என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெற்றி பெறும் அணிக்கு 2 புள்​ளி​கள் வழங்​கப்​படும். தோல்வி அடை​யும் அணிக்கு புள்​ளி​கள் கிடை​யாது.
    • ஆட்டங்கள் டையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க 5 ரைய்டுகள் கொண்ட ஷூட் அவுட் நடத்தப்படும்.

    மும்பை:

    புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது.

    12-வது சீசன் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் புரோ கபடி லீக் போட்டியின் லீக் சுற்றில், போட்டி அமைப்பாளர்கள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்படி லீக் சுற்று 108 ஆட்டங்களை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்களில் விளையாடும். டை-பிரேக்கர் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களுக்கும் கோல்டன் ரைய்டும் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்னர் கோல்டன் ரைய்டு, பிளே ஆப் சுற்றுகளில் மட்டுமே இருந்தது. இனிமேல் ஆட்டங்கள் டையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க 5 ரைய்டுகள் கொண்ட ஷூட் அவுட் நடத்தப்படும். 5 ரைய்டுகளுக்கு பிறகும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், கோல்டன் ரைய்டு விதி அமல்படுத்தப்படும்.

    கோல்டன் ரைய்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், டாஸ் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். புள்ளிகள் வழங்குவதிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.

    • இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது.
    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

    சென்னை:

    மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மராட்டியத்தின் தேஜஸ் ஷிர்ஸ் தங்கப்பதக்கமும் (13.60 வினாடி), தமிழகத்தின் மனவ் வெள்ளிப்பதக்கமும் (14.03 வினாடி) வென்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. சென்னையை சேர்ந்த நந்தினி 13.45 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்தார். மேற்கு வங்காளத்தின் மவுமிதா மோண்டல் தங்க மங்கையாக (13.22 வினாடி) ஜொலித்தார்.

    இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது. பெண்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பவித்ரா, ஏஞ்சல் சில்வியா, அபினயா, தனலட்சுமி ஆகியோர் அடங்கிய தமிழக அணியினர் 44.73 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டிப்பிடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.

    கர்நாடகா வெள்ளிப்பதக்கத்தை (45.34 வினாடி) வசப்படுத்தியது. இதன் ஆண்கள் பிரிவில் ஒடிசாவிடம் பின்தங்கிய அருண், ராகுல் குமார், வருண் மனோகர், தமிழரசு ஆகியோரை கொண்ட தமிழக அணியினர் 2-வது இடம் (39.80 வினாடி)பிடித்தனர். 4x400 மீட்டர் கலப்புதொடர் ஓட்டத்தில் தமிழகம் வெண்கலம் பெற்றது.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் டாப்-2 இடங்களை கேரளாவின் கார்த்திக், அப்துல்லா அபூபக்கர் பிடித்த நிலையில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 16.35 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஆண்கள் பிரிவில் கேரளாவின் பிலின் ஜார்ஜ் ஆண்டோவும் (1 மணி 29 நிமிடம் 35.12 வினாடி). பெண்கள் பிரிவில் அரியானாவின் ரவினாவும் (1 மணி 35 நிமிடம் 13.49 வினாடி) மகுடம் சூடினர். தமிழகத்தின் மோகவி முத்துரதினா வெண்கலப்பதக்கத்தை (1 மணி 41 நிமிடம் 34.72 வினாடி) கைப்பற்றினார்.

    தமிழக அணிக்கு இதுவரை 8 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம்19 பதக்கம் கிடைத்துள்ளது.

    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.
    • இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த நிலையில், மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது.

    ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.

    இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.

    அதன்படி, வரும் நவம்பரில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    ஷிம்கென்ட்:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    அவர் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.

    மெக்காய்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 5 விக்கெட்டும், பர்கர், செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே அந்தப் போட்டிகள் அனைத்திலும் 50+ ரன்கள் அடித்துள்ளார்.

    தனது முதல் போட்டியில் 150 ரன்கள் அடித்து அசத்தியவர், அடுத்த 3 போட்டிகளிலும் முறையே 83, 57 மற்றும் 88 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பிரீட்ஸ்கே படைத்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இதற்குமுன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியின் போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில், குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அப்போது, ஓய்வுமுடிவு குறித்த ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அது தனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

    சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.

    என்று அஸ்வின் கூறினார்.

    • ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.
    • ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    மும்பை:

    இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த செய்தி பொய்யானது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    மெக்காய்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரீட்ஸ்கே 88 ரன்களும், ஸ்டப்ஸ் 74 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், மார்ஷ் 18 ரன்களிலும், லபுஸ்சேன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிரீன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து அலெக்ஸ் கேரி 13 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 10 ரன்களிலும் நடையை கட்டினர். இதனையடுத்து அணியின் வெற்றிக்கு போராடிய ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

    இதனால் 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை ரிங்கு சிங் விளாசினார்.
    • ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் ரில் மீரட் மேவரிக்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார்.

    ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரிங்கு சிங், 34 பந்துகளில் 57 ரன்களை எட்டியிருந்தார். அதன் பிறகு பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். மொத்தமாக 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன் காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

    வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

    இதனால் அணி நிர்வாகத்துக்கு ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கேரளாவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. 

    இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது.

    பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் முதல் அரையிறுதி போட்டி கவுதாத்தி அல்லது இலங்கையில் நடைபெறும். 2-வது அரையிறுதி நவி மும்பையில் நடைபெறும். இறுதிப்போட்டி நவி மும்பை அல்லது இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    • 49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மெக்காய்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 98 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மார்க்ரம் ரிக்கல்டன் களமிறங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் டக் அவுட்டிலும், ரிக்கல்டன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த டோனி டி சோர்சி தனது பங்குக்கு 38 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த பிரீட்ஸ்கே - ஸ்டப்ஸ் இணை சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரீட்ஸ்கே 88 ரன்களிலும், ஸ்டப்ஸ் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிரெவிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார். பின்வரிசையில் முல்டர் (26 ரன்கள்), மகராஜ் (22 ரன்கள்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

    49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளும், லபுஸ்சேன், சேவியர் பார்ட்லெட் மற்றும் நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது. 

    • இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் இந்த மசோதா சட்டமானால் பெரு நிறுவனங்கள் பல அடி வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் பெட்டிங் கம்பெனிகள். அதிலும் பிரபலமாக விளங்கும் Dream 11, MPL (மொபைல் பிரீமியர் லீக்) ஆகியவை.

    எனவே இந்நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    Dream 11 உடைய தாய் நிறுவனமான Dream sports மற்றும் MPL இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.  

    ×