என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • இதுவரை விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

    முதல் 2 ஆட்டத்தில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் பும்ரா வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை.

    இந்திய அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பால் ஸ்டிரிங் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும்.

    இரு அணிகள் இடையே இதுவரை நடந்த 7 டி20 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.

    அம்பந்தோட்டை :

    ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளமாக இலங்கையில் வைத்து நடைபெறுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் நேற்று தொடங்கி, 26-ம் தேதி முடிவடைகிறது.

    இந்நிலையில், நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படிமுதலில் ஆடிய பாகிஸ்தான் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இமாம் ஹல் ஹக் 61 ரன்கள் எடுத்தார். ஷதாப் கான் 39 ரன்னும் எடுத்தார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கில் நடைபெறுகிறது.
    • செப்டம்பர் 27-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இதில் 14-21, 14-21 என்ற நேர் செட்டில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    இந்தத் தொடரில் பி.வி.சிந்து நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிரா ஆனது.
    • இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெற்றது. 35 நகர்வுகள் வரை இந்த போட்டி நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங்கை நோக்கி போட்டி சென்ற காரணத்தால், இருவரும் போட்டியை சமன் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.

    கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இறுதிப்போட்டி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி அளித்துள்ளார். அதில், "கடினமான போட்டியாகத்தான் இருக்கும், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார். ஓய்வு எடுத்துவிட்டு, நாளை புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்," என்று தெரிவித்துள்ளார்.

    இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    • உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
    • உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

    இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை நடைபெற இருக்கிறது.

    • ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை.
    • வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ஷபாஸ் அகமதுவும், ஷிவம் துபே இடத்தில் ஜிதேஷ் சர்மாவும் இடம் பெறலாம்.

    டூப்ளின்:

    ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (23-ந் தேதி) நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

    முதல் 2 ஆட்டத்தில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் பும்ரா வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ஷபாஸ் அகமதுவும், ஷிவம் துபே இடத்தில் ஜிதேஷ் சர்மாவும் இடம் பெறலாம்.

    பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங் ஆகியோரும், பந்து வீச்சில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பால் ஸ்டிரிங் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். இரு அணிகள் இடையே இதுவரை நடந்த 7 இருபது ஓவர் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    • உலக கோப்பை செஸ் போட்டிக்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
    • இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் விளையாட உள்ளனர்.

    உலக கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் மோதுகின்றனர். இந்த போட்டியை இந்திய மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கினறனர்.

    இந்நிலையில் பிரக்ஞானந்தா கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாட உறுதி செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் கேண்டிடேட் செஸ் போட்டியில் வெல்லும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனுடன் மோதும் வாய்ப்பை பிரக்ஞானந்தா பெறுவார்.

    • கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது.
    • லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.

    கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.

    • இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது.
    • எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஒரு அரை சதம் 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.


    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் காட்டுவேன்.

    என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற செய்தது என அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்,

    • இது ஓரளவு நல்ல அணியாகும்.
    • என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன்.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷிவம் துபேவை அணியில் சேர்த்திருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது ஓரளவு நல்ல அணியாகும். என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன். ஆனால் இதில் ஒரு லெக் ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும்.

    ஏனெனில் தற்சமயத்தில் இது அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணியாக தெரிகிறது. எனவே அதில் நீங்கள் ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்கலாம். தற்போது பிரசித் கிருஷ்ணா இருக்கும் பார்முக்கு நீங்கள் முகமது ஷமியை வெளியேற்றி விட்டு ஏதேனும் ஒரு லெக் ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம்.

    மேலும், அதே போல ஷிவம் துபே இருக்கும் பார்முக்கு அவரையும் நீங்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரரை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஷர்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்திக் 24-மாத காலத்தில் எந்தவிதமான குற்றங்களும் இல்லாமல் இருந்தார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சித்திக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடந்த கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டியில் யுஏஇ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் சித்திக் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும் மற்றும் இரண்டு குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

    நியூசிலாந்து இன்னிங்சின் 17-வது ஓவரில், மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிறகு, நடுவரை நோக்கி தகாத வார்த்தைகளால் சித்திக் கருத்து வேறுபாடு காட்டினார். இதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கள நடுவர்கள் அக்பர் அலி மற்றும் ஷிஜு சாம் மற்றும் மூன்றாவது நடுவர் ஆசிப் இக்பால் ஆகியோர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

    24-மாத காலத்தில் எந்தவிதமான குற்றங்களும் இல்லாமல் இருந்த சித்திக், தற்போது தனது சாதனையில் இரண்டு குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

    மூன்றாவது டி20 போட்டியில் சித்திக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 26 ரன்களை விட்டுகொடுத்திருந்தார்.

    • எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

    இதனையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார். அவர் டென்மார்க் வீரரான நிஷிமோட்டோவிடம் 14-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    ×