search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு எப்.சி"

    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் கோமல் தடால் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    முதல் பாதியின் முடிவில் பெங்களூரு அணியின் மிக்கு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எரிக் பர்தாலு 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற பெங்களூரு அணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் ஆட்டம் முடியும்வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணி பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #BengaluruFC #ATK
    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எப்.சி புனே சிட்டி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. முதல் பாதியின் இறுதியில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி அடுத்தடுத்து 41 மற்றும் 43 வது நிமிடங்களில் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

    இதையடுத்து, முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என முன்னிலை வகித்தது. பெங்களூரு அணியினரின் ஆட்டத்துக்கு புனே அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    ஆட்டத்தின் 64வது நிமிடத்தால் மிக்கு ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேர இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி புனே அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தையும் பெற்றுள்ளது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    ×