search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baba aparajith"

    • நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜய்-ராஜேஸ்வரி குமாரி தம்பதியின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
    • பாபா அபராஜித்-ஜெயவீனா திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் பாபா அபராஜித் அவர் முதல்தர போட்டியில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4571 ரன் எடுத்து உள்ளார்.

    2012-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பை போட்டியில் துணை கேப்டனாக பணிபுரிந்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்திய 'ஏ' அணிக்காக 100 போட்டியில் விளையாடி 3768 ரன் எடுத்துள்ளார்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா-டாக்டர் ரேவதி தம்பதியின் மகனான 29 வயதான பாபா அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜய்-ராஜேஸ்வரி குமாரி தம்பதியின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    பாபா அபராஜித்-ஜெயவீனா திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

    முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    மணமக்களை நேரில் வாழ்த்தியவர்கள் விவரம்:- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், சித்ரா சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழுநேர இயக்குனர் ரூபா குருநாத், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் பிரபு, சிவக்குமார், அரவிந்த்சாமி, கார்த்தி, விஜய்சேதுபதி, பொன்வண்ணன், எஸ்.வி.சேகர், நாசர், ரமேஷ் கண்ணா, அஜய் ரத்தினம், நடிகைகள் ரேவதி, சுஹாசினி, மஞ்சு பார்கவி, சித்தாரா இயக்குனர்கள் மணிரத்தினம், சித்ரா லட்சுமணன், ராஜீவ் மேனன் மற்றும் தோட்டா தரணி.

    சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பரத் அருண், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், விஜய்சங்கர், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், வீராங்கனைகள் சுதாஷா, காமினி, நிரஞ்சனா, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தமிழ்நாடு ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபராஜித் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதோஷ் பால் - ஜெகதீசன் களமிறங்கினர். பிரதோஷ் பால் 2-வது ஓவரிலேயே போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 7-வது ஓவரில் சிஎஸ்ஜி அணி தனது 2 விக்கெட்டை பறிகொடுத்தது. ஜெகதீசன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 15 ரன்னிலும் லோகேஷ் ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்ஜி அணி 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அபராஜித்துடன் ஹரிஸ் குமார் ஜோடி சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 101 ரன் இருந்தபோது ஹரிஸ் குமார் 20 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபா அபராஜித் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 79 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    • முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
    • சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஏ பிரிவு வீரர்களில் ஆர்வம் காட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம் பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 

    தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

    • இவர்களது திருமணம் ஆகஸ்டு 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
    • அபராஜித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

    சென்னை:

    தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபா அபராஜித். முதல்தர கிரிக்கெட்டில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4,571 ரன்கள் சேர்த்துள்ளார்.

    28 வயதான அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜயின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ஆகஸ்டு 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

    அபராஜித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

    ×