிகளை கொண்ட இந்திய அணி வீரர்களின் பெயர் இன்று அறிவிக்கப்படுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24-ந்தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. வழக்கமான 15 வீரர்கள் பட்டியலுக்கு பதிலாக 16 அல்லது 17 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
20 ஓவர் அணியை பொறுத்தவரை உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கடந்த 4 மாதங்களாக எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்து தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே இந்திய ஏ அணிக்கு தேர்வாகி இருந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதையொட்டி உடல்தகுதி சோதனை நேற்று நடந்தது. இதில் அவர் முழு உடல்தகுதியுடன் இல்லை என்று தெரிய வந்ததால் இந்திய ஏ அணியில் இருந்து விலக்கப்பட்டார். எனவே அவரது வருகை தாமதமாகிறது. ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாமல் ஒதுங்கி இருக்கும் டோனி இந்த தொடரிலும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லாத 34 வயதான ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் கழற்றி விடப்படலாம். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ரஹானே ஆகியோரின் பெயர் ஒரு நாள் போட்டி அணிக்கு பரிசீலிக்கப்படலாம்.
டெஸ்ட் அணியை பொறுத்தவரை 3-வது தொடக்க ஆட்டக்காரர் இடம் மட்டுமே காலியாக உள்ளது. பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் லோகேஷ் ராகுல், சுப்மான் கில் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். 5-வது வேகப்பந்து வீச்சாளர் நப்தீப் சைனிக்கு பதில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் தேவை என்று தேர்வாளர்கள் கருதினால், குல்தீப் யாதவ் இடம் பிடிப்பார்.
மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம் பெறுவார்கள்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஒடிசா.
புவனேஸ்வர்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் எந்த அணியினரும் கோல் போடவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலையில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒடிசா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் அரிடேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு வீரர் சிஸ்கோ 74-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், ஒடிசா அணி 2-0 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம், ஒடிசா அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 18 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
மும்பை அணி தான் ஆடிய 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்து 16 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.
தொடக்க வீரர்கள் 3 பேரும் வலுவாக உள்ளதாகவும் அவர்களை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் விராட் கோலி வலியுறுத்தி உள்ளார்.
புனே:
இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
புனேயில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.
லோகேஷ் ராகுல் 36 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) ஷிகர் தவான் 36 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), மனீஷ் பாண்டே 18 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி), ஷர்துல் தாகூர் 8 பந்தில் 22 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சன்டகன் 3 விக்கெட்டும், லகிரு குமாரா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சினால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.5 ஓவர்களில் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 78 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தனஞ்ஜெய டி சில்வா அதிகபட்சமாக 36 பந்தில் 57 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) , மேத்யூஸ் 20 பந்தில் 31 ரன்னும் (1 பவுண்டரி,3 சிக்சர்) எடுத்தனர். நவ்தீப் சைனி 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
இந்த ஆண்டின் தொடக்கம் நன்றாக அமைந்து உள்ளது. சரியான முறையில் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறோம். ஒரு ஆட்டத்தில் ‘சேசிங்’ செய்தோம். மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்தோம். 2 போட்டியிலும் ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. எனவே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
200 ரன்னை தொட்டதும் நம்பிக்கை அதிகரித்தது. எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் மிடில் ஓவரில் விக்கெட் சரிந்ததால் சவாலாக அமைந்தது. ஆனால் மனீஷ் பாண்டேயும், ஷர்துல் தாகூரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
180 ரன்தான் எதிர்பார்த்தேன். ஆனால் 200 ரன்னை குவித்தோம். இது மாதிரியான நிலை நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
முதலில் தற்காலிகமாக பேட்டிங் செய்யும் அணியாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. 2-வது பேட்டிங் செய்யும் போது எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறோமோ அது போல முதலில் ஆடும் போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
3 தொடக்க வீரர்களும் வலுவாக உள்ளனர். அவர்கள் அணிக்காக சிறப்பாக ஆடுகிறார்கள்.
அவர்கள் பற்றி சிலர் விருப்பங்களை தெரிவிக்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் பற்றி ஒருவருக்கொருவர் எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது அணி சார்ந்த விளையாட்டு. அணியில் உள்ளவர்களை ஒருவருக் கொருவர் எதிர்த்து நிற்பதற்கான யோசனைகளை தெரிவிப்பதை நான் ஆதரிக்கவில்லை.
இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் தவானுக்கு பதிலாக ராகுலை தொடக்க வீரராக சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், கவுதம் காம்பீர் ஆகியோர் சமீபத்தில் யோசனை தெரிவித்து இருந்தனர். தவான் நெருக்கடியில் இருப்பதாகவும் கூறி இருந்தனர்.
நேற்றைய போட்டியில் தவான் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். முன்னாள் வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து பேசுவதைத்தான் கோலி மறைமுகமாக சாடியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதன் மூலம் இந்தியா ‘ஹாட்ரிக்‘ தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது.
வங்காளதேசம் (2-1), வெஸ்ட் இண்டீசுக்கு (2-1) எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. அந்த வரிசையில் தற்போது இலங்கை தொடரும் இணைந்து உள்ளது.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது முதல் ஆட்டம் வருகிற 14-ந்தேதி மும்பையில் நடக்கிறது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 5வது சுற்றில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் முதல் நாள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை:
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் ஐந்தாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் ஜெய் கோகுல் பிஸ்டா, பூபென் லால்வாணி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிஸ்டா 41 ரன்னிலும், லால்வாணி 21 ரன்னிலும், ஹர்திக் டமோரே 21 ரன்னிலும் அவுட்டாகினர்.
