என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Squash FederationWorld Squash Federation"

    சென்னையில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது. #squash
    சென்னையில் வருகிற 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகள் இந்தியா வர, இந்திய தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    ஆனால், இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. பின்னர் பாகிஸ்தான் ஸ்குவாஷ் பெடரேசன் உலக ஸ்குவாஷ் பெடரேசன் மற்றும் ஆசிய ஸ்குவாஷ் பெடரேசன் ஆகியவற்றை அனுகிறது.



    அவர்களிடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வலிறுத்தியது. இந்நிலையில் இந்திய தூதரகம் அனைவரும் விசா வழங்கியுள்ளது.
    ×