search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிட்செல் ஸ்டார்க்
    X
    மிட்செல் ஸ்டார்க்

    ஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா?

    மிட்செல் ஸ்டார்க் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதே இல்லையாம், இன்றும் அது பலிக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் பந்தை இந்திய பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் விளாசினர். அவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. 78 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

    மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதே கிடையாதாம். இன்றைய போட்டியிலும் அந்த கணிப்பு பலிக்குமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மிட்செல் ஸ்டார்க்

    இதற்கு முன் மான்செஸ்டரில் 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 2013-ல் பர்மிங்காமில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், இந்தியாவுக்கு எதிராக 2019-ல் 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், 2018-ல் மெல்போர்னில் இங்கிலாந்துக்கு எதிராக 71 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இந்த போட்டிகளில் எல்லாம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×