மும்பை அணியின் ஷாம்ஸ் முலானி, ஆதித்யா டாரே ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். முலானி 87 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் மும்பை அணி 89.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. ஆதித்யா டாரே 69 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
தமிழ்நாடு சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர் ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் நானும் களத்திற்கு திரும்பியுள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சூசகமாக தெரிவித்துள்ளார்.
புனே:
ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஆகியோர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களாக விளையாடி வந்தனர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி ஆடிவருகிறார். இதற்கிடையே காயத்தில் இருந்து குணமடைந்துள்ள தவான் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்.
தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுலும் சிறப்பாகவே ஆடிவருவதால் இந்த ஆண்டிற்கான சர்வதேச டி20 அணியில் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தேர்வுக்குழுவிற்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இருந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான நேற்றைய டி20 போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தவான், தானும் களத்திற்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

‘மூன்று வீரர்களும் (ரோஹித், கே.எல் மற்றும் நான்) சிறப்பாக செயல்படுகிறோம். கடந்த ஆண்டு ரோகித் சர்மாவிற்கு மிகச்சிறந்த ஆண்டாகும். ராகுல் 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவர் ஒரு நல்ல வீரர். அதேபோல் நானும் நேற்று களத்தில் சிறப்பாக செயல்பட்டேன்.
அணியில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் பற்றி நான் யோசிக்கவில்லை, ஏனென்றால் அந்த விஷயம் என் கைகளில் இல்லை. சிறப்பாக செயல்படுவதும் விளையாடுவதும் மட்டுமே என் கைகளில் உள்ளது’, என தவான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கு தவானை தேர்வு செய்ய மாட்டேன். அவருக்கும் கேஎல் ராகுலுக்கும் இடையில் போட்டியில்லை. கேஎல் ராகுல் மட்டும்தான் வின்னர், என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இலங்கையை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.
தவான், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேரம் செல்ல செல்ல தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்திற்கு திரும்பினார். இருந்தாலும் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தே கொண்டே இருந்தது.
இந்தியா 4.6 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது. தவான் 34 பந்தில் அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுலும் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 97 ரன்னாக இருக்கும்போது தவான் 36 பந்தில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 36 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்தியா 12 பந்தில் 25 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அணியின் ஸ்கோர் 17.3 ஓவரில் 164 ரன்களாக இருக்கும்போது விராட் கோலி 17 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் எளிதாக 200 ரன்னை நெருங்கியது.

கடைசி ஓவரில் 19 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 78 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் டுபே ஆகியோர் நீக்கப்பட்டு சாஹல், சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தவான், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேரம் செல்ல செல்ல தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்திற்கு திரும்பினார். இருந்தாலும் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தே கொண்டே இருந்தது.
இந்தியா 4.6 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது. தவான் 34 பந்தில் அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுலும் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 97 ரன்னாக இருக்கும்போது தவான் 36 பந்தில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 36 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்தியா 12 பந்தில் 25 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அணியின் ஸ்கோர் 17.3 ஓவரில் 164 ரன்களாக இருக்கும்போது விராட் கோலி 17 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் எளிதாக 200 ரன்னை நெருங்கியது.
கடைசி ஓவரில் 19 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. இதனால் இலங்கை அணிக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஷர்துல் தாகூர் 8 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 22 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 18 பந்தில் 4 பவுண்டரியுடன் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடரை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டியில் இலங்கை அணி கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை அணி கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஷிவம் டுபே நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சாஹல், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி, ஸ்மித் போன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்க ஆசைப்படுகிறேன் என லாபஸ்சாக்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் புது நட்சத்திர வீரராக உருவாகியிருப்பவர் மார்னஸ் லாபஸ்சாக்னே. கடைசி ஐந்து டெஸ்டில் ஒரு இரட்டை சதத்துடன் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ரன்மெஷின் என்று அழைக்கப்படுகிறார். விரைவாக 1000 ரன்களை எட்டி டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் 14 டெஸ்ட் போட்டியில் 1459 ரன்கள் குவித்துள்ளார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரிலும் ஃபார்ம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள லாபஸ்சாக்னே, இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ஸ்மித் போன்று ஆக ஆசை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘நீங்கள் பார்க்கும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரை போன்று ஆக விரும்புகிறேன். அவர்கள் நீண்ட காலமாக, அதாவது ஐந்து ஆறு ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் மட்டுமல்ல. மூன்று வகை கிரிக்கெட்டிலும்.
இந்த கோடைக்காலத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்பிடுத்துவதுதான் மிகப்பெரிய சவால். அதை நான் தொடர்ந்தால், எனக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆக இருப்பது உண்மையிலேயே ஆர்வமிக்க சவால். இந்தியா மிகவும் கடினமான கண்டிசன். அவர்கள் மிகவும் வலிமையான அணி. சவாலை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு, அதிக அளவு எதிர்பார்ப்பு இல்லாமல், பந்துக்கு பந்து, போட்டிக்கு போட்டி என செல்ல வேண்டும்.
இந்தியாவில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் போட்டியின் மிகப்பெரிய பகுதி. அதனால் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற எனதில் திட்டத்தில் தெளிவாக இருக்கிறேன்’’ என்றார்.