என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் அபாரமாக சதம் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னுடனும், ஒல்லி போப் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பென் ஸ்டோக்ஸ் - ஒல்லி போப் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. மறுமுனையில் ஒல்லி போப்பும் சதம் அடித்தார். சாம் கர்ரன் (44), மார்க் வுட் (42) அதிரடியாக விளையாட இங்கிலாந்தின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது.

    இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒல்லி போப் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    மிட்செல் ஸ்டார்க் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதே இல்லையாம், இன்றும் அது பலிக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் பந்தை இந்திய பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் விளாசினர். அவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. 78 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

    மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதே கிடையாதாம். இன்றைய போட்டியிலும் அந்த கணிப்பு பலிக்குமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மிட்செல் ஸ்டார்க்

    இதற்கு முன் மான்செஸ்டரில் 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 2013-ல் பர்மிங்காமில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், இந்தியாவுக்கு எதிராக 2019-ல் 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், 2018-ல் மெல்போர்னில் இங்கிலாந்துக்கு எதிராக 71 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இந்த போட்டிகளில் எல்லாம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டும் முடிந்து விடவில்லை என் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ்.  அதிரடி 150, அதிரடி சதம், அதிர அரைசதம் என ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர். கடந்த 2018-ம் ஆண்டு திடீரென ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டுக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கடெ் ரசிகர்களுக்கு அவரது அறிவிப்பு அதிர்ச்சி அளித்தது.

    2019 உலக கோப்பை தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கிடையே அம்லா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது.

    அணியில் மாற்றம் கொண்டு வர ஸ்மித்தை இயக்குனராகவும், மார்க் பவுச்சரை தலைமை பயிற்சியாளராகவும் நியமித்தது. இருவரும் இந்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக ஏபி டி வில்லியர்ஸை மீண்டும் அணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர். ஏபி டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்ப சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நான் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். அதில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. நான் எப்போதுமே தென்ஆப்பிரிக்காவுக்காக விளையாட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரிய கவுரவம்.

    நான் மார்க் பவுச்சர் மற்றும் ஸ்மித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன. மேலும் சிலர் அதில் இணைந்திருந்தார்கள். ஆகவே, சாத்தியக்கூறு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. நான் விளையாடுவதற்கான சில சிறந்த விவாதம் நடைபெற்றது. நான் விளையாடும் டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக ரன்கள் அடிக்க வேண்டும்.

    டிசம்பரில் இருந்து சில டெஸ்ட் போட்டிகளை பார்த்தேன். கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது மிகவும் சிறந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நினைவுகள் எனது வாழ்க்கையை மாற்றியது. 11 மாதங்கள் நான் விளையாட விரும்பவில்லை. இது அதிகப்படியானது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி இருக்க விரும்பவில்லை. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் முடிந்துவிட்டது’’ என்றார்.
    தவான், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.

    இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

    தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    சதம் அடிப்பர் என்று எதிர்பார்த்த தவான் எதிர்பாராத வகையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்திய அணியை விராட் கோலி வழி நடத்திச் சென்றார். அவர் 50 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் (7), மணிஷ் பாண்டே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலி நிதானமாக சதத்தை நோக்கி சென்றார்.

    ஆனால் ஆடம் ஜம்பாவின் கடைசி ஓவரில் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜடேஜாவை துணைக்கு வைத்துக் கொண்டு ராகுல் அதிரடி காட்டினார். 38 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் இந்தியா 45.4 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது.

    அரைசதம் அடித்த விராட் கோலி

    350 ரன்னை தொடும் என்ற நிலையில் கடைசி ஓவரை ஸ்டார்க் சிறப்பாக வீசி ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுகொடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 52 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
    ஐசிசி ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட் தற்போது ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. ஐசிசி தற்போது அதிக அளவிலான சர்வதேச சாம்பியன்ஸ் போட்டிகளை நடத்த விரும்புகிறது. இதற்கிடையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையையும் நடத்தி வருகிறது.

    சர்வதேச போட்டிகளை அதிக அளவில் நடத்த வேண்டுமென்றால் நாட்கள் வேண்டும். இதனால் டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைத்தால் ஐசிசி தொடரை நடத்த அதிகமான நாட்கள் கிடைக்கும் என நினைத்தது.

    இதனால் ஐசிசி ஆட்சி மன்றக்குழு ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்டை நான்கு நாட்களாக குறைக்க முன்மொழிந்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரும்பாலான வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவரான அனில் கும்ப்ளே, எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். இது தெளிவாக தெரிகிறது. தற்போதைய காலத்து வீரர்கள் ஐந்து நாள் கிரிக்கெட் விரும்புகிறார்கள்’’ என்றார்.

    அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி வரும் மார்ச் மாதம் முன்மொழிவு குறித்து விவாதம் நடத்த இருக்கிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து எம்எஸ் டோனி நீக்கப்பட்டதால் அவரின் சர்வதேச கிரிக்கெட் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.

    இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார்.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆறு மாதமாக இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதனால் எம்எஸ் டோனியின் சர்வதேச போட்டி முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில் எம்எஸ் டோனி ஏற்கனவே இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டியை விளையாடி விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘பொதுவாக இதன் மூலம் எம்எஸ் டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை அரையிறுதி போட்டிக்குப்பின் அவர் மீண்டும் அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். உலக கோப்பைதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும் என நாள் கேள்விபட்டேன். தானாகவே ஏன் அணியில் இடம் பிடிக்கவில்லை என்பதற்கான மனநிலையை அவர் ஏற்கனவே தயார் படுத்திக் கொண்டார்.’’ என்றார்.
    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் தவான் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.

    இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினர்.

    தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    29-வது ஓவரை கேன் ரிச்சர்ட்சன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை தவான் பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் 96 ரன்னைத் தொட்டர். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 28.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.
    வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.
    வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்று மூன்று வகை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார். டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என வங்காளதேசம் கோரிக்கை விடுத்தது.

    ஆனால் பாகிஸ்தான் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டது. இதனால் இரு அணிகளுக்கு இடையில் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் பாகிஸ்தானின் தொடர் முயற்சியால் வங்காளதேசம் அணி பாகிஸ்தான்  செல்ல சம்மதம் தெரிவித்தது. தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படாமல் ஒருமாத கால இடைவெளியில் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் வங்காளதேச அணியின் அனுபவ மற்றும் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டார். ஏற்கனவே சாஹிப் அல் ஹசன் இல்லாத நிலையில், முஷ்பிகுர் ரஹிமின் முடிவு வங்காளதேச அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பிக் பாஷ் டி20 லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை 100 ரன்னில் சுருட்டி, விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அசத்தியது பிரிஸ்பேன் ஹீட்.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் அடிலெய்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. பிரிஸ்பேன் ஹீட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கேப்டன் கிறிஸ் லின் 26 ரன்களும், ரென்ஷா 43 ரன்களும் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க பிரிஸ்பேன் ஹீட் 100 ரன்னில் சுருண்டது. டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பின்னர் 101 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் சால்ட் மற்றும் வெதரால்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அடிலெய்டு ஸ்டிரைக்கர் விக்கெட் ஏதும் இழக்காமல் 10.5 ஓவரில் 104 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சால்ட் 38 பந்தில் தலா 5 பவுண்டரி, சிக்சர்களுடன் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வெதரால்டு 27 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார்.
    ஷுப்மான் கில், கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து லெவன் அணியை எளிதாக வென்றது இந்தியா ஏ.
    இந்திய ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. நியூசிலாந்து ஏ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா ஏ அணியின் மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஷுப்மான் கில் உடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷுப்மான் அரைசதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் சேர்த்தார். கெய்க்வாட் 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    குருணால் பாண்டியா 31 பந்தில் 41 ரன்கள் சேர்க்க இந்தியா ஏ 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது. அடுத்து நியூசிலாந்து ஏ 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    தொடக்க வீரர்கள் ஜேக்கப் புலா, ஜேக் பாய்ல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேக்கப் புலா 50 ரன்னிலும், ஜேக் பாய்ல் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே நியூசிலாந்து ஏ 187 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ஏ அணி சார்பில் முகமது அஹமது 4 விக்கெட்டும் முகமது சிராஜ் மற்றும் குருணால் பாண்டியா ஆகியோர் தலா  இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் தோற்றுள்ளார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரிஷப் பண்டுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவும், ஷர்துல் தாகூருக்குப் பதில் நவ்தீப் சைனியும் இளம் இறக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள விவரம்

    ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
    கான்பெரா:

    ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

    இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. 

    இந்நிலையில், ஸ்லோவேனியா-செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி  இன்று சந்தித்தது. ஆக்ரோஷமாக விளையாடிய சானியா ஜோடி, எதிரணியை பந்தாடி 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றது. இதன் மூலம் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    குழந்தை பெற்ற பிறகு களம் இறங்கியுள்ள சானியா மிர்சா, அவர் விளையாடும் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×