என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
போர்ட் எலிசபெத்:
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இடையில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 120 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒல்லி போப் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
ஒல்லி போப்பும் சதம் அடித்தார். சாம் கர்ரன் (44), மார்க் வுட் (42) அதிரடியாக விளையாடினர்.
இறுதியில், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒல்லி போப் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாகினர்.
எல்கர் 35 ரன்னும், மலான் 18 ரன்னும், ஹம்சா 10 ரன்னும், நூர்ஜே 18 ரன்னும், டு பிளசிஸ் 8 ரன்னும், வான் டெர் டுசான் 26 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டி காக், பிளெண்டர் நிதானமாக ஆடினர்.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 63 ரன்னுடனும், பிளெண்டர் 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் டொமினிக் பெஸ் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நாளை (ஜனவரி 19) நடைபெற உள்ளது.
பெங்களூர்:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.
விராட் கோலி தலைமை யிலான அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அந்த அணியை தோற்கடிக்க இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
இரவில் பனித்துளி அதிகமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி ‘சேசிங்’ செய்யவே விரும்பும். கடந்த 2 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தான் டாஸ் வென்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை எட்டியது. 2-வது போட்டியில் 341 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. பனித்துளியால் ஈரப்பதம் இருக்கும் என்பதால் 2-வதாக பந்து வீசுவது சவாலானது.
தொடக்க வீரர்களான தவானும், ரோகித்சர்மாவும் காயம் அடைந்து இருப்பது அணிக்கு பாதிப்பாகும். ஆனால் இருவருக்கும் பயப்படும்படியான காயம் இல்லாததால் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும். ‘டாப் 3’ பேட்ஸ்மேன்கள் ரோகித்சர்மா, தவான், கோலி மற்றும் ராகுலின் ஆட்டத்தை பொறுத்து ரன் குவிப்பு இருக்கும். 4-வது வரிசையில் விளையாடும் ஷிரேயாஸ் அய்யர் கடந்த 2 போட்டியிலும் சோபிக்க வில்லை. இதனால் அவருக்கு சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது.
பந்து வீச்சில் பும்ரா, முகமதுஷமி, குல்தீப்யாதவ், ஜடேஜா நல்ல நிலையில் உள்ளனர். நவ்தீப்சைனி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம்.
ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர், ஸ்டீவ்சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ்கேரி ஆகியோரும், பந்து வீச்சில் ஸ்டார்க், கும்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஆடம்ஜம்பா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடக்க உள்ள போட்டி இரு அணிகளுக்கிடையேயான 140-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 139 ஆட்டத்தில் இந்தியா 51 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 78-லும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
இரு அணிகளின் வீரர்கள் நிலவரம் பின்வருமாறு:-
இந்தியா; விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ஜடேஜா, ஷிவம் துபே , குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனிஷ் பாண்டே, ஸ்ரீகர் பரத்.
ஆஸ்திரேலியா; ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித், மார்ன்ஸ் லபுஷ்சேன், ஹேண்ட்ஸ்ஹோம், அலெக்ஸ் கேரி, ஆஸ்டன் டர்னர், ஸ்டார்க், கும்மின்ஸ், ஹாசல்வுட், கானே ரிச்சர்ட் சன், ஆஸ்டன் அகர், ஆடம் ஷம்பா, ஆர்சி ஷார்ட்.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி நேற்று இயற்கை எய்தினார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரில் பிறந்தவர் பபு நட்கர்னி (வயது 86). சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமுடைய பபு 1955ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1414 ரன்களும் 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது 191 முதல் தர போட்டிகளிலும் விளையாடி 500 விக்கெட்டுகள் மற்றும் 8880 ரன்களும் எடுத்துள்ளார்.
1964ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய 32 ஓவர்களில் 27 ஓவர்கள் மெய்டன் ஆனது. அதிலும் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசினார். 32 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்ட இவரது சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

86 வயதான பபு சமீப காலமாக முதுமை சார்ந்த உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், பபு நட்கர்னி நேற்று இயற்கை எய்தியதாக அவரது மருமகன்களில் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின், விவிஎஸ் லக்ஷமன் ஆகிய வீரர்கள் பபு நட்கர்னியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இடைநிலை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடுவதற்காக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்ட வீடியோக்களை பார்த்ததாக கே.எல் ராகுல் கூறியுள்ளார்.
