என் மலர்tooltip icon

    விளையாட்டு

    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
    போர்ட் எலிசபெத்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    அதன்பின் ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.
    இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டி காக் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், டாம் பெஸ் 5 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது. இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

    இரண்டாவது இன்னிங்சிலும் இங்கிலாந்து அணி அபாரமாக பந்து வீசியது. இதனாம் 4வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஜோ ரூட் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இன்னும் 188 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், தென்ஆப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் அணி.
    ஜாம்ஷெட்பூர்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 63-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்சி பவுல்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜாம்ஷெட்பூர் அணியின் கோஸ்டா 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேரளா அணியின் பர்த்லோமியு 56-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ காஸ்டெல் 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதிக்கட்டத்தில் கேரளா அணியின் பர்த்லோமியு சொந்த (ஓன்) கோல் அடித்தார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஜாம்ஷெட்பூர் 16 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், கேரளா 14 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.
    ரோகித் சர்மா சதம் அடிக்கவும், விராட் கோலி 89 ரன்கள் சேர்க்கவும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்மித்தின் சதம் (131) மற்றும் லாபஸ்சேன் (54) அரைசதம் ஆகியவற்றால் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் தவான் பேட்டிங் செய்ய வரவில்லை.

    இதனால் ரோகித் சர்மா உடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 8.1 ஓவரில் 50 ரன்னை தொட்டது.

    அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ரோகித் சர்மா 56 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 20.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ஒருபக்கம் விராட் கோலி நிலைத்து நிற்க மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் ரோகித் சர்மா 110 பந்தில் சதம் அடித்தார். ரோகித் சர்மா சதம் அடித்த பின் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் ஜெட் வேகத்தில் ஆட்டத்தை கொண்டு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா 128 பந்தில் 119 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    சதம் அடித்த மகிழ்ச்சியில் ரோகித் சர்மா.
    ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்தது. ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். விராட் கோலி நிதானமாக விளையாட ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் இந்தியா எளிதாக இலக்கை நோக்கிச் சென்றது. அணிக்கு 17 ரன்கள் தேவை என்றிருக்கும்போது விராட் கோலி 85 ரன்னில் இருந்தார். சதம் அடிப்பார் என்று நினைத்தபோது 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 25 பந்தில் 13 ரன்கள் தேவையிருந்தது.

    ஷ்ரேயாஸ் அய்யருடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்து விளையாடினார். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

    ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னுடனும் மணிஷ் பாண்டே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 
    சென்னையில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சித்தார்த், அஸ்வின் பந்து வீச்சால் ரெயில்வேஸ் அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு.
    ரஞ்சி டிராபியில் இன்று சென்னையில் தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு - ரெயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிழ்நாடு அணியின் சித்தார்த், அஸ்வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரெயில்வேஸ் அணி 76 ரன்னில் சுருண்டது. எம். சித்தார்த், ஆர். அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். ரெயில்வேஸ் அணியில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர்.

    பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சூர்யபிரகாஷ் நிதானமாக விளையாடினார். சூர்யபிரகாஷ் 100 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அபிநவ் முகுந்த் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 100 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 57 ரன்கள் அடிக்க தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட முடிவில் 53 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 சீசனில் எம்எஸ் டோனியை தக்கவைத்துக் கொள்ளும் என என் ஸ்ரீனிவாசன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

    2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரிலீஸ் செய்து ஏலத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் 15 கோடி ரூபாய் செலவழிக்க தேவையில்லை என்பதால் டோனியே இதை வலியுத்தியதாக கூறப்பட்டது.

    ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தக்கவைத்துக் கொண்டது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் எம்எஸ் டோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரோ? அல்லது மாட்டாரோ? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 2021 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து என் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி எப்போது ஓய்வு பெறுவார், இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்? என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் விளையாடுவார். அதற்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் விளைாடுவார். அடுத்த வருடம் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்பார். ஏலத்தின்போது அவரை தக்கவைப்போம். அதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எவருக்கும் வேண்டாம்’’ என்றார்.

    எம்எஸ் டோனி ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்டீவ் ஸ்மித் சதமும், லாபஸ்சேன் அரைசதமும் அடிக்க இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆஸ்திரேலியா அணியில் கேன் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹாசில்வுட் சேர்க்கப்பட்டார்.

    ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.

    பிஞ்ச் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஆரோன் பிஞ்ச் ரன்அவுட்

    இதனால் ஆஸ்திரேலியா ஓவருக்கு சராசரியாக 5.50 ரன்கள் அடித்து கொண்டே வந்தது. ஸ்மித் 63 பந்தில் அரைசதமும், லாபஸ்சேன் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர். அணியின் ஸ்கோர் 31.3 ஓவரில் 173 ரன்னாக இருக்கும்போது லாபஸ்சேன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்மித் - லாபஸ்சேன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.

