search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏபி டி வில்லியர்ஸ்
    X
    ஏபி டி வில்லியர்ஸ்

    டி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டும் முடிந்து விடவில்லை என் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ்.  அதிரடி 150, அதிரடி சதம், அதிர அரைசதம் என ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர். கடந்த 2018-ம் ஆண்டு திடீரென ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டுக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கடெ் ரசிகர்களுக்கு அவரது அறிவிப்பு அதிர்ச்சி அளித்தது.

    2019 உலக கோப்பை தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கிடையே அம்லா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது.

    அணியில் மாற்றம் கொண்டு வர ஸ்மித்தை இயக்குனராகவும், மார்க் பவுச்சரை தலைமை பயிற்சியாளராகவும் நியமித்தது. இருவரும் இந்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக ஏபி டி வில்லியர்ஸை மீண்டும் அணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர். ஏபி டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்ப சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நான் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். அதில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. நான் எப்போதுமே தென்ஆப்பிரிக்காவுக்காக விளையாட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரிய கவுரவம்.

    நான் மார்க் பவுச்சர் மற்றும் ஸ்மித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன. மேலும் சிலர் அதில் இணைந்திருந்தார்கள். ஆகவே, சாத்தியக்கூறு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. நான் விளையாடுவதற்கான சில சிறந்த விவாதம் நடைபெற்றது. நான் விளையாடும் டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக ரன்கள் அடிக்க வேண்டும்.

    டிசம்பரில் இருந்து சில டெஸ்ட் போட்டிகளை பார்த்தேன். கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது மிகவும் சிறந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நினைவுகள் எனது வாழ்க்கையை மாற்றியது. 11 மாதங்கள் நான் விளையாட விரும்பவில்லை. இது அதிகப்படியானது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி இருக்க விரும்பவில்லை. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் முடிந்துவிட்டது’’ என்றார்.
    Next Story
    ×