என் மலர்

  செய்திகள்

  கே எல் ராகுல், கேன் வில்லியம்சன்
  X
  கே எல் ராகுல், கேன் வில்லியம்சன்

  மிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இடைநிலை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடுவதற்காக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்ட வீடியோக்களை பார்த்ததாக கே.எல் ராகுல் கூறியுள்ளார்.
  ராஜ்கோட்:

  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 80 ரன்கள் குவித்த கே.எல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

  இந்நிலையில், இடைநிலை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடுவதற்காக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்ட வீடியோக்களை பார்த்ததாக கே.எல் ராகுல் கூறியுள்ளார்.

  உலக கோப்பை போட்டிகளின் போது காயமடைந்த இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் அணிக்கு திரும்பியுள்ளதால் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலை எந்த வரிசையில் களமிறக்குவது என்ற குழப்பம் இந்திய அணிக்கு இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கான முதல் போட்டியில், ராகுல் முதல் விக்கெட்டுக்கு அடுத்ததாக களம் இறங்கினார். சற்று சமாளித்து ஆடினாலும் விராட் கோலி அவருக்கு பின்னர் களமிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அணிக்கு சற்று நெருடலாக கருதப்பட்டது.

  டி வில்லியர்ஸ், ஸ்மித்

  அப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், கே.எல் ராகுல் நேற்றைய போட்டியில் 4 வது வீரராக களமிறங்கினார். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்த ராகுல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

  இதுகுறித்து ராகுல் தெரிவிக்கையில் ‘நான் மிகச்சிறந்த முறையில் ஏதும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கி எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனைகள் பெற்றேன். அதுமட்டுமல்லாது மிடில் ஆர்டரில் ஜொலித்த முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட வீடியோக்களை பார்த்தேன். அதே போல் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்ட வீடியோக்களையும் பார்த்து, ஆட்டத்தை எவ்வாறு நேர்த்தியானதாக மாற்றுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்’ என்றார். 
  Next Story
  ×