என் மலர்
விளையாட்டு
- எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.
இதனையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார். அவர் டென்மார்க் வீரரான நிஷிமோட்டோவிடம் 14-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
- உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
- அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடம் முடிகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.
முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.
இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என இந்தோனேசியா செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
- ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
நடந்து முடிந்த ஐபிஎல் கோப்பையையே கேப்டன் டோனி, ராயுடுவை அழைத்து சென்று வாங்கினார். இதன் பின் ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு சர்வதேச அளவிலான லீக் தொடர்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரிலும் விளையாட அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதிலும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் மும்பை அணி நிர்வாகத்துடன் அம்பாதி ராயுடு கைகோர்த்துள்ளார். அந்த அணியில் பொல்லார்ட், டுவைன் பிராவோ உள்ளிட்டோர் ஏற்கனவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
- இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.
அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.
அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.
- நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
- உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை.
சிட்னி:
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சிட்னியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்ததுடன் உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த வீராங்கனை சிறிது நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ருபியாலெஸ் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இது சர்ச்சையாக வெடித்தது. ருபியாலெசை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை மந்திரி ஐரினே மோன்டேரோ ஆகியோர், அவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கண்டித்தனர்.
இதையடுத்து சில மணி நேரத்திற்கு பிறகு ஹெர்மோசா சார்பில் ஸ்பெயின் கால்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டது. அதில், 'உலகக் கோப்பையை வென்ற எல்லையற்ற மகிழ்ச்சியில் திடீரென இயல்பாக நடந்த விஷயம் அது. எனக்கும் சங்க தலைவர் ருபியாலெசுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. வீராங்கனைகளிடம் எப்போதும் அவர் கண்ணியமுடன் நடந்து கொள்வார்' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முத்த விவகாரத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ருபியாலெஸ் நேற்று மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும்போது மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடமாகும்' என்றார்.
- சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் இதில் கலந்து கொள்ளலாம்.
- இ-மெயில் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம்.
சென்னை:
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சான் அகாடமி கல்வி குழுமம் சார்பில் பள்ளி அணிகளுக்கான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் இதில் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 28-ந் தேதிக்குள், 'செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolleyballassn@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.
- இந்திய அணியில் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
- அணியில் தேர்வாகாதது குறித்து சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவு.
ஆசிய கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த அணியில் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அணியில் தேர்வாகாதது குறித்து சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் மேகமூட்டத்துடன் இருக்கும் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
- உலக கோப்பை செஸ் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.
- ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய் பின்லாந்தின் கால்லே கோல்ஜோனெனுடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஹோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய் பின்லாந்தின் கால்லே கோல்ஜோனெனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜய்-ராஜேஸ்வரி குமாரி தம்பதியின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
- பாபா அபராஜித்-ஜெயவீனா திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
சென்னை:
தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் பாபா அபராஜித் அவர் முதல்தர போட்டியில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4571 ரன் எடுத்து உள்ளார்.
2012-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பை போட்டியில் துணை கேப்டனாக பணிபுரிந்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்திய 'ஏ' அணிக்காக 100 போட்டியில் விளையாடி 3768 ரன் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா-டாக்டர் ரேவதி தம்பதியின் மகனான 29 வயதான பாபா அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜய்-ராஜேஸ்வரி குமாரி தம்பதியின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
பாபா அபராஜித்-ஜெயவீனா திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
மணமக்களை நேரில் வாழ்த்தியவர்கள் விவரம்:- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், சித்ரா சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழுநேர இயக்குனர் ரூபா குருநாத், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் பிரபு, சிவக்குமார், அரவிந்த்சாமி, கார்த்தி, விஜய்சேதுபதி, பொன்வண்ணன், எஸ்.வி.சேகர், நாசர், ரமேஷ் கண்ணா, அஜய் ரத்தினம், நடிகைகள் ரேவதி, சுஹாசினி, மஞ்சு பார்கவி, சித்தாரா இயக்குனர்கள் மணிரத்தினம், சித்ரா லட்சுமணன், ராஜீவ் மேனன் மற்றும் தோட்டா தரணி.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பரத் அருண், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், விஜய்சங்கர், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், வீராங்கனைகள் சுதாஷா, காமினி, நிரஞ்சனா, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தமிழ்நாடு ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினார்கள்.
- ஆசிய தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- இந்தியா ஒரு அணி மீது மட்டும் கவனம் செலுத்தும் என்று நான் நினைக்கவில்லை.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன.
இந்திய அணி ஆசிய தொடருக்கான அணியை இன்று அறிவித்தது. இந்த அணிதான் உலக கோப்பை தொடரிலும் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பது எனக்கு தெரியாது எனவும் இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா ஒரு அணி மீது மட்டும் கவனம் செலுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு ஆட்டத்தையும் சரியாக விளையாடதான் முயற்சிப்பார்கள். இறுதிப் போட்டிக்கு வருவார்கள், சிறந்த ஆட்டத்தையே எதிர்பார்க்கிறேன். உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்தியா உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கங்குலி கூறினார்.
- ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது.
- ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் என்னால் வீழ்த்த முடியவில்லை.
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்துவேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடர் மற்றுமல்லாமல் மற்ற போட்டியிலும் விராட் கோலியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் உலக கோப்பையில் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. டி20 போட்டிகளில், நான் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு 1 ரன்களை வழங்க முயற்சிக்கிறேன். ஒரு ரன் எடுப்பதால் யாரும் திருப்தி அடைவதில்லை. 50 ஓவர்களில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். விக்கெட்டுகளைப் பெறுவதற்கு சில தந்திரங்களைச் செய்ய வேண்டும். பவர்பிளேயில் பந்துவீசுவது டெத் ஓவர்களில் பந்து வீசுவது வேறு விதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






