என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    வெலிங்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.

    அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் மிட்செல் 2-வது போட்டியில் இருந்து விலகியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஒருநாள் தொடரில் இருந்தே அவர் விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது இடத்தை பிடித்தது.
    • கடந்த சீசன் முடிந்தவுடன் சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.

    இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து விட்டு அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.

    மேலும் சென்னை அணியில் இருந்து பல வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதனால் எந்த வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவுள்ளது என்ற ஆவல் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அணியின் இத்தனை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக போன சீசன் அமைந்தது ஆகும். கடந்த சீசனில் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. குறிப்பாக சென்னையில் விளையாடி நிறைய போட்டிகள் தோல்வியடைந்தது.

    இதனால் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஐபிஎல் சீசன் முடிந்த உடனே ஜூன் மாதம் இதற்கான வேலையை அணி நிர்வாகம் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச போட்டிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மைதானத்தை புதுபிக்க முதன்மை காரணம், உலகத் தரம் வாய்ந்த வடிகால் அமைப்பை நிறுவுதல், அவுட்ஃபீல்டை மாற்றுதல், பிட்ச் மற்றும் புல் மேற்பரப்பை மேம்படுத்துதல் ஆகும். இதனால் மழை பெய்த பிறகு விரைவாக விளையாட்டைத் தொடர அனுமதிக்கும் மற்றும் உயர்தர போட்டிகளை உறுதிப்படுத்தவும் ஆகும்.

    இந்நிலையில் இந்த மைதானத்தை புதுபிக்க நடந்த வேலைகள் குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியன்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் வேலை தொடங்கியதில் இருந்து மைதானம் ரெடியாகும் வரை உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடுவது நல்லது.
    • பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலையிடக்கூடாது.

    கொல்கத்தா, நவ.18-

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடி யாமல் 93 ரன்னில் சுருண்டு படு தோல்வி அடைந்தது.இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந் தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.

    தொடக்க நாளில் இருந்தே கொல்கத்தா ஆடு களம் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந் தது. இது மாதிரியான பிட்சை அமைக்குமாறு ஆடு கள பராமரிப்பாளரிடம் பயிற்சியாளர் காம்பீர் கேட் டுள்ளார். இதனால் தான் இந்திய அணி 4 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங் கியது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்க ளாலும் இந்த ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆட முடிய வில்லை. இதனால் காம்பீர் கடும் விமர்சனத்தை சந்தித் துள்ளார்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர்கள் புஜாரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடுகளம் தொடர்பாக காம்பீரை சாடி இருந்தனர்.

    இந்த நிலையில் முன் னாள் கேப்டனும், டெலிவி சன் வர்ணனையாளருமான கவாஸ்கரும் இது தொடர் பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆடுகளத் தின் தன்மை தொடர்பாக தலையிடக்கூடாது என்று அவர் காம்பீரை அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    ஆடுகள பராமரிப்பாள ரை நீங்கள் (காம்பீர்) தனி யாக விட்டு விட வேண்டும். பிட்ச் நிலைமைகளை உத்தர விட முயற்சிக்கக் கூடாது. அது சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடு வது நல்லது. ஏனென்றால் அவர் மற்றவர்களை விட தனது வேலையை பற்றி நன்கு அறிவார்.

    பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலை யிடக்கூடாது. இதனால் ஏற் படும் விளைவுகளை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • தொடர்ந்து 19-வது முறையாக உலக கோப்பையில் ஜெர்மனி ஆடுகிறது.
    • 12-வது தடவையாக நெதர்லாந்து உலக கோப்பைக்கு முன்னேறி இருக்கிறது.

    லீப்ஜிக்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா-8, ஆப்பிரிக்கா-9, வட, மத்திய அமெரிக்கா கரீபியன்-3, தென்அமெரிக்கா-6, ஓசினியா-1, ஐரோப்பா-16.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான பிளே-ஆப்ஸ் மூலமாக 2 அணிகளுமாக,மொத்தம் (43+3+2) 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் தேர்வாகும்.

    நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் நகரில் நடந்த ஆட்டத்தில் ஜெர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி 'ஏ' பிரிவில் 15 புள்ளிகளை பெற்று தகுதி பெற்றது.

    4 முறை உலக கோப்பையை கைப்பற்றிய அந்த அணி தொடர்ந்து 19-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. ஒட்டுமொத்தத்தில் 21-வது தடவையாக தகுதி பெற்றுள்ளது. சுலோ வாக்கியா 12 புள்ளிகளுடன் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

    ஐரோப்பிய தகுதி சுற்று 'ஜி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லுதுனியாவை தோற்கடித்தது. இதன் மூலம் அந்த பிரிவில் 20 புள்ளிகளை பெற்று உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது.

    12-வது தடவையாக நெதர்லாந்து உலக கோப்பைக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி 3 முறை 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த பிரிவில் போலந்து 17 புள்ளியுடன் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் வருமாறு:-

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ் , குரோ ஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 31 அணிகள் என இதுவரை 34 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 12 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
    • தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பையை இந்தியா வென்றது.
    • ஸ்மிருதி மந்தனாவுக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக ஸ்மிருதி மந்தனா போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் ஒரு பெருமையான தருணம்.
    • நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள்

    ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

    இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இளம் பாகிஸ்தான் அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

    மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இன்று என்ன ஒரு பெருமையான தருணம்! எங்கள் பாகிஸ்தான் அணி 13.2 ஓவர்களில் இலக்கை துரத்தி, இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இது தோஹாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அச்சமற்ற மற்றும் மறக்க முடியாத செயல்திறன். நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கிறது. தேசத்திற்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம்.
    • கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.

    கொல்கத்தா:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களிடம் சரியான டெக்னிக் இல்லாதது தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்,

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கொல்கத்தாவில் ஆடுகளத்தைப் பார்த்தேன். ஸ்கோரைப் பார்த்தேன். முடிவையும் பார்த்தேன். இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடிக்கவும், ஸ்விட்ச்-ஹிட் ஆடவும்தான் கற்றுக்கொள்கிறார்கள்.

    வீரர்களுக்கு பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். இதில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது, தற்கால கிரிக்கெட்டின் போக்கே இதுதான். கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.

    இப்போதைய கிரிக்கெட் பணத்தை சுற்றித் தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால், நான் பேசுவேன், ஏனென்றால் அதுதான் உண்மை. வீரர்களுக்கு அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

    என்று கெவின் பீட்டர்சன் கூறினார்.

    • இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஒரு கேட்ச் சர்ச்சையானது.

    தோஹா:

    தோஹாவில் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 'ஏ' அணி, பாகிஸ்தான் ஏ அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் விரட்டி பிடித்து வெற்றி பெற்றது.

    முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது சர்ச்சைக்குரிய கேட்ச் சம்பவம் அரங்கேறியது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

    பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த நேஹல் வதேரா மற்றும் நமன் தீர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்தனர்.

    பந்து சிக்ஸருக்குச் செல்வதைத் தடுத்த நேஹல் வதேரா, பவுண்டரி லைனுக்கு வெளியே செல்வதற்கு முன்பு பந்தை மேலே தூக்கி எறிந்தார். பவுண்டரி லைனுக்குள் இருந்த மற்றொரு வீரரான நமன் தீர், அந்தப் பந்தைப் பிடித்தார்.

    இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்துவிட்டதாகக் கொண்டாடத் தொடங்கினர். பேட்ஸ்மேன் சதகத்தும் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, இறுதியில் 'நாட் அவுட்' என்று அறிவித்தது,

    நடுவரின் இந்த முடிவால் குழப்பமும், விரக்தியும் அடைந்த இந்திய கேப்டன் ஜித்தேஷ் சர்மா மற்றும் வீரர்கள், நடுவரிடம் சென்று, "ஏன் அவுட் இல்லை?" என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஐசிசி-யின் விதி 19.5.2-இன்படி, ஒரு பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்து காற்றில் பறந்தபடி பந்தைத் தொடலாம். ஆனால், காற்றில் பறந்து பந்தைத் தொட்ட பிறகு, அவர் மீண்டும் தரையைத் தொடுவதற்கு முன்பு பந்து கையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். பந்தைப் பிடித்த பிறகு, பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டால், அது சிக்சராக அறிவிக்கப்படும்.

    இந்தச் சம்பவத்தில், நேஹல் வதேரா பந்தை முதல்முறை தொட்ட பிறகு, அதை நமன் திர் பக்கம் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பிறகு, அவர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டாலும், பந்து அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, பந்து இன்னும் ஆட்டத்தில் இருந்ததாகவே கருதப்படும். நமன் தீர் பிடித்த கேட்ச் முற்றிலும் சரியானதும், விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.

    ஒருவேளை பந்தை வீசிய வதேரா பவுண்டரி லைன்க்கு உள்ளேயே இருந்ததால் இது நாட் அவுட் கொடுக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    வெலிங்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.

    அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த 2-வது போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டேரில் மிச்செல் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் அவர் 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 தங்க பதக்கத்துடன் இந்தியா 3ஆவது இடம் பிடித்துள்ளது.
    • சீனா 12 தங்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது.

    எகிப்து நாட்டின் கெய்ரோவில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் குர்ப்ரீத் சிங் ஆண்களுக்கான 25மீ சென்டர் பையர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் தங்கமும், பிரான்ஸ் வீரர் வெண்கல பதக்கமும் வென்றனர்.

    ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்தியா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 13 பதக்கங்களை வென்றது.

    சீனா 12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றது. தென்கொரியா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்றது.

    சம்ரத் ராணா (10மீ ஏர் பிஸ்டல்), ரவீந்தர் சிங் (50மீ ஸ்டேண்டர்டு பிஸ்டல் மற்றும் 10 மீ ஏர் பிஸ்டல் அணி) ஆகியோர் தங்கம் வென்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தனர்.
    • முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

    ×