search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat"

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    • ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது.
    • ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் என்னால் வீழ்த்த முடியவில்லை.

    இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்துவேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடர் மற்றுமல்லாமல் மற்ற போட்டியிலும் விராட் கோலியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் உலக கோப்பையில் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. டி20 போட்டிகளில், நான் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு 1 ரன்களை வழங்க முயற்சிக்கிறேன். ஒரு ரன் எடுப்பதால் யாரும் திருப்தி அடைவதில்லை. 50 ஓவர்களில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். விக்கெட்டுகளைப் பெறுவதற்கு சில தந்திரங்களைச் செய்ய வேண்டும். பவர்பிளேயில் பந்துவீசுவது டெத் ஓவர்களில் பந்து வீசுவது வேறு விதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றி பெற்ற விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. #AUSvIND #ViratKholi
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தன. இந்தியா 2-வது இன்னிங்சில் 307 ரன் குவித்தது. 323 ரன் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 291 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் புஜாரா 194 ரன்னும் (123+71), ரகானே 83 ரன்னும் (70+13) எடுத்தனர். பும்ரா 6 விக்கெட்டும் (3+3), முகமது‌ஷமி 5 விக்கெட்டும் (2+3) கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 71 ஆண்டுகளில் (1971 முதல்) டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றது இல்லை. தற்போது முதல் டெஸ்டில் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைத்தது. கடைசியாக 2008-ல் வெற்றி பெற்றது.

    ஒட்டு மொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் 6-வது வெற்றியையும், அடிலெய்டு மைதானத்தில் 2-வது வெற்றியையும் பதிவு செய்தது.

    ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றி பெற்ற விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. அதன் விவரம்:-



    டெண்டுல்கர்: இந்திய அணி டெஸ்ட் தொடரை மிகவும் சிறப்பாக தொடங்கி இருந்தது. ஒரு போதும் அழுத்தத்தை விட்டு விடக் கூடாது. புஜாராவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு இன்னிங்சிலும் அற்புதமாக ஆடினார். ரகானேயும் 2-வது இன்னிங்சில் நன்றாக ‘பேட்டிங்’ செய்தார். 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். இதை பார்க்கும் போது 2003-ம் ஆண்டு நடந்த போட்டி நினைவுக்கு வந்தது.

    கங்குலி: அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றி மிகவும் சிறந்தது. உண்மையிலேயே நம்பத்தகுந்தது. இந்த டெஸ்ட் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் முடிவு ஏற்படும்.

    ஷேவாக்: டெஸ்ட் கிரிக்கெட் தான் சிறந்த (பெஸ்ட்) கிரிக்கெட். ஆஸ்திரேலிய அணி கடைசி கட்டத்தில் கடுமையாக போராடியது. ஆனால் இந்திய அணி அதை விட சிறப்பாக செயல்பட்டது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன் என்ற நிலையில் இருந்து இந்தியா பெற்ற வெற்றி இந்த சிறப்பானது. புஜாராவும், பந்து வீச்சாளர்களும் மிகவும் அபாரமாக செயல்பட்டனர்.

    இது சிறப்பு டெஸ்ட் தொடராக இருக்கும் என்பது உறுதி.

    வி.வி.எஸ். லட்சுமண்: ஆஸ்திரேலிய பின்கள வீரர்கள் இந்த டெஸ்டில் மிகவும் கடுமையாக போராடினார்கள். இந்திய பவுலர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. இதே திறமையுடன் 2-வது டெஸ்டில் விளையாட வேண்டும்.

    ஹர்ஷா போக்ளே (டெலிவிசன் வர்ணனையாளர், விமர்சகர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் வெற்றி பெறுவது அரிதானது. இந்த போட்டி கிரிக்கெட்டில் அற்புதமானவை. நீண்ட நாள் நினைவில் இருக்கும். கடினமான போட்டிகள் எப்போதுமே மறக்க முடியாததாக இருக்கும்.

    இதேபோல் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், வார்னே, மிச்சேல் ஜான்சன் ஆகியோரும் இந்திய அணியை பாராட்டி உள்ளனர். #AUSvIND #ViratKholi
    சாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
    புதுடெல்லி:

    ஆடம்பர காரில் இருந்தவாறே, மும்பை சாலை ஒன்றில் குப்பை கொட்டியவரை நடிகை அனுஷ்கா சர்மா கண்டித்த காட்சி, சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. அக்காட்சியை அவருடைய கணவரும், கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி படம் பிடித்து வெளியிட்டு இருந்தார்.



    இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “அனுஷ்கா, விராட்கோலி ஆகியோருக்கு விளம்பரம் தேவை என்றாலும், நல்ல காரியத்தை செய்துள்ளனர். நமது நடத்தையே நமது மனநிலையை பிரதிபலிக்கிறது. தூய்மை உணர்வு, ஒரு சமூக நற்பண்பு. இத்தகைய நற்பண்புகள், பணத்தாலோ, கல்வியாலோ வருவது இல்லை. இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்” என்று கூறியுள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
    ×