ராஜ்கோட்:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 80 ரன்கள் குவித்த கே.எல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில், இடைநிலை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடுவதற்காக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்ட வீடியோக்களை பார்த்ததாக கே.எல் ராகுல் கூறியுள்ளார்.
உலக கோப்பை போட்டிகளின் போது காயமடைந்த இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் அணிக்கு திரும்பியுள்ளதால் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலை எந்த வரிசையில் களமிறக்குவது என்ற குழப்பம் இந்திய அணிக்கு இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கான முதல் போட்டியில், ராகுல் முதல் விக்கெட்டுக்கு அடுத்ததாக களம் இறங்கினார். சற்று சமாளித்து ஆடினாலும் விராட் கோலி அவருக்கு பின்னர் களமிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அணிக்கு சற்று நெருடலாக கருதப்பட்டது.

அப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், கே.எல் ராகுல் நேற்றைய போட்டியில் 4 வது வீரராக களமிறங்கினார். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்த ராகுல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இதுகுறித்து ராகுல் தெரிவிக்கையில் ‘நான் மிகச்சிறந்த முறையில் ஏதும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கி எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனைகள் பெற்றேன். அதுமட்டுமல்லாது மிடில் ஆர்டரில் ஜொலித்த முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட வீடியோக்களை பார்த்தேன். அதே போல் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்ட வீடியோக்களையும் பார்த்து, ஆட்டத்தை எவ்வாறு நேர்த்தியானதாக மாற்றுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்’ என்றார்.
தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா தன்வசமாக்கியுள்ளார்.
அகமதாபாத்:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.
இந்நிலையில், நேற்றைய போட்டியில், 42 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக புதிய சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக ஆடி, அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.
தொடக்க வீரர் வரிசையில் 7 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக சச்சின் தெண்டுல்கர், கங்குலி, ஷேவாக் ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.
7 ஆயிரம் ரன்னை ரோகித் சர்மா 137 இன்னிங்சில் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் ஹசிம்அம்லா (தென் ஆப்பிரிக்கா) மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். ஹம்லா 144 இன்னிங்சிலும், தெண்டுல்கர் 160 இன்னிங்சிலும் தொடக்க வீரர் வரிசையில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து இருந்தனர்.

32 வயதான ரோகித்சர்மா 2013-ம் ஆண்டு முதல் தொடக்க வீரராக ஆடி வருகிறார். டோனி தான் அவரை தொடக்க வீரர் வரிசைக்கு முன்னேற்றம் செய்தார். ரோகித் சர்மா இன்னும் 4 ரன் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொடுவார்.
அதே போல் நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 100 விக்கெட்டை தொட்டார். குறைந்த இன்னிங்சில் (58 ஆட்டம்) இந்த விக்கெட்டை எடுத்த இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஹர்பஜன் சிங் சாதனையை அவர் முறியடித்தார். ஒட்டுமொத்த இந்திய பந்து வீச்சாளர்களில் 100 விக்கெட்டை அதிவேகமாக எடுத்த 3-வது வீரர் குல்தீப் ஆவார்.
மேலும், நேற்று அதிரடியாக விளையாடிய லோகேஷ் ராகுல் ஒருநாள் போட்டியில் 1000 ரன்னை தொட்டார். 28 ஆட்டத்தில் விளையாடியுள்ள ராகுல் 3 சதம், 6 அரை சதத்துடன் 1016 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில், சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கான்பெரா:
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, நாக்அவுட் சுற்றுகளிலும் அசத்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சானியா மிர்சா-நாடியா ஜோடி, சீனாவின் சாங் ஷூவாய், பெங் ஷூவாய் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி, 6-4, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய சானியா மிர்சா, தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 24-ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.
போர்ட்எலிசபெத்:
போர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டை (27 ரன்) கிளீன் போல்டு செய்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, விக்கெட் சாய்த்த உற்சாகத்தில் அவர் அருகில் சென்று ஆக்ரோஷமாக கத்தினார். எதிரணி வீரரை கோபமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரபடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் 4 தகுதி இழப்பு புள்ளியை எட்டும்போது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இதன்படி 24 வயதான ரபடா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 24-ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாட முடியாது.
ரபடா மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலகின் சிறந்த வீரரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடியதற்காக ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது முட்டாள்தனமானது. பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு நடவடிக்கை இல்லை. ஆனால் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடியதற்கு கடினமான தண்டனையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று தொடங்கும் புரோ லீக் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புவனேசுவரம்:
உலகின் தலைச்சிறந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான 2-வது புரோ லீக் ஹாக்கி போட்டி இன்று தொடங்கி ஜூன் மாதம் வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
இதில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா, உலக சாம்பியன் பெல்ஜியம், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறுகிறது. அந்த போட்டிக்கு தயாராவதற்கு புரோ லீக் கனகச்சிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-ம் நிலை அணியான நெதர்லாந்தை ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
2018-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று இருந்தது. அதற்கு பழிதீர்க்க இது அருமையான வாய்ப்பாகும். இந்த மைதானத்தில் தான் இந்திய அணி அதிகமான பயிற்சியை மேற்கொள்வதால் அது சாதகமான அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் அதாவது நாளையே இதே மைதானத்தில் இந்திய அணி மீண்டும் (மாலை 5 மணி) ஒரு முறை நெதர்லாந்துடன் மோதும்.
இந்திய அணி தனது அடுத்த சுற்றில் பெல்ஜியத்தை பிப்ரவரி 8 மற்றும் 9-ந்தேதிகளிலும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை பிப்ரவரி 21 மற்றும் 22-ந்தேதிகளிலும் இதே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதன் பிறகு இந்திய அணி ஏப்ரல் 25 மற்றும் 26-ந்தேதிகளில் ஜெர்மனியை அவர்களது இடத்தில் (பெர்லின்) சந்திக்கிறது. தொடர்ந்து லண்டனில் நடக்கும் ஆட்டங்களில் இங்கிலாந்துடன் (மே 2 மற்றும் 3-ந்தேதி) மோதுகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறுகையில், ‘புரோ ஹாக்கியில் முதலில் டாப்-3 அணிகளை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்த போட்டியை வலுவாக, சாதுர்யமாக தொடங்க வேண்டியது முக்கியமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக எங்கள் அணியின் அடிப்படை கட்டமைப்பை சரியாக உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பாபு நட்கர்னி நேற்று மும்பையில் மரணம் அடைந்தார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மராட்டியத்தை சேர்ந்த பாபு நட்கர்னி நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. வயோதிகம் காரணமாக உயிரிழந்த பாபு நட்கர்னிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
41 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட் வீழ்த்தியதோடு 1,414 ரன்களும் எடுத்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான பாபு நட்கர்னி சிக்கனமாக பந்து வீசுவதில் கில்லாடியாக விளங்கினார்.
1964-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். அந்த இன்னிங்சில் அவர் 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்டனுடன் வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை.
மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் மும்பை வீரர் மோடோ சுகான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் மும்பை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது..
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் அமின் செர்மிட்டி ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 2-0 என்ற கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம் மும்பை அணி தான் ஆடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என19 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என மொத்தம் 22 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.
ராஜ்கோட்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தவான் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மீண்டும் ஒரு அரைசதம் அடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் (7), மணிஷ் பாண்டே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 80 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் இறங்கினர்.
வார்னர் 13 ரன்னிலும், பின்ச் 33 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்மித், லாபுஷேன் இருவரும் பொறுப்புடன் ஆடினர். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். நிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதம் கடந்தார். லாபுஷேன் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குல்தீப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் அலெக்ஸ் கேரி மற்றும் சதத்தை நெருங்கிய ஸ்மித்தை 98 ரன்னில் அவுட்டாக்கினார். அடுத்து இறங்கிய வீரர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் விரைவில் அவுட்டாக்கினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 36 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ரவீந்திட ஜடேஜா, ஷைனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் அபாரமாக சதம் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னுடனும், ஒல்லி போப் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பென் ஸ்டோக்ஸ் - ஒல்லி போப் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. மறுமுனையில் ஒல்லி போப்பும் சதம் அடித்தார். சாம் கர்ரன் (44), மார்க் வுட் (42) அதிரடியாக விளையாட இங்கிலாந்தின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது.
இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒல்லி போப் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.