என் மலர்

  செய்திகள்

  ரோகித் சர்மா , சச்சின் டெண்டுல்கர்
  X
  ரோகித் சர்மா , சச்சின் டெண்டுல்கர்

  தொடக்க வீரராக ரோகித் சர்மா புதிய சாதனை - சச்சின், ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா தன்வசமாக்கியுள்ளார்.
  அகமதாபாத்:

  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. 

  இந்நிலையில், நேற்றைய போட்டியில், 42 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக புதிய சாதனை படைத்தார். 

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக ஆடி, அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

  தொடக்க வீரர் வரிசையில் 7 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக சச்சின் தெண்டுல்கர், கங்குலி, ஷேவாக் ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.

  7 ஆயிரம் ரன்னை ரோகித் சர்மா 137 இன்னிங்சில் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் ஹசிம்அம்லா (தென் ஆப்பிரிக்கா) மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். ஹம்லா 144 இன்னிங்சிலும், தெண்டுல்கர் 160 இன்னிங்சிலும் தொடக்க வீரர் வரிசையில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து இருந்தனர்.

  அம்லா, சச்சின், டி வில்லியர்ஸ்

  32 வயதான ரோகித்சர்மா 2013-ம் ஆண்டு முதல் தொடக்க வீரராக ஆடி வருகிறார். டோனி தான் அவரை தொடக்க வீரர் வரிசைக்கு முன்னேற்றம் செய்தார். ரோகித் சர்மா இன்னும் 4 ரன் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொடுவார்.

  அதே போல் நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 100 விக்கெட்டை தொட்டார். குறைந்த இன்னிங்சில் (58 ஆட்டம்) இந்த விக்கெட்டை எடுத்த இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஹர்பஜன் சிங் சாதனையை அவர் முறியடித்தார். ஒட்டுமொத்த இந்திய பந்து வீச்சாளர்களில் 100 விக்கெட்டை அதிவேகமாக எடுத்த 3-வது வீரர் குல்தீப் ஆவார்.

  மேலும், நேற்று அதிரடியாக விளையாடிய லோகேஷ் ராகுல் ஒருநாள் போட்டியில் 1000 ரன்னை தொட்டார். 28 ஆட்டத்தில் விளையாடியுள்ள ராகுல் 3 சதம், 6 அரை சதத்துடன் 1016 ரன்கள் எடுத்துள்ளார்.
  Next Story
  ×