search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஏ கிரிக்கெட்"

    மைசூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 68 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’. #INDA
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது கிரிக்கெட் போட்டி மைசூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணி ஈஸ்வரன் (117), கேஎல் ராகுல் (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 392 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 144 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. சைனி, நதீம் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இந்தியா ‘ஏ’ பாலோ-ஆன் கொடுத்ததால் இங்கிலாந்து லயன்ஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-வது இன்னிங்சிலும் இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 180 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கண்டே 5 விக்கெட் வீழ்த்தினார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 392 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #INDA
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் நேற்று எடுத்திருந்த 14 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பரத் 53 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 392 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இன்று காலை 110 ரன்கள் எடுப்பதற்குள் 110 விக்கெட்டுக்களை இழந்தது.

    பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. #INDA
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மைசூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கேஎல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    கேஎல் ராகுல் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே முதல் டெஸ்டில் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது 2-வது முறையாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து 117 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு பிரியங்க் பன்சால் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த பிரியங்க் பன்சால் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா ‘ஏ’ 84.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 14 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
    ரகானே (91), விகாரி (92), ஷ்ரேயாஸ் அய்யர் (65) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸை 138 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து லயன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் ரகானே, அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அன்மோல்ப்ரீத் சிங் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரகானே 91 ரன்களும், விஹாரி 92 ரன்களும் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 181 ரன்கள் குவித்தது.

    அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 47 பந்தில் 65 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் டேவியஸ் 48 ரன்கள் சேர்த்தார். 7-வது வீரர் கிரேகோரி 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து லயன்ஸ் 37.4 ஓவரில் 165 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘ஏ’ 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் மார்கண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’ #INDA
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களம் பேட்டிங் செய்தது. கேப்டன் சாம் பில்லிங்ஸ் சதத்தால் (108 நாட்அவுட்) அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது.

    பின்னர் இந்தியா ‘ஏ’ அணி 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரகானே 87 பந்தில் 59 ரன்கள் சேர்த்தார். அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஆட்டமிழக்காமல் 48 பந்தில் 57 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ அணி 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரனகள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×