என் மலர்
நீங்கள் தேடியது "அனாஹத் சிங்"
- கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார்.
- காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை அனாஹெத் வீழ்த்தியுள்ளார்.
கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் அனாஹெத், மற்றும் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தின் டின்னே கில்லிஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அனாஹெத் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட்களில் கில்லிஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் 43-வது இடத்தில் உள்ள வீராங்கனை அனாஹெத் 7-வது இடத்தில் உள்ள வீராங்கனையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.
இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் முதல் 10 வீராங்கனைக்கு எதிரான முதல் வெற்றியாகும்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 20-ம் நிலை வீராங்கனை பிரான்சின் மெலிசா ஆல்வ்ஸையும் இவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் அனாஹத் சிங்.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.
கெய்ரோ:
எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் நம்பர்-2 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.
இதில் அனாஹத் 6-11, 12-14, 10-12 என்ற செட் கணக்கில் 0-3 என தோல்வி அடைந்தார். இதனால் அனாஹத் சிங்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.
- ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது.
- இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஏனா குவாங்கை வீழ்த்தினார்.
முன்னதாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் டோய்ஸ் லீயையும், அரை இறுதி ஆட்டத்தில் விட்னி இசபெல் வில்சனையும் வீழ்த்தினார் அனாஹத்சிங். கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற தொடரிலும் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
- அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது என அனாஹத் சிங் கூறினார்.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில். 64 வது சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங் (14 வயது), செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் வீராங்கனை ஜாடா ரோஸ் ஆகியோர் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இது மிகவும் உற்சாகமானது. போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது தனது வெற்றி தொடக்கத்திற்குப் பிறகு அனாஹத் சிங் கூறினார்.