    17.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட ஆஸ்திரேலியா 26.3 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

    கடந்த போட்டியில் சதத்தை தவறவிட்ட ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் 37 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 132 பந்தில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அலெக்ஸ் கேரி 36 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். இறுதி கட்டத்தில் ஷமி சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியாவால் 300 ரன்னை தாண்ட முடியவில்லை.

    லாபஸ்சேனை அபாரமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய விராட் கோலி

    கடைசி ஐந்து ஓவரில் இந்தியா 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 286  ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான தவான் பீல்டிங் செய்யும்போது, அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பீல்டிங் செய்யவில்லை.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு வீரர்களும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் கவர் திசையில் வேகமாக அடித்த பந்தை தவான் டைவ் அடித்து பிடித்தார். அப்போது இடது கை தோள்பட்டை தரையில் பலமாக மோதியது.

    இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக சாஹல் பீல்டிங் செய்து வருகிறார். ஆஸ்திரேலியா 30.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க 167 ரன்கள் அடித்துள்ளது. எப்படி 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

    இந்த சூழ்நிலையில் தவான் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தவான் களம் இறங்காவிடில் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
    நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன்கள் விளாசினார்.
    இந்தியா ஏ - நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 100 பந்தில் 150 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 32 ரன்களும், ஷுப்மான் கில் 24 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்தனர்.

    விஜய் சங்கர் 58 ரன்களும், குருணால் பாண்டியா 33 ரன்களும் அடிக்க இந்தியா ஏ 49.2 ஓவரில் 372 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

    பின்னர் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து லெவன் அணி களம் இறங்கியது. ஜேக் பாய்ல் சிறப்பாக விளையாடினார். அவர் 130 ரன்கள் விளாசினார். ஆலன் 65 பந்தில் 87 ரன்கள் அடித்தார்.

    கேப்டன் மிட்செல், விக்கெட் கீப்பர் க்ளீவர் அதிரடியாக விளையாட நியூசிலாந்து ஏ வெற்றியை நோக்கி சென்றது. மிட்செல் 31 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் நியூசிலாந்து ஏ அணியால் இலக்கை எட்ட இயலவில்லை. க்ளீவர் ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 44 ரன்கள் அடித்தாலும் நியூசிலாந்து ஏ அணியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களே சேர்த்து.

    இதனால் இந்தியா ஏ 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனேவே முதல் ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றிருந்தது.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா திணறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்திருந்தது. டி காக் 63 ரன்னுடனும், பிலாண்டர் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அனல் பறக்கும் வகையில் பந்து வீசினர். டி காக், பிலாண்டர் ஆகியோர் நேற்றைய ரன்னிலேயே ஆட்டமிழந்தனர். மகாராஜ் டக்அவுட் ஆனார். ரபடா 1 ரன் எடுக்க தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பலோ-ஆன் ஆனது.  இன்று 1 ரன் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா.

    ஸ்டூவர்ட் பிராட் பந்தில் மகாராஜ் போல்டாகிய காட்சி

    ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட் வீழ்த்தினார். டாம் பெஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.  தென்ஆப்பிரிக்கா 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது. ஆகவே தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    பெங்களூருவில் நடக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்ற அணி தொடரை கைப்பற்றும்.

    டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீசுகிறது. இந்திய அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஹாசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா அணி.
    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்.சி.கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 47-வது நிமிடத்தில் பிரித்தமும், 88-வது நிமிடத்தில் ரானேவும் கோல் அடித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 2-0 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.

    கொல்கத்தா அணி தான் ஆடிய 13-வது ஆட்டத்தில் பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    கோவா அணி தான் ஆடிய 13-வது ஆட்டத்தில் சந்தித்த 3-வது தோல்வி இது. முதலிடத்தில் இருந்து அந்த அணி 2-வது இடத்துக்கு இறங்கியது.
    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
    போர்ட் எலிசபெத்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இடையில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 120 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒல்லி போப் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
    ஒல்லி போப்பும் சதம் அடித்தார். சாம் கர்ரன் (44), மார்க் வுட் (42) அதிரடியாக விளையாடினர்.

    இறுதியில், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒல்லி போப் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாகினர்.

    எல்கர் 35 ரன்னும், மலான் 18 ரன்னும், ஹம்சா 10 ரன்னும், நூர்ஜே 18 ரன்னும், டு பிளசிஸ் 8 ரன்னும், வான் டெர் டுசான் 26 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டி காக், பிளெண்டர் நிதானமாக ஆடினர். 

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 63 ரன்னுடனும், பிளெண்டர் 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் டொமினிக் பெஸ் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
    ×