என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
    X

    ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

    • 49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மெக்காய்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 98 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மார்க்ரம் ரிக்கல்டன் களமிறங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் டக் அவுட்டிலும், ரிக்கல்டன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த டோனி டி சோர்சி தனது பங்குக்கு 38 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த பிரீட்ஸ்கே - ஸ்டப்ஸ் இணை சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரீட்ஸ்கே 88 ரன்களிலும், ஸ்டப்ஸ் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிரெவிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார். பின்வரிசையில் முல்டர் (26 ரன்கள்), மகராஜ் (22 ரன்கள்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

    49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளும், லபுஸ்சேன், சேவியர் பார்ட்லெட் மற்றும் நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது.

    Next Story
    ×