என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது.
    • ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் என்னால் வீழ்த்த முடியவில்லை.

    இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்துவேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடர் மற்றுமல்லாமல் மற்ற போட்டியிலும் விராட் கோலியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் உலக கோப்பையில் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. டி20 போட்டிகளில், நான் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு 1 ரன்களை வழங்க முயற்சிக்கிறேன். ஒரு ரன் எடுப்பதால் யாரும் திருப்தி அடைவதில்லை. 50 ஓவர்களில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். விக்கெட்டுகளைப் பெறுவதற்கு சில தந்திரங்களைச் செய்ய வேண்டும். பவர்பிளேயில் பந்துவீசுவது டெத் ஓவர்களில் பந்து வீசுவது வேறு விதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
    • 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். 2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இவர் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் அதிக ரன்களை குவித்து சிறப்பான வீரர் என நிரூபித்துள்ளார்.

    3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
    • ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை

    ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

    ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

    இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • தினேஷ் கார்த்திக் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார்.
    • திருமணநாளான நேற்று அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இவர் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணநாளான நேற்று அவர் சமூக ஊடகங்களில் அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    அதில் "ஆண்டுகள் கடந்தும் நம் இருவரின் முட்டாள்தனத்தால் உண்மையான காதல் வாழ்கிறது டிகே-டிபி தின வாழ்த்துக்கள்," என்று கூறியிருந்தார்.


    இந்த டுவிட் சமூக வலைதளங்களில் டிராண்டாகி வருகிறது. இவர்களது திருமணநாளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது.
    • இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

    ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஏனா குவாங்கை வீழ்த்தினார்.

    முன்னதாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் டோய்ஸ் லீயையும், அரை இறுதி ஆட்டத்தில் விட்னி இசபெல் வில்சனையும் வீழ்த்தினார் அனாஹத்சிங். கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற தொடரிலும் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

    • பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
    • இரு ஆட்டங்களும் ‘டிரா’ ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது.

    பாகு:

    உலக கோப்பை செஸ் போட்டி தொடர் அஜர்பை ஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார்.

    அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

    இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம் இன்று நடக்கிறது.

    மற்றொரு அரை இறுதியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற கணக்கில் நிஜாத் அபா சோவை (அஜர்பைஜான்) வீழ்த்தினார்.

    • பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
    • தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சிந்து நேரடியாக 2-வது சுற்றில் களம் காணுகிறார்.
    • சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன. சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர்.

    2019-ம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டு வரலாறு படைத்த பி.வி.சிந்துவின் ஆட்டத்திறனில் சமீபகாலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக எந்த பட்டத்தையும் வெல்லாத அவர் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும் அந்த மோசமான நிலைமையை மாற்றுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தன்னை தயார்படுத்தி வருகிறார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் சிந்து, அடுத்தடுத்து ரவுண்டுகளில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து), நம்பர் ஒன் புயல் அன் சே யங் (தென்கொரியா) ஆகிய பலம்வாய்ந்த எதிராளிகளை சந்திக்க வேண்டி வரும்.

    இந்த தடைகளை வெற்றிகரமாக அவர் கடந்தால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா) முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    ஆண்கள் பிரிவில் அண்மை காலமாக சிறப்பாக விளையாடி வரும் 9-ம் நிலை வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனையும் (பின்லாந்து), லக்ஷயா சென், மொரீசியசின் ஜார்ஜெஸ் ஜூலியன் காலையும், இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவையும் சந்திக்கிறார்கள்.

    சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    1977-ம் ஆண்டு முதல் நடக்கும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. அந்த எண்ணிக்கை மேலும் உயருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதன் பின்னர் தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    இறுதியில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பலிவாங்கும் விதமான இந்த இறுதிபோட்டியில் அல்காரஸை வீழ்த்தினார் ஜோகோவிச்.

    • அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அத்துடன், டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா 185 ரன்களை சேர்த்தது. ருத்ராஜ் கெய்க்வாட் அரை சதமடித்து 58 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

    அடுத்து ஆடிய அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரிங்கு சிங்குக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் பும்ரா பேசியதாவது:

    வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

    விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்.

    திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 166 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2வது போட்டியில் யு.ஏ.இ.யும் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் யங் 56 ரன்னும், மார்க் சாப்மன் 51 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    ஆயன் அப்சல் கான் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். பசில் ஹமீது 24 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    நியூசிலாந்தின் வில் யங் ஆட்ட நாயகன் விருதும், சாப்மன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • இதில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    ஆரம்பம் முதலே கோகோ காப் சிறப்பாக ஆடினார். இறுதியில், கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ×