search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகாக்  கேட்சை தவறவிட்ட பென் ஸ்டோக்ஸ்
    X
    டிகாக் கேட்சை தவறவிட்ட பென் ஸ்டோக்ஸ்

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் டி காக் போராட்டம் - 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 208/6

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
    போர்ட் எலிசபெத்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இடையில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 120 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒல்லி போப் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
    ஒல்லி போப்பும் சதம் அடித்தார். சாம் கர்ரன் (44), மார்க் வுட் (42) அதிரடியாக விளையாடினர்.

    இறுதியில், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒல்லி போப் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாகினர்.

    எல்கர் 35 ரன்னும், மலான் 18 ரன்னும், ஹம்சா 10 ரன்னும், நூர்ஜே 18 ரன்னும், டு பிளசிஸ் 8 ரன்னும், வான் டெர் டுசான் 26 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டி காக், பிளெண்டர் நிதானமாக ஆடினர். 

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 63 ரன்னுடனும், பிளெண்டர் 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் டொமினிக் பெஸ் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
    Next Story
    ×