என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று முன்தினம் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    நாங்கள் இந்த தளத்தில் கருத்துகளை வெளியிட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே சென்றுவிடவில்லை. அமைதியாக இருப்பது என்பது இல்லாமல் போய்விட்டதாக இல்லை. இது துக்கம். ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு நினைவுகளை கூறும் வகையில் சக்தியுடன் நீங்கள் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஆனால் ஜூன் 4-ந்தேதி (கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்) இது அனைத்தையும் மாற்றிவிட்டது.

    அந்த நாளில் நமது இதயம் வெடித்து சிதறியது. அதன் பிறகு ஏற்பட்ட அமைதி நமது இடத்தை நிறுத்தி வைத்தது. இந்த அமைதியில் நாங்கள் துக்கத்தில் இருந்தோம், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தோம், கற்றுக் கொண்டிருந்தோம். இப்போது நிதானமாக வெறும் பொறுப்பை தாண்டி நாங்கள் மீண்டும் ஏதாவது செய்வதை தொடங்கி இருக்கிறோம். இதில் நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    நாங்கள் இன்று (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம். உங்களுடன் கூட்டாக நிற்க, முன்னேறி நடக்க தயாராக உள்ளோம். கர்நாடகத்தின் பெருமையாக இருக்க நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆர்.சி.பி. கேர்ஸ் நிதி குறித்து முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    • லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.

    இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.

    இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.

    அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார். 



    • 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென் காவை தோற்கடித்தார்.
    • சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த 32-வது வரிசையில் உள்ள லுசியானோ டார்டெரியை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 44 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-7 ( 4-7 ),6-2 ,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 50 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன், பிரான்சிஸ்தியபோ (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பிய னும், முதல் நிலை வீராங்க னையுமான சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் கனடா வை சேர்ந்த லெய்லா பெர்னாண்டசை சந்தித்தார். இதில் சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), புக்சா (ஸ்பெ யின்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    7-வது வரிசையில் இருக்கும் ஜாஸ்மின் பயோ லினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை எம்மா நவரோவா (அமெரிக்கா) ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பிரிட்டனின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.

    முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சல்மான் ஆகா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கேப்டன் ரஷீத்கான் அதிரடியாக ஆடி 16 பந்தில் 5 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மயர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜெர்மனி வீரர் முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சிட்சிபாஸ் அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வென்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட டேனியல் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 298 ரன்களைக் குவித்தது.
    • பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து வெளியேறினர்.

    ஹராரே:

    இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 6 விக்கெட்டுக்கு 298 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 76 ரன்னில் அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்தார்.

    பொறுப்புடன் ஆடிய சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தார். அணியை வெற்றி பெறவைக்கப் போராடிய அவர் 92 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    சிக்கந்தர் ராசா அவுட்டாகும்வரை இலங்கை அணிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை.

    இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் 12 புள்ளிகள் எடுத்தார்.
    • கேப்டன் பவன் ஷெராவத் போனஸ் புள்ளிகள் 2 உள்பட 9 புள்ளிகள் எடுத்தார்.

    12ஆவது ப்ரோ கபடி லீக் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் போனஸ் பாயிண்ட் 5 உள்பட 12 புள்ளிகள் ரெய்டு மூலம் எடுத்தார். இவருக்கு 9 ரெய்டு வெற்றியாக அமைந்தது. 6 ரெய்டுகளில் புள்ளிகள் கிடைக்கவில்லை. 5 ரெய்டில் பிடிபட்டார். கேப்டன் பவன் ஷெராவத் போனஸ் புள்ளிகள் 2 உள்பட 9 புள்ளிகள் ரெய்டுகள் மூலம் அணிக்கு தேடிக்கொடுத்தார்.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பரத் ரெய்டு மூலம் 9 புள்ளிகளும், எதிரணி வீரர்களை பிடித்தது மூலம் 2 புள்ளிகளும் என மொத்தம் 11 புள்ளிகள் அணிக்கு தேடிக்கொடுத்தார்.

    • முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது.
    • 30 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.

    8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று பீகாரில் உள்ள ராஜ்கிரில் தொடங்கியது. "ஏ" பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் தென்கொரியா, மலேசியா, வங்கதேசம், சீன தைபே அணிகள் இடம் பிடித்துள்ளன.

    இன்று இந்தியா முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்தியா நாளைமறுநாள் தனது 2ஆவது போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெறும். ஹர்மன்ப்ரீத் சிங் 20, 33, 47 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தார். ஜுக்ராஜ் சிங் 18ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். சீனா 12, 35, 41 ஆவது நிமிடங்களில் கோல் அடித்தது.

    ஆட்டத்தின் முதல் கால்பகுதி நேரத்தின்போது, 12ஆவது நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஷியாயோ டு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2ஆவது 15ஆவது நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல் அடித்தது. 18ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார். 20ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் 30 நிமிட ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க 35ஆவது நிமிடத்தில் பென்ஹாய் சென் கோல் அடித்தார். 41ஆவது நிமிடத்தில் சீன வீரர் ஜியேஷெங் கயோ கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.

    கடைசி கால் பகுதி ஆட்டத்தின்போது, இந்தியா இரண்டுக்கும் அதிகமான பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதில் ஒன்றை (47) நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது.

    • 2ஆவது கேம்-ஐ 21-13 எனக் கைப்பற்றினார்.
    • ஆனால், முதல் மற்றும் 3ஆவது கேம்- இழந்தார் ஏமாற்றம் அடைந்தார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி வர்தானியை எதிர்கொண்டார். முதல் கேம்-ஐ 14-21 என பிவி சிந்து இழந்தார்.

    என்றாலும் 2ஆவது கேமில் சுதாரித்துக் கொண்டு அபாரமான விளைாடினார். இதனால் 2ஆவது கேம்-ஐ 21-13 என எளிதாக வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது கேமில் இந்தோனோசியா வீராங்கனை அபாரமாக விளையாடினார். இதனால் பிவி சிந்து 16-21 என இழந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×