என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Junior Squash Championships"

    • உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் அனாஹத் சிங்.
    • 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.

    கெய்ரோ:

    எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.

    இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் நம்பர்-2 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.

    இதில் அனாஹத் 6-11, 12-14, 10-12 என்ற செட் கணக்கில் 0-3 என தோல்வி அடைந்தார். இதனால் அனாஹத் சிங்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.

    சென்னையில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது. #squash
    சென்னையில் வருகிற 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகள் இந்தியா வர, இந்திய தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    ஆனால், இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. பின்னர் பாகிஸ்தான் ஸ்குவாஷ் பெடரேசன் உலக ஸ்குவாஷ் பெடரேசன் மற்றும் ஆசிய ஸ்குவாஷ் பெடரேசன் ஆகியவற்றை அனுகிறது.



    அவர்களிடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வலிறுத்தியது. இந்நிலையில் இந்திய தூதரகம் அனைவரும் விசா வழங்கியுள்ளது.
    